மத்திய பட்ஜெட்டில் LJKவின் திட்டம்
மகளிர் தொழில் மேம்பாட்டிற்காக SHE MART எனும் திட்டம் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது ஏற்கனவே LJK வின் தேர்தல் வாக்குறுதியான தர்மாம்பாள் வாழ்வியல் மேம்பாட்டுத்திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுவை பெண்ணகளின் வாழ்வின் வளர்ச்சிக்கு தர்மாம்பாள் வாழ்வியல் மேம்பாட்டு
திட்டத்தின் கீழ் பல ஆக்கப்பூர்வமான திட்டங்களை தனது தேர்தல் அறிக்கையில்
LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அறிவித்திருந்தார்.
அதில், புதுவை பெருமை என்ற திட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இத்திட்டத்தின் படி சுய உதவிக் குழு பெண்கள் தயாரிக்கும் பொருட்களை உலக அளவில் விற்பனை செய்ய தனி இ-காமர்ஸ் அமைக்கப்படும். மேலும் சுற்றுலாவாசிகள் வரும் இடங்களில் SHEMART அமைக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று தாக்கலான 2026-2027 -க்கான மத்திய பட்ஜெட்டில் மகளிர் வழி நடத்தும் நிறுவனங்களை ஊக்குவிக்க SHE- மார்ட் சில்லறை வியாபார கடைகள் அமைக்கப்படும்.
She என்ற பெயரில் பெண் தொழில்முனைவோருக்கு புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, LJK வின் திட்டம் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருப்பது பெண்களுக்கு மகிழ்சியளிக்கும் அளிக்கும் வகையில் புதுவைக்கும் பெருமையளிக்கும் வகையிலும் உள்ளது,

