மத்திய பிரதேச அரசு மருத்துவமனையில் பெரும் அதிர்ச்சி: தலசீமியா சிகிச்சை பெற்ற 6 குழந்தைகளுக்கு HIV தொற்று
மத்திய பிரதேசம் : மத்திய பிரதேசத்தில் தலசீமியா நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த குழந்தைகளுக்கு தவறுதலாக HIV தொற்று உள்ள ரத்தம் செலுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சத்னா மாவட்ட அரசு மருத்துவமனையில் நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மருத்துவமனையில் தலசீமியா சிகிச்சையில் இருந்த 6 குழந்தைகளுக்கு HIV தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, லேபரட்டரி பொறுப்பாளர் உள்ளிட்ட 4 பேரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து மத்திய பிரதேச அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த, அரசு விசாரணைக் குழுவை அமைத்துள்ளதாகவும், குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பையும், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

