புடின் வீடு மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் முயற்சி ? – ரஷ்யா பரபரப்பு குற்றச்சாட்டு
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வசிப்பிடத்தை இலக்காகக் கொண்டு உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்த முயன்றதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்த தாக்குதல் முயற்சியில் உக்ரைன் தரப்பில் இருந்து 91 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட இருந்ததாகவும், அவற்றை ரஷ்யாவின் வான் பாதுகாப்புப் படை முற்றிலும் அழித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். தாக்குதல் முயற்சி தோல்வியடைந்ததால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் ரஷ்யாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், உக்ரைன் அரசு இந்த குற்றச்சாட்டுகளை முற்றாக மறுத்துள்ளது. புடின் வீடு மீது எந்தவிதமான ட்ரோன் தாக்குதலும் நடத்தப்படவில்லை என உக்ரைன் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்நிலையில், ரஷ்யா–உக்ரைன் மோதல் மேலும் தீவிரமடைந்து வரும் சூழலில், இத்தகைய குற்றச்சாட்டுகள் இருநாடுகளுக்கிடையிலான பதற்றத்தை அதிகரிக்கச் செய்யும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

