சென்னையில் தங்கம், வெள்ளி விலை உயர்வு
சென்னை:
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,02,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், தங்கத்தின் கிராம் விலை ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,800க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் உயர்வடைந்துள்ளது. கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.244க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் டாலர் மதிப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக தங்கம், வெள்ளி விலைகள் உயர்ந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

