வாகன சோதனையில் ஈடுபட்ட பெண் போலீஸை ஆட்டோவில் கடத்த முயற்சி – மயிலாப்பூரில் பரபரப்பு
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் அருகே, நேற்று முன்தினம் பெண் போலீஸ் ஒருவர் வாகன சோதனை பணியில் ஈடுபட்டிருந்தார். அந்த நேரத்தில், ஒருவழிப் பாதையில் இருந்து வேகமாக வந்த ஒரு ஆட்டோவை அவர் நிறுத்த முயன்றார்.
ஆட்டோவை ஓட்டிய நபர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. முதலில் வாகனத்தை நிறுத்துவது போல நடித்து, திடீரென பெண் போலீஸை கட்டிப்பிடித்து ஆட்டோவில் ஏற்றி கடத்த முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண் போலீஸ் கூச்சலிட்டதையடுத்து, அருகில் இருந்த பொதுமக்கள் வேகமாக செயல்பட்டு அந்த ஆட்டோவை வழிமறித்தனர். அதன் பின்னர் பெண் போலீஸ் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
குடிபோதையில் இருந்த ஆட்டோ ஓட்டுநரை மயிலாப்பூர் போலீசார் கைது செய்து, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

