Gen Z இளைஞர்கள் அமைதியானவர்கள் அல்ல; மாற்றத்தை உருவாக்கப் போகும் சக்தி அவர்களே – த.வெ.க தலைவர் விஜய்
காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றி, இன்றைய Gen Z இளைஞர்கள் தமிழக அரசியலை வடிவமைக்கும் முக்கிய சக்தி உள்ளவர்கள் என்று கூறியுள்ளார் . கூட்டத்தில் மக்கள் பங்கேற்று உற்சாகக் குரல்களில் அவரை வரவேற்றனர்.
Gen Z kids தற்குறிகள் அல்ல, ஆச்சரிய குறி. உங்கள் அரசியலை மாற்றப் போகும் ஆச்சரிய குறி அவர்கள்தான், என்று விஜய் உரையின் தொடக்கம் முதலே இளைஞர்களை நோக்கி திறம்படப் பேசினார்.
அதேவேளை, தற்போதைய ஆட்சியையும் அவர் நேரடியாக விமர்சித்தார்.
“மக்களை பொய் சொல்லி ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுகவை எப்படி கேள்வி கேட்காமல் இருக்க முடியும்?” என்று விஜய் கேள்வி எழுப்பினார். பொது நலன், வெளிப்படைத்தன்மை, பொறுப்பு ஆகியவற்றில் ஆட்சி செயல்படவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
விஜய் மேலும் தீவிரமான வார்த்தைகளில், “நடிப்பவர்களையும் நாடகம் ஆடுபவர்களையும் கேள்வி கேட்காமல் விடப்போவதில்லை”. இன்னும் அடிக்கவே ஆரம்பிக்கல… அதுக்குள்ள அலறினால் எப்படி?” எனச் சொல்லி, அரசியல் மேடையில் தன்னை விமர்சிப்போரை மறைமுகமாக சுட்டிக்காட்டினார்.
இந்த உரை முழுவதும், இளைஞர்களின் பங்கும், அவர்களின் விழிப்புணர்வும் தமிழக அரசியலில் எவ்வளவு முக்கியமென்பதை விஜய் தெளிவாக எடுத்துரைத்தார்.
காஞ்சிபுரத்தில் நடந்த இந்தப் பெரிய பொதுக்கூட்ட உரை, வரவிருக்கும் தேர்தலில் த.வெ.க. அணுகுமுறையும், இளைஞர் வாக்காளர்கள் மீது விஜய் உருவாக்கும் தாக்கத்தையும் தெளிவாக காட்டும் வகையில் இருந்தது..

