பட்டா கத்தியுடன் மசூதிக்குள் புகுந்த நபர் – உத்திரமேரூரில் பரபரப்பு
உத்திரமேரூரில் மசூதிக்குள் பட்டா கத்தியுடன் புகுந்து நிர்வாகிகளை வெட்ட முயன்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் மிகவும் பழமையான பிரசித்தி பெற்ற ஜும்மா மசூதி உள்ளது. இந்த மசூதியில் உத்திரமேரூர் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில், ஜாகிர் உசேன் என்பவர், திடீரென மசூதிக்குள் புகுந்து அங்கு இருந்த நிர்வாகிகளை பட்டா கத்தியால் தாக்க முயன்றுள்ளார்.
மசூதி நிர்வாகம் தனக்கு எந்த ஒரு பொறுப்பும் வழங்காத ஆத்திரத்தில் அவர் இவ்வாறு நடந்துகொண்டதும், ஏற்கனவே இதேபோல் பலமுறை தகராறில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக மசூதி நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், தப்பியோடிய ஜாகிர் உசேனை போலீசார் தேடி வருகின்றனர்.

