புதுவை வில்லியனூர் பகுதியில் கழிவுநீர் தேக்கம் – LJK தலைவர் அதிரடி ஆய்வு
புதுவை வில்லியனூர் பகுதி சுற்றுவட்டாரங்களில் நிலவி வரும் கழிவுநீர் தேக்கம் காரணமாக மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை அறிந்து கொள்ள, லட்சிய ஜனநாயக கட்சியின் நிறுவனர் ஜோஸ் சார்லஸ் மார்டின் கள ஆய்வு மேற்கொண்டார்.
வீடுகளுக்கு அருகே நீர் தேங்கியுள்ளதால் நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக குடியிருப்பாளர்கள் கவலை தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, கால்வாய் சீரமைப்பு, கழிவுகள் அகற்றம், கொசு ஒழிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட துறையினரிடம் வலியுறுத்தப்பட்டது.
மக்களின் வாழ்வாதார பாதுகாப்பு அரசின் முதன்மை பொறுப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த நிகழ்வின்போது கட்சி நிர்வாகிகள் மற்றும் பகுதி மக்கள் உடன் இருந்தனர்.

