MGR | எம்ஜிஆர் நினைவு தினம்: மெரினாவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் மரியாதை
சென்னை: முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினாவில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வில், எம்ஜிஆரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய அதிமுகவினர், அவரது கொள்கைகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதில் முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

