PAN-ஆதார் இணைப்புக்கு இன்றே கடைசி நாள் – வருமான வரித் துறை எச்சரிக்கை
PAN எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே (31.12.25) கடைசி நாள் என வருமான வரித் துறை அறிவித்துள்ளது.
இதுவரை PAN-ஆதார் இணைப்பை மேற்கொள்ளாதவர்கள், இன்றைக்குள் ரூ.1,000 தாமதக் கட்டணம் செலுத்தி ஆதார் எண்ணை PAN எண்ணுடன் இணைக்க வேண்டும் என வருமான வரித் துறை அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் PAN-ஆதார் இணைப்பை செய்யத் தவறினால், PAN எண் செல்லாது (Inactive) என அறிவிக்கப்படும் என்றும், இதனால் வருமான வரி தொடர்பான சேவைகள், வங்கி பரிவர்த்தனைகள் உள்ளிட்ட பல்வேறு நிதி நடவடிக்கைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் வருமான வரித் துறை எச்சரித்துள்ளது.
எனவே பொதுமக்கள் கடைசி நாளை தவறவிடாமல் உடனடியாக PAN-ஆதார் இணைப்பை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

