சேதமடைந்த சமூகநலக்கூடம் – நேரில் பார்வையிட்ட JCM மக்கள் மன்ற நிர்வாகிகள்
திருநள்ளாறு தொகுதிக்குட்பட்ட இளையங்குடி கிராமத்தில் சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களின் அறிவுறுத்தலின்படி அப்பகுதியில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த JCM மக்கள் மன்ற நிர்வாகிகள். இளையங்குடி பகுதியில் சமுதாய நலக்கூடம் மிக மோசமான நிலையில் உள்ளது. அங்கு வசிக்கும் மக்களுக்கு ஆபத்து ஏற்படும் விதத்தில் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது.

எனவே அப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் சார்பில் திருநள்ளாறு தொகுதி JCM மக்கள் மன்றத் தலைவர் GV பிரபாகரன் நிர்வாகிகளுடன் இணைந்து மாவட்ட ஆட்சியருக்கு காணொலி வாயிலாக கோரிக்கை விடுத்தனர்.

