சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைப்பயண பேரணி!

காரைக்காலில் விநாயக மிஷன் மருத்துவக் கல்லூரி சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைப்பயண பேரணி. ஏராளமான மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு.

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் விநாயக மிஷன் மருத்துவக் கல்லூரி சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மருத்துவ கல்லூரி, செவிலியர் கல்லூரி, அலைடு சைன்ஸ் மாணவர்கள் மாணவ மாணவியர்கள் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நடைப்பயண பேரணியை மருத்துவ கல்லூரியின் தீன் சேரன், உதவி தீன்கள் விஜயகுமார் நாயர், திருமாறான்,உடற் கல்வி இயக்குனர் ஆனந்த் ஆகியோர் கொடியசைத்து துவங்கி வைத்தனர். இந்த நடைப்பயண பேரணியானது காரைக்கால் பாரதியார் வீதியில் உள்ள விநாயக மிஷன் நகர்ப்புற சுகாதார மையத்திலிருந்து தொடங்கி முக்கிய சாலைகள் வழியாக 5 கிலோமீட்டர் வரை சென்று கீழக்காசாக்குடி மேட்டில் உள்ள மருத்துவ கல்லூரி வளாகத்தை சென்றடைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *