“தல வாழ்க! தளபதி வாழ்க!” என முழங்கிய த.வெ.க. தொண்டர்கள்!
அஜித் – விஜய் ஒன்றிணைந்த பேனருடன் புதுவையில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கு வந்து கலந்துகொண்ட த.வெ.க. தொண்டர்கள். புதுச்சேரியில் இன்று தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றினார்.
இதனை கேட்பதற்காக புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான தமிழக வெற்றி கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அஜித் ரசிகர்களும் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் விஜயும் அஜித்தும் தோல் மீது கை போட்டு நிற்பது போன்ற பேனர்களை வைத்து படி கூட்டத்தில் பங்கேற்றனர். அப்போது அவர்கள் தல வாழ்க தளபதி வாழ்க என கோஷமிட்டபடி கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஏ.கே என்ற பேனருடன் கலந்து கொண்ட அஜித் ரசிகர்களின் வீடியோ தற்போது இணையத்திலும் வைரலாகி வருகிறது.

