த.வெ.க. கூட்டம் – தயார் நிலையில் புதுவை!
புதுவையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரப்புரை கூட்டம் காவல்துறையின் கடுமையான நிபந்தனைகளுடன் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க அனுமதி இல்லை எனவும் புதுவையை சேர்ந்த 5000 பேருக்கு மட்டுமே அனுமதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். முன்னதாக தமிழக வெற்றி கழக கூட்டத்திற்கு பல்வேறு நிபந்தனைகளை காவல்துறை அறிவித்திருந்தது.

