த.வெ.க. கார் மீது விழுந்த தகரம், பேனர்களால் பரபரப்பு!
புதுச்சேரி துறைமுக மைதானத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொண்ட பரப்பரை கூட்டம் நடைபெற்றது. மைதானத்தில் கூட்டத்திற்காக தொண்டர்கள் செல்லும் பாதையில் இருபுறமும் தகரம் கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டு பேனர்கள் கட்டப்பட்டிருந்தன.
கூட்டம் முடிந்த பிறகு காற்றின் வேகம் அதிகமாக இருந்ததன் காரணமாக தகர தடுப்புகள், பேனர்கள் சாய்ந்து விழுந்தன. அப்போது கூட்டம் முடிந்து மைதானத்திலிருந்து செவிலியர்கள் சென்ற காரின் மீது பேனர்கள் விழுந்ததையடுத்து அங்கிருந்தவர்கள் பேனர்கள், தடுப்புகளை தூக்கி அப்புறபடுத்தி காரை வெளியே எடுத்து சென்றனர்.

