நல்லவாடு ஸ்ரீ தில்லை அம்மன் கோவிலில் மாசி மகம் விழா — LJK தலைவர் நன்கொடை
மணவெளி தொகுதி நல்லவாடு ஸ்ரீ தில்லை அம்மன் கோவிலில் நடைபெற்ற மாசி மக கடல் தீர்த்தவாரி விழாவில் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
பின்னர், கோவில் நிர்வாகிகளிடம் ரூ.1,00,000 (ஒரு லட்சம் ரூபாய்) நன்கொடையாக வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மண்டல பொதுச் செயலாளர் சுரேஷ் மற்றும் கோயில் நிர்வாகிகள் பொதுமக்கள் உடனிருந்தனர்.
முன்னதாக, குழந்தைகள் பூங்கொத்து வழங்கி அவரை உற்சாகமாக வரவேற்றனர்.
விழாவில் கட்சி நிர்வாகிகள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

