புதுச்சேரி முத்தியால்பேட்டையில் லட்சிய ஜனநாயக கட்சியின் வாக்குறுதி விளக்கக் கூட்டம்
புதுச்சேரி லட்சிய ஜனநாயக கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் தீர்மானங்களை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில், புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டை தொகுதியில் விளக்கவுரை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பெருமளவில் மகளிர் மற்றும் சுயஉதவி குழு பெண்கள் கலந்து கொண்டு, கட்சியின் இலட்சியங்கள் மற்றும் பெண் இலட்சியத் தலைவர்களின் பெயரில் அறிவிக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து விரிவான விளக்கங்களை கவனத்துடன் கேட்டனர். விளக்க உரை நிகழ்ச்சியில் பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்று, கட்சியின் செயல்பாடுகளை பாராட்டினர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட மகளிர், லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் திரு ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அவர்களின் சமூக நோக்குள்ள அரசியல் அணுகுமுறையைப் பாராட்டி கருத்துகளை தெரிவித்தனர்.
இந்த விளக்கவுரை கூட்டத்தை JCM மக்கள் மன்ற முத்தியால்பேட்டை தொகுதி தலைவர் திருமதி அனிதா அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்ச்சி அமைதியான முறையில் நடைபெற்று, பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

