புதுவைக்கு வருகிறார் விஜய்: வெற்றிக் கழகத்தின் சுற்றுப்பயணத்துக்கான அனுமதி கோரி விண்ணப்பம்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வரும் டிசம்பர் 5ஆம் தேதி புதுவையில் மக்களைச் சந்திக்கும் வகையில் விரிவான சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.
சாலை வழியாக மேற்கொள்ளப்படும் இந்த பயணம் காலாப்பட்டு பகுதியில் தொடங்கி, அஜந்தா சிக்னல், உப்பளம் வாட்டர் டேங்க், மரப்பாலம், அரியாங்குப்பம், தவளகுப்பம், கிருமாம்பாக்கம், கன்னியக்கோவில் உள்ளிட்ட பகுதிகளை ஊடறுத்துச் செல்லும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பயணத்தின் போது விஜய் மக்களுடன் நேரடியாக சந்தித்து உரையாடுவதோடு, தேவையான இடங்களில் ஒலிப் பெருக்கி மூலம் பேச்சு நிகழ்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக வெற்றிக் கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், சுற்றுப்பயணத்தின் போது பொதுமக்கள் அதிக அளவில் திரள வாய்ப்பு உள்ளதால், நிகழ்ச்சி சீராக நடைபெற தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள், போலீஸ் படையணிகள், போக்குவரத்து வழிசெய்தல், ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கான அனுமதி உள்ளிட்ட அனைத்திற்கும் புதுவை காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் வெற்றிக் கழக உறுப்பினர்கள் அதிகாரப்பூர்வமாக கடிதம் சமர்ப்பித்து உள்ளனர்.
வெற்றிக் கழகத்தின் புதுவை சுற்றுப்பயணம் குறித்து அங்குள்ள பொதுமக்களும், ரசிகர்களும் அதிக ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

