மக்கள் முன்னேற்ற கழக மீனவர் அணி கூட்டம்

புதுவை மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில மீனவர் அணி ஆலோசனைக் கூட்டம், அணி தலைவர் இதயச்சந்திரன் தலைமையில் கிழக்கு மாவட்ட தலைவர் ஜி. சி சந்திரன் மற்றும் கட்சியின் துணைத் தலைவர் நித்தியானந்தம் முன்னிலையில் மில்லினியம் வீதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் புதுவை அரசு மீனவர்களுக்கான இ.பி.சி இட ஒதுக்கீட்டை இரண்டு சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், காலாப்பட்டு சாசன் கம்பெனியின் கடலில் உள்ள கழிவுநீர் குழாய் குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் குழாய்களை வெளியே எடுக்க உத்தரவு பிறப்பித்து ஓராண்டு காலம் நிறைவடைந்து, நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. சென்னை பசுமை தீர்ப்பாய உத்தரவின் படி வலை இழந்த மீனவர்களுக்கு இழப்பீடு வழங்காமலும், குழாய்களை வெளியே எடுத்து நடவடிக்கை எடுக்காமலும் உத்தரவை அவமதித்து வரும் சாசன் கம்பெனி நிர்வாகத்திற்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும், சுற்றுச்சூழல் துறைக்கும், கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இனியும் காலம் கடத்தும் பட்சத்தில் புதுவை மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மீனவர் அணி சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேலும் ஒரு அவமதிப்பு வழக்கு தொடர்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *