LJK சார்பில் சுனாமி நினைவுதின அஞ்சலி: 21ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்
21ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு, 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களுக்கு லட்சிய ஜனநாயக கட்சி (LJK) சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தலைமையில், கட்சியின் நிர்வாகிகள் புதுச்சேரி வீராம்பட்டினம் கடற்கரையில் அமைந்துள்ள சுனாமி நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வில், சுனாமியில் உயிரிழந்தவர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்து, அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும், இவ்வகையான பேரழிவுகள் மீண்டும் நிகழாத வகையில் விழிப்புணர்வும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் அவசியம் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

