காதலிக்க மறுத்த பெண் – பெட்ரோல் ஊற்றி கொளுத்திய – பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

காதலிக்க மறுத்த பெண்ணை ஒருதலை காதலன் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய விவகாரம் – 85 சதவீத தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

புதுச்சேரி, நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஷர்மிளா இவர் தனியார் ஜவுளி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரை புதுச்சேரி, வாணாரப்பேட்டை,இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த ஜோசப் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.ஜோசப்பிற்க்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அவர் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் தான் ஜோசப் ஷர்மிளாவை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், கடந்த ஒரு மாதமாக ஷர்மிளாவை தினம்தோறும் அவர் செல்லும் இடங்களில் பின்தொடர்ந்து சென்று காதலிக்குமாறும்,
தன்னிடம் பேசுமாறு ஜோசப் அவரை வற்புறுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஷர்மிளா பெரிய கடை காவல் நிலையம் மற்றும் ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், ஷர்மிளா நேற்று இரவு 9 மணி அளவில் வழக்கம் போல் அண்ணா சாலையில் இயங்கி வரும் தனியார் ஜவுளி நிறுவனத்தில் தனது பணியை முடித்துவிட்டு இரவு அண்ணா சிலை அருகே உள்ள உழவர் சந்தை வழியாக வீடு திரும்பிய பொழுது அங்கு ஜோசப் பெட்ரோல் உடன் காத்திருந்துள்ளார். இதனிடையே அங்கு வந்த ஷர்மிளாவிடம் மீண்டும் தன்னை காதலிக்குமாறும் தன்னிடம் பேசும் மாறும் வற்புறுத்தியுள்ளார்.

இதில் இருவருக்கும் வாய் தகறாரு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த ஜோசப் தன் கையில் கொண்டு வந்த பெட்ரோலை அந்த பெண்ணின் மீது ஊற்றி தீயிட்டு கொளுத்தியுள்ளார். இதில் தீமளவென பரவி உடல் முழுவதும் எறிந்த நிலையில் ஷர்மிளா 100 அடி தூரத்திற்கு ஓடி சென்று கீழே விழுந்துள்ளார். இந்நிலையில் உடல் முழுவதும் எரிந்து 85℅சதவிகிதம் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய சர்மிளாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தினர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 15 மணி நேரம் கடந்த பிறகு சிகிச்சை பலனின்றி பெண் உயிரிழந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *