புதுச்சேரி என்னுடைய வீடு – PUDHUCHERRY OUTLOOK CONCLAVE நிகழ்ச்சியில் கிரண்பேடி
புதுச்சேரி என்னுடைய வீடு, என்னுடைய மிக நெருங்கிய நண்பர்கள் இங்கு உள்ளனர். தேவ நீதிதாஸ் தான் என்னுடைய வலது கை. மிகவும் நம்பகத்தன்மை உடையவர் தேவநீதி தாஸ்.
புதுச்சேரி ஏன் யூனியன் பிரதேசம் என்பதை வரலாறு சொல்லும். நில பரப்பு, பொருளாதாரம், கலாச்சாரம், வரலாறு ஆகியவை புதுச்சேரியை இன்னமும் யூனியன் பிரதேசமாக வைத்துள்ளது.
மத்திய அரசிடம் இருந்து போதுமான நிதி வருகிறது. புதுச்சேரியில் உள்ள ஒவ்வொரு இளைஞரும், இளம் பெண்களும் தொழில் முனைவோராக, வேலைவாய்ப்பு உள்ளவராக மாறினால், புதுச்சேரி பணக்கார மாநிலமாக மாறும். மத்திய அரசுக்கு புதுச்சேரி நிதி வழங்கும்.

