புதுச்சேரி லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் காமராஜர் நகர் தொகுதியில் கிறிஸ்துமஸ்-புத்தாண்டு வாழ்த்துகள்
புதுச்சேரி: புதுச்சேரி லட்சிய ஜனநாயக கட்சி சார்பில், கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டை முன்னிட்டு, காமராஜர் நகர் தொகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வீடு வீடாகச் சென்று கேக் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி, அக்கட்சியின் தலைவர் திரு. ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அவர்களின் சார்பில் நடத்தப்பட்டது. காமராஜர் நகர் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பொதுமக்களுக்கு கேக் வழங்கி, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளை கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வுக்கு, காமராஜர் நகர் தொகுதி தலைவர் டி. விஜயராஜ் தலைமையிலான அணியினர் முன்னிலை வகித்தனர். மேலும், தொகுதி நிர்வாகிகள் கோபி, ரமேஷ் மற்றும் மாநில செயலாளர் ரவி ராஜாராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

