புதுவையில் போராடும் ஆசிரியர்களுக்கு LJK ஆதரவு
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவையில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஆசிரியர்களை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்த LJK பொதுச்செயலாளர் டாக்டர் துரைசாமி, போராட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவித்தார்.
ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் எனவும், இல்லையெனில் போராட்டம் மேலும் தீவிரமடையும் என்றும் அவர் தெரிவித்தார்.

