மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் மாபெரும் அமைதி பேரணி – 3000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் நிறுவனத்தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தலைமையில் மாபெரும் அமைதி பேரணி நடைபெற்று வருகிறது.
காமராஜ் நகர் தொகுதிக்குட்பட்ட ரெயின்போ நகர் பூங்காவில் இருந்து தொடங்கிய பேரணியில் சட்டமன்ற உறுப்பினர்கள் அங்காளன், சிவசங்கர், JCM மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார், பொதுச்செயலாளர்கள் டாக்டர் துரைசாமி, பூக்கடை ரமேஷ், பிரபாகரன், மண்டல பொதுச்செயலாளர்கள் முனைவர் கண்ணபிரான், சுரேஷ், ராபர்ட் ஜேசுதாஸ், விஜய்ராஜ், JCM மக்கள் மன்ற பொருளாளர் அயூப் கான், மகளிர் அணி தலைவி பிரபாதேவி உள்ளிட்ட மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் 3000க்கும் மேற்பட்ட பொதுமக்கள், நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
1965-ல் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட இந்தி திணிப்பு நடவடிக்கையை எதிர்த்து, தமிழ் மொழியை காக்க உயிர் நீத்த தியாகிகளின் நினைவாக அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் இந்த அமைதி பேரணி நடைபெற்று வருகிறது.

