40 ஆண்டுகள் பின்னர் கிளிஞ்சல்மேடு ஸ்ரீ எல்லையம்மன் ஆலயத்தில் தேர் திருவிழா

காரைக்கால் அருகே கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ எல்லையம்மன் ஆலயத்தில், 40 ஆண்டுகளுக்கு பின் தேர் திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
1976 ஆம் ஆண்டிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த தேர் திருவிழாவை மீண்டும் நடத்தும் நோக்கில், ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய தேர் தயாரிக்கப்பட்டது. பணி முடிவடைந்ததைத் தொடர்ந்து, இன்று ஸ்ரீ எல்லையம்மன் புதிய தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் ஏராளமான மீனவ மக்கள் “ஓம் சக்தி! ஓம் சக்தி!” என கோஷமிட்டபடி புதிய தேரை வடம் பிடித்து இழுத்து, பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.
மேலும் மீனவ பெண்கள் தங்களின் ஆனந்தத்தை வெளிப்படுத்தும் விதமாக தேரின் முன்பாக கோலாட்டம் ஆடி மகிழ்ச்சியை பகிர்ந்தனர்.
இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்பாளை தரிசனம்