JCM மக்கள் மன்றத்தின் 16வது கிளை புதுவை நெல்லித்தோப்பில் திறப்பு!
புதுவையில் JCM மக்கள் மன்றத்தின் 16வது கிளை நெல்லித்தோப்பில் திறக்கப்பட்டது. லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் JCM மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றினார்.

மேலும், நெல்லித்தோப்பு JCM மக்கள் மன்ற கிளை தலைவர் விஜய்ராஜ் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

JCM மக்கள் மன்ற அலுவலக திறப்பு விழாவுக்கு வருகை தந்த லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினுக்கு மன்ற நிர்வாகிகள் மற்றும் லட்சிய ஜனநாயக கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முன்னதாக நெல்லித்தோப்பில் உள்ள பெரிய பாளையத்தம்மன் கோவிலில் லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் சாமி தரிசனம் செய்தார்.

