பாரம்பரிய உடையில் பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டினர்
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பாரத் நிவாஸில் நேற்று பொங்கல் பண்டிகை மற்றும் மார்கழி மாதத்தின் 30-வது நாள் நிறைவு விழா மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.
விழாவின் தொடக்கமாக இசை அம்பலம் பள்ளி மாணவர்களின் வீரமிக்க சிலம்பாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், ஆரோவில்லைச் சேர்ந்த டாலியா ஸ்ரீ என்ற சிறுமி ஆண்டாள் வேடமணிந்து திருப்பாவை பாடலுக்கு நடனமாடியது அனைவரையும் கவர்ந்தது.
விழாவில் ஆரோவில் அறக்கட்டளையின் செயலரும், குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலருமான டாக்டர் ஜெயந்தி எஸ்.ரவி I.A.S , ஆரோவில் அறக்கட்டளையின் சிறப்பு பணி அதிகாரி (OSD) டாக்டர் ஜி.சீதாராமன்ட உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். உடன் , ஆரோவில் வாசிகள், வெளிநாட்டினர், ஆரோசில் அறக்கட்டளை ஊழியர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு நடனமாடி உற்சாகமாக கொண்டாடினர்.

