மோசமான நிலையில் தனியார் பள்ளி! மழைநீரும் கழிவுநீரும் கலந்தோடும் அவலம்!
புதுச்சேரியில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தனியார் பள்ளிகளில் ஆய்வு ஏதும் மேற்கொள்ளாததால் மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் இயங்கி வரும் ஒரு தனியார் பள்ளியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

இங்கு மழைநீர் தேங்கி நிற்பதால் பள்ளியின் அருகில் வெளியேறும் கழிவுநீர் மழை நீருடன் கலந்து மாணவர்கள் அதன் மேல் நடந்து செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பெருமளவு கொசுக்கள் உற்பத்தியாகி அங்கு பயிலும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அவ்வப்போது உடல்நிலை குறைபாடு ஏற்படுகிறது. எனவே பள்ளிக் கல்வித்துறையின் அதிகாரிகள் தனியார் பள்ளிகளில் ஆய்வு செய்து சுகாதார சூழலை உறுதிப்படுத்த வேண்டும் என்பதே மாணவர்களின் பெற்றோர்களுடைய கோரிக்கையாக உள்ளது.

