இலங்கைக்கு எதிரான 5வது டி20 போட்டியிலும் இந்திய மகளிரணி வெற்றி – தொடரை முழுமையாக கைப்பற்றியது
இலங்கைக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியிலும் இந்திய மகளிரணி வெற்றி பெற்று, தொடரை முழுமையாக கைப்பற்றியது.
இந்தப் போட்டியில் இந்திய அணித் தலைவர் ஹர்மன்ப்ரீத் கவுர் அரை சதம் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அவரது சிறப்பான ஆட்டத்துக்காக அவர் ஆட்ட நாயகி விருதைப் பெற்றார்.
மேலும், தொடரில் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக, தொடர் நாயகி விருது அவருக்கு வழங்கப்பட்டது.
இதன் மூலம், இந்திய மகளிரணி இதற்கு முன் 2019ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணியையும், 2024ஆம் ஆண்டு வங்கதேச அணியையும் டி20 தொடரில் முழுமையாக (ஒயிட்வாஷ்) தோற்கடித்திருந்த நிலையில், தற்போது இலங்கையையும் அதேபோல் தோற்கடித்து தனது சாதனைப் பட்டியலில் இன்னொரு முக்கிய வெற்றியைச் சேர்த்துள்ளது

