இன்ஸ்டாகிராமிலும் உச்சத்தை தொட்ட தவெக தலைவர்! – அரசியல்வாதிகளில் விஜய் முதலிடம்

சமூக வலைதளங்களில் அதிக பின் தொடர்பவர்களை கொண்ட தமிழக அரசியல்வாதியாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உள்ளார்.
இன்றைய கணினி யுகத்தில் சமூக வலைதளங்களை பயன்படுத்தாமல் இருப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவிற்கு, பொதுமக்களின் அங்கமாக சமூக வலைதளங்கள் மாறிவிட்டன. தூங்கி விழிப்பதில் தொடங்கி, தூக்கம் தொலைக்கும் ஒரு கருவியாக மனித வாழ்வை ஆக்கிரமித்துவிட்டன.
குறிப்பாக சமூக வலைங்களில் திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், நட்சத்திரங்கள் தொடங்கி எளிய ஜனங்கள் முதற்கொண்டு சமூக வலைதளங்களில் தங்களது செயல்பாடுகளை வெளிப்படுத்தியும், உணர்வுகளை பகிர்ந்துகொண்டும், கருத்துகளை பரிமாற்றம் செய்தும் வருகின்றனர்.
இந்த சூழலில், தமிழக அரசியல்வாதிகளை அதிகம் பின் தொடர்வோர் எண்ணிக்கையில், தவெக தலைவர் விஜய் முதலிடத்தில் உள்ளார். விஜய்யின் சமூகவலைதளமான இன்ஸ்டகிராமில் 1.46 கோடி பேர்களும், ஃபேஸ்புக்கில் 77 லட்சம் பேர்களும், எக்ஸ் தளத்தில் 55 லட்சம் பேர்களும் பின் தொடர்கின்றானர்.
விஜய்யை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இன்ஸ்டகிராமில் 18 லட்சம் பேரும், ஃபேஸ்புக்கில் 31 லட்சம் பேரும் எக்ஸ் தளத்தில் 40 லட்சம் பேரும் பின் தொடர்கின்றானர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இன்ஸ்டகிராமில் 63 ஆயிரம் பேரும், ஃபேஸ்புக்கில் 1.68 லட்சம் பேரும், எக்ஸ் தளாத்தில் 6.55 லட்சம் பேரும் பின் தொடர்கின்றனர்.
இவர்களின் வரிசையில் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இன்ஸ்டகிராமில் 15 லட்சம் பேரும், ஃபேஸ்புக்கில் 5 லட்சம் பேரும், எக்ஸ் தளத்தில் 10 லட்சம் பேரும் பின் தொடர்கின்றனர்.
அதேபோல், தமிழ் திரை நட்சத்திரங்களில் அதிக நபர்கள் பின் தொடர்பவர்களிலும் விஜய்தான் முதலிடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவருக்கு அடுத்தபடியாக, சிம்பு 14.5 லட்சம் நபர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள்.