பிரசார அட்டவணையில் திடீர் மாற்றம்! – தவெக தலைவர் விஜய் அதிரடி முடிவு

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தான் மேற்கொள்ளும் மக்களை நேரடியாக சந்திக்கும் பிரசார சுற்றுப்பயண அட்டவணையில் சில மாற்றங்களை செய்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்’ என்ற பெயரில் தமது முதல் சுற்றுப்பயணத்தை கடந்த 13ஆம் தேதி சனிக்கிழமை அன்று தொடங்குகினார். தொடர்ந்து டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மக்கள் சந்திப்பு கூட்ட பிரச்சாரங்களை நடத்த திட்டமிடப்பட்டது.

ஆனால், விஜய்யின் பிரசாரத்தின்போது திருச்சியிலும், அரியலூரிலும் ஏராளமான ரசிகர்களும், தொண்டர்களும் வழிநெடுக குவிந்தனர். கட்டுக்கடங்காத கூட்டத்தாலும், அரியலூரில் பிரசாரத்தை முடிக்கவே நள்ளிரவு வரை எடுத்துக் கொண்டதாலும், பெரம்பலூரில் மேற்கொள்ள இருந்த பிரசாரம் ரத்து செய்யப்பட்டது.

இதனையடுத்து விஜய் இரண்டாம் கட்ட பிரசாரத்தின்போது, 2 மாவட்டங்களுக்கு மட்டும் தனது பரப்புரையை மேற்கொள்ள திட்டமிட்டு சென்று கொண்டிருக்கிறார். இதற்கிடையே, விஜய்யின் பிரச்சார சுற்றுப் பயணங்களுக்கு காவல் துறையினர் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் முதலில் டிசம்பர் 20, 2025 உடன் முடிவடைய திட்டமிடப்பட்டிருந்த சுற்றுப்பயண அட்டவணை, தற்போது 2026 பிப்ரவரி 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முதலில் சனிக்கிழமைகளில் மட்டும் பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இனி ஞாயிற்றுக்கிழமைகளையும் சேர்த்து, மாவட்ட அளவில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள விஜய் முடிவு செய்துள்ளார்.

நீட்டிக்கப்பட்ட சுற்றுப்பயண அட்டவணையின்படி, விஜய் பின்வரும் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்:

  • செப்டம்பர் 27, 2025 (சனி): நாமக்கல், கரூர்
  • அக்டோபர் 5, 2025 (ஞாயிறு): வேலூர், ராணிப்பேட்டை
  • அக்டோபர் 11, 2025 (சனி): புதுச்சேரி, கடலூர்
  • அக்டோபர் 18, 2025 (சனி): தூத்துக்குடி, திருநெல்வேலி
  • அக்டோபர் 25, 2025 (சனி): திருப்பூர், ஈரோடு
  • நவம்பர் 1, 2025 (சனி): பெரம்பலூர், கள்ளக்குறிச்சி
  • நவம்பர் 8, 2025 (சனி): கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்
  • நவம்பர் 15, 2025 (சனி): விழுப்புரம், திருவண்ணாமலை
  • நவம்பர் 22, 2025 (சனி): சேலம், தர்மபுரி
  • நவம்பர் 29, 2025 (சனி): தஞ்சாவூர், மயிலாடுதுறை
  • டிசம்பர் 7, 2025 (ஞாயிறு): புதுக்கோட்டை, திண்டுக்கல்
  • டிசம்பர் 13, 2025 (சனி): சிவகங்கை, இராமநாதபுரம்
  • டிசம்பர் 20, 2025 (சனி): திருவள்ளூர், காஞ்சிபுரம்
  • ஜனவரி 24, 2026 (சனி): மதுரை, தேனி
  • ஜனவரி 31, 2026 (சனி): கன்னியாகுமரி
  • பிப்ரவரி 7, 2026 (சனி): தென்காசி, விருதுநகர்
  • பிப்ரவரி 14, 2026 (சனி): கோயம்புத்தூர், நீலகிரி
  • பிப்ரவரி 21, 2026 (சனி): செங்கல்பட்டு, சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *