உறுதியானது விஜய்யின் பிரசார இடங்கள்… தடபுடலாக ரெடியாகும் நாமக்கல், கரூர்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் நடைபெறவுள்ள இடங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்’ என்ற பெயரில் தமது முதல் சுற்றுப்பயணத்தை கடந்த 13ஆம் தேதி சனிக்கிழமை அன்று தொடங்குகினார். தொடர்ந்து டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மக்கள் சந்திப்பு கூட்ட பிரச்சாரங்களை நடத்த திட்டமிடப்பட்டது.
ஆனால், விஜய்யின் பிரசாரத்தின்போது திருச்சியிலும், அரியலூரிலும் ஏராளமான ரசிகர்களும், தொண்டர்களும் வழிநெடுக குவிந்தனர். கட்டுக்கடங்காத கூட்டத்தாலும், அரியலூரில் பிரசாரத்தை முடிக்கவே நள்ளிரவு வரை எடுத்துக் கொண்டதாலும், பெரம்பலூரில் மேற்கொள்ள இருந்த பிரசாரம் ரத்து செய்யப்பட்டது.
இதனையடுத்து விஜய் இரண்டாம் கட்ட பிரசாரத்தின்போது, 2 மாவட்டங்களுக்கு மட்டும் தனது பரப்புரையை மேற்கொள்ள திட்டமிட்டு சென்று கொண்டிருக்கிறார். இதற்கிடையே, விஜய்யின் பிரச்சார சுற்றுப் பயணங்களுக்கு காவல் துறையினர் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் முதலில் டிசம்பர் 20, 2025 உடன் முடிவடைய திட்டமிடப்பட்டிருந்த சுற்றுப்பயண அட்டவணை, தற்போது 2026 பிப்ரவரி 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முதலில் சனிக்கிழமைகளில் மட்டும் பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இனி ஞாயிற்றுக்கிழமைகளையும் சேர்த்து, மாவட்ட அளவில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள விஜய் முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில், நாளை சனிக்கிழமை நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக முடிவெடுக்கப்பட்டது. இதனையடுத்து, நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விமலா, தவெக நிர்வாகிகளுடன் விஜய் பரப்புரை செய்வதற்கான அனுமதி மற்றும் நாமக்கல் நகரில் இடம் தேர்வு செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
தவெகவினர் நாமக்கல் நகரில் உள்ள பொய்யேரி சாலை, மதுரை வீரன் கோவில் அருகே தேர்வு செய்திருந்தனர். தவெகவினர் தேர்வு செய்த இடத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும், பொதுமக்கள் அவதிக்குள்ளாவர்கள் என்பதால், அந்த இடத்தை தவிர்த்து மாற்று இடத்தை தேர்வு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
சேலம் சாலையில் உள்ள பொன்நகர், நான்கு தியேட்டர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு இடத்தை தேர்வு செய்யுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தி இருந்தனர். இதனால், தவெக நிர்வாகிகள் இடத்தை முடிவு செய்வதில் சிக்கல் நீடித்தது.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் நாளை காலை 8.45 மணிக்கு நாமக்கலில் உள்ள கே.எஸ்.திரையரங்கம் அருகிலும், நண்பகல் 12.00 மணிக்கு கரூர், வேலுச்சாமிபுரத்திலும் சுற்றுப்பயணத்தை மேற்கொள்வார் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், விஜய் நாளை காலை தனது 3ஆம் கட்ட பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளார். இதற்கான பணிகளில் தவெக நிர்வாகிகள் மும்ம்