‘பலவீனமாகிறதா? இந்தியா கூட்டணி’

தமிழ்நாட்டில் தவெக அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து, திமுக இந்தியா கூட்டணி ஆலோசனையை புறக்கணித்துள்ளது. இதேசமயம், மம்தா பானர்ஜியின் திரிணமூல், இடதுசாரிகள், ஆம் ஆத்மி, சிவசேனா, என்.சி.பி போன்ற கட்சிகளின் பலவீனமும் கூட்டணியின் எதிர்கால பலத்தை குறைக்கிறது.

தமிழ்நாட்டில், காங்கிரஸ்-திமுக உறவில் ஏற்பட்டுள்ள விரிசல், தேசிய அளவில் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சி தவெக அரசுக்கு ஆதரவு அளித்ததால் ஏற்பட்ட விரிசல் காரணமாக, திங்கட்கிழமை டெல்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணி ஆலோசனையை புறக்கணிப்பதாக திமுக அதிரடியாக அறிவித்துள்ளது.

மல்லிகார்ஜுன் கார்கே இல்லத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில் திமுக பங்கேற்கவில்லை ஆனால் விசிக, மதிமுக, இடதுசாரி கட்சிகள் பங்கேற்கின்றன.

திமுகவின் புறக்கணிப்பு என்றால்,மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் தேர்தல் தோல்விக்குப் பின் பெரும் பிளவுகளைச் சந்தித்து வருகிறது.

மற்ற மாநிலங்களின் மற்ற சில கட்சிகளின் பலவீனமும், பிராந்திய கட்சிகளின் பலவீனமும் ஒட்டுமொத்த இந்தியா கூட்டணியை முடக்கியுள்ளது.

இந்தியா கூட்டணி உருவாக காரணமாக இருந்த பீகார் முன்னாள் முதல்வர் நிதிஷ் குமாரின் ஜேடியு, தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணியில் உள்ளது.

பிராந்திய கட்சிகளின் அதிருப்தியும், காங்கிரஸின் மாநில அரசியல் நகர்வுகளும் இந்தியா கூட்டணியின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

இந்நிலையில் தான் இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடக்கவிருந்து, ஆனால் டெல்லியில் ராகுல் காந்தியை விமர்சித்து பேனர்கள் வைக்கப்பட்டதால் பரபரப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *