‘பத்தா’ ரசிகர்களுக்கு புதிய அனுபவம் – விஜய் சேதுபதி!
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்தா’ திரைப்படம் ரசிகர்களுக்கு முற்றிலும் புதிய அனுபவத்தை வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
பாலாஜி தரணிதரன் கதையை சொன்னபோதே, படம் மக்களிடம் நிச்சயம் சென்றடையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டதாக கூறிய விஜய் சேதுபதி, அவருடன் பணியாற்றியது நண்பருடன் இணைந்து பணியாற்றியது போல இருந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், லிஜோமோல் ஜோஸின் நடிப்பு தன்னை ஆச்சரியப்படுத்தியதாகவும், சாய் அப்யங்கர் தனது ஆற்றலாலும் தன்னம்பிக்கையாலும் கவனம் ஈர்த்ததாகவும் அவர் பாராட்டியுள்ளார்.
“இந்தப் படத்தில் நான் இரண்டாவது கதாநாயகன் போலவே உணர்ந்தேன்” எனக் கூறிய விஜய் சேதுபதி, ‘பத்தா’ அனைவரும் ரசித்து தங்களுடன் இணைத்துக் கொள்ளும் படமாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

