ஒரே ஆண்டில் 3 மெகா ஹிட்! தென்னிந்திய சினிமாவில் மமிதா பைஜுவின் புதிய சாதனை!
மமிதா பைஜு நடிப்பில் அடுத்தடுத்து வெளியான 3 திரைப்படங்கள் உலகளவில் ரூ.800 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஒரே ஆண்டில் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்த 3 படங்களில் நடித்த முதல் தென்னிந்திய நடிகை என்ற சாதனையை மமிதா பைஜு படைத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த தொடர் வெற்றிகளுக்குப் பிறகு IMDb-யின் சமீபத்திய ‘Trending People’ பட்டியலில் மமிதா பைஜு முதலிடம் பிடித்துள்ளார்.
2026ஆம் ஆண்டு மமிதா பைஜுவின் திரைப்பயணத்தில் முக்கியமான ஆண்டாக மாறியுள்ளது. விஜய்யுடன் நடித்த ‘ஜனநாயகன்’, சூர்யாவுடன் நடித்த ‘விஸ்வநாத் & சன்ஸ்’, நிவின் பாலியுடன் நடித்த ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ ஆகிய மூன்று படங்களும் வசூலில் கவனம் பெற்றுள்ளன.
முதலில் ஜூலை 23ஆம் தேதி வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படம் உலகளவில் ரூ.324 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதில் மமிதா பைஜுவின் நடிப்பும் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது.
இதைத்தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியான ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் உலகளவில் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த இரண்டு படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, நிவின் பாலிக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்த ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி வெளியானது.
இத்திரைப்படம் சமீபத்தில் உலகளவில் ரூ.300 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மமிதா பைஜு நடித்துள்ள இந்த மூன்று திரைப்படங்களும் சேர்ந்து உலகளவில் சுமார் ரூ.800 கோடி வசூலை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
ஒரே ஆண்டில் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்த 3 திரைப்படங்களில் நடித்த முதல் தென்னிந்திய நடிகை என்ற சாதனையை மமிதா பைஜு படைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோன்ற சாதனையை இதற்கு முன்பு தீபிகா படுகோன் மற்றும் ஆலியா பட் ஆகியோர் படைத்துள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்ச்சியான இந்த வெற்றிகளின் மூலம் மமிதா பைஜு தற்போது ரசிகர்களிடையே மட்டுமின்றி, இந்திய திரையுலகிலும் கவனம் பெற்றுள்ளார்
மேலும், IMDb வெளியிட்டுள்ள சமீபத்திய ‘Trending People’ பட்டியலில் மமிதா பைஜு முதலிடம் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பட்டியலில் ஐஸ்வர்யா ராய் பச்சன், வாமிகா கப்பி உள்ளிட்ட பிரபலங்களும் இடம்பெற்றுள்ளனர்.
‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களிடம் பிரபலமான மமிதா பைஜு, தமிழில் நடித்த ‘Dude’ திரைப்படத்தின் மூலமும் தமிழ் ரசிகர்களிடையே கவனம் பெற்றார்.
தற்போது ரூ.100 கோடி, ரூ.200 கோடி, ரூ.300 கோடி என அவரது திரைப்படங்களின் வசூல் உயர்ந்து வரும் நிலையில், 2026ஆம் ஆண்டு மமிதா பைஜுவின் திரைப்பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.

