ஆஸ்கார் நோக்கி இலங்கைத் தமிழ் சினிமாவின் ‘அந்தோனி’!
இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான முதல் இலங்கைத் தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ள ‘அந்தோனி’, தற்போது 2027ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது.
சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கயல் வின்சன்ட், TJ. பானு, சுதர்சன் ரவீந்திரன், செளமி முனசிங்க, நிழல்கள் ரவி, அருள்தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மூன்று மொழிகளில் உருவாகியுள்ள ‘அந்தோனி’, உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது இந்தியாவின் பல்வேறு OTT தளங்களிலும் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனம் மூலம் 2027 ஆஸ்கார் விருதின் சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவுக்கான தேர்வுக் குழுவிற்கு ‘அந்தோனி’ அனுப்பப்பட்டுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது.
இளையராஜாவின் இசையில் உருவான வரலாற்றுச் சிறப்புமிக்க இலங்கைத் தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையுடன், ‘அந்தோனி’ தற்போது சர்வதேச விருது அரங்கில் கவனம் பெற்றுள்ளது.

