சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் – படக்குழு அறிவிப்பு
சென்னை: ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான காரணங்களையும் படக்குழு விளக்கியுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில், சிவகார்த்திகேயனுடன் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இது அவரின் 100-வது திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது….

