ssnews

பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திரா மரணம் – இந்திய திரையுலகில் அதிர்ச்சி!

பாலிவுட்டின் மூத்த நடிகரும், பல தலைமுறையினரால் நேசிக்கப்பட்ட ஸ்டார் நடிகருமான தர்மேந்திரா இன்று (நவம்பர் 24) மதியம் காலமானார். வயது மூப்பு காரணமான உடல்நலக்குறைவால் மும்பையின் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், குணமடைந்து வீடு திரும்பியும், மருத்துவ கண்காணிப்பில் தொடர்ந்தும் இருந்தார். இந்நிலையில் இன்று அவர் உயிரிழந்தார். தர்மேந்திரா தனது திரையுலக பயணத்தில் 300க்கும் மேற்பட்ட ஹிந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். ஷோலே, சீதா-அவுர் கீதா, யாதோன் கி பாராத், தரம் வீர, பூல் அவுர் பத்தர்…

Read More

2வது டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 201 ரன்களுக்கு இந்தியா அவுட் – தென் ஆப்ரிக்கா வலுவான முன்னிலை

கவுகாத்தி: கவுகாத்தியின் பர்சாபரா மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 201 ரன்களுக்கு சரணடைந்தது. முதல் இன்னிங்ஸில் தென் ஆப்ரிக்கா 489 ரன்கள் எடுத்து வலுவான ஸ்கோர் அமைத்தது. அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி, தென் ஆப்ரிக்க பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடர் விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால் 58 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 48 ரன்களும் எடுத்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் பெரும்பாலும் சொதப்பினர்.தென் ஆப்ரிக்க…

Read More

சென்னை முதல் குமரி வரை 28 மாவட்டங்களில் வானிலை மையம் அலர்ட்

தமிழகம் முழுவதும் காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகியுள்ளதால், அடுத்த ஒரு மணி நேரத்திற்கு சென்னை முதல் கன்னியாகுமரி வரை 28 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. மலாக்கா ஜலசந்தியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24–48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புயலாக வலுப்படும் வாய்ப்பு உள்ளது. மேலும், குமரிக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் உள்ள வளிமண்டல சுழற்சிகள் காரணமாக தொடர்ந்து மழை நீடிக்கும்…

Read More

Gen Z இளைஞர்கள் அமைதியானவர்கள் அல்ல; மாற்றத்தை உருவாக்கப் போகும் சக்தி அவர்களே – த.வெ.க தலைவர் விஜய்

காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றி, இன்றைய Gen Z இளைஞர்கள் தமிழக அரசியலை வடிவமைக்கும் முக்கிய சக்தி உள்ளவர்கள் என்று கூறியுள்ளார் . கூட்டத்தில் மக்கள் பங்கேற்று உற்சாகக் குரல்களில் அவரை வரவேற்றனர். Gen Z kids தற்குறிகள் அல்ல, ஆச்சரிய குறி. உங்கள் அரசியலை மாற்றப் போகும் ஆச்சரிய குறி அவர்கள்தான், என்று விஜய் உரையின் தொடக்கம் முதலே இளைஞர்களை நோக்கி திறம்படப்…

Read More

பெண்கள் உலகக் கோப்பை கபடி: இன்று இந்தியா-ஈரான் அரையிறுதி மோதல்

டாக்கா: வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்று வரும் 2வது பெண்கள் உலகக் கோப்பை கபடி தொடரில், லீக் சுற்றுப்போட்டிகள் நிறைவு பெற்ற நிலையில் அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெறுகின்றன. 11 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில், ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில், சமநிலை மாறிய சுவாரஸ்ய ஆட்டம் வங்காளதேசம் 39–31 என்ற கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தியது.அதேபோல ‘பி’ பிரிவில் நடந்த இறுதி லீக் ஆட்டம் ஒன்றில் சீன தைபே அணி 63-28 என்ற புள்ளி…

Read More

திருக்கார்த்திகை தீபத் திருவிழா: அண்ணாமலையார் கோவிலில் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திகழும் மேலும் நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகச் சிறப்பிப்படும் திருவண்ணாமலையில், உலகப் புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவிலில் வருடந்தோறும் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இந்தாண்டும் மிகுந்த பக்தி பேரரவத்துடன் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டிற்கான திருவிழா வரும் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகிறது. டிசம்பர் 3ஆம் தேதி அதிகாலை அண்ணாமலையார் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டு, அதே நாள் மாலை 6 மணிக்கு 2668 அடி உயரத்தில் உள்ள…

Read More

Say No to Drugs! புதுச்சேரியில் இன்று மாரத்தான் தொடக்கம்

புதுச்சேரி: சமூக சேவகர் சார்லஸ் மார்ட்டின் முன்னெடுப்பில் புதுச்சேரியை போதையற்ற நகரமாக உருவாக்கும் முயற்சியாக ‘போதை வேண்டாம்’ என்ற தலைப்பில் மாரத்தான் ஓட்டம் இன்று நடைபெறுகிறது. புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி சிலையிலிருந்து தொடங்கும் இந்த ஓட்டம், ‘Say No to Drugs’ எனும் செய்தியை மக்களிடம் பரப்புவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக 5 கி.மீ. தூரத்திற்கு இந்த மாரத்தான் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்வில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள்…

Read More

கஞ்சா வர்த்தகர் குண்டர் சட்டத்தில் கைது : ஒரு ஆண்டு சிறை தண்டனை

புதுச்சேரி: லாஸ்பேட்டையைச் சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி சேகர், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் கஞ்சா குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, அவருக்கு ஒரு ஆண்டு தடுப்புச் சிறை தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சேகர் மீது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 9 கஞ்சா விற்பனை சம்பந்தமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பலமுறை கைது செய்யப்பட்டும் தொடர்ந்து சட்டவிரோத கஞ்சா வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. சேகரின் செயல்பாடுகள் பொது…

Read More

கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமானார் : இலக்கிய உலகில் துயரச்செய்தி

புகழ்பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் (வயது 92) உடல்நலக் குறைவால் இன்று காலமானார். தமிழ் இலக்கியத் துறையில் தனித்துவமான குரலாக விளங்கிய இவர், கவிதை, புதுக்கவிதை, மேடைப் பேச்சு என பல்வேறு துறைகளில் அழியாத தடம் பதித்திருந்தார். “வணக்கம் வள்ளுவ”நாடகத்திற்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற இவர், மரபுக் கவிதை முதல் புதுக்கவிதை வரை பல வடிவங்களில் ஆழமான படைப்புகளை வழங்கியவர். சமூகத்தில் நிலவும் பிரச்சினைகள், மனிதநேயப் பார்வை, பெண்கள் உரிமை, சமத்துவம் போன்ற கருத்துக்களை தன்னுடைய…

Read More

ஆஸ்திரேலியாவிற்கு அபார வெற்றி : ஆஷஸ் தொடர் முதல் டெஸ்ட் 2 நாளில் முடிவு

ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி அதிரடி ஆட்டத்தைக் காட்டி, இங்கிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 5 நாட்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த டெஸ்ட், வெறும் 2 நாட்களில் முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸில் குறைந்த ரன்களில் ஆல்-அவுட் ஆனது தொடரின் சூழ்நிலையே மாறியது. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் அணி சிறப்பாக செயல்பட்டு, எதிரணி அணியை அழுத்திய நிலையில் வைத்தது. பின்னர் வந்த ஆஸ்திரேலிய…

Read More

திமுக நிர்வாகி சுட்டுக்கொலை : தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீரழிந்துவிட்டதாக அன்புமணி கண்டனம்

சென்னை: சேலம் மாவட்டம் கருமந்துறை அருகிலுள்ள கிராங்காடு கிராமத்தில் திமுக கிளைச் செயலாளர் ராஜேந்திரன் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் கண்டித்துள்ளார். ராஜேந்திரன் உயிரிழந்தது அதிர்ச்சியளிப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும், துயரத்தில் இருக்கும் அவரது குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்தார். ராஜேந்திரன் மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த அவரது உறவினர்களான ராஜமாணிக்கம், பழனிசாமி ஆகியோருக்கிடையே நில சம்பந்தப்பட்ட…

Read More

காமராஜ் நகர் சுதந்திரப் பொன்விழா நகர ஹவுசிங் போர்டு குடியிருப்பில் உரிமை பத்திரம் வழங்காமை – மக்கள் கடும் அதிருப்தி

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் அமைந்துள்ள சுதந்திரப் பொன்விழா நகர ஹவுசிங் போர்டு குடியிருப்புகள் 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை. ஆனால் இத்தனை ஆண்டுகள் கடந்தும், இங்கு வசிக்கும் மக்களுக்கு இன்னும் வீட்டு உரிமை பத்திரங்கள் வழங்கப்படவில்லை என குடியிருப்போர் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், காலப்போக்கில் வீடுகளில் பல பகுதிகள் இடிந்து விழுவதால் அங்கு வசிக்கும் மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். வீட்டைச் சுற்றி புதர்கள் அதிகம் வளர்ந்து கிடப்பதால், பாம்பு, பூரான், தேள் போன்ற விஷ…

Read More

திருவண்டார் அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு வகுப்பு: மாணவிகளுக்கு MLA அங்காளன் வழங்கிய மதியஉணவு

திருபுவனை தொகுதிக்குட்பட்ட திருவண்டார் கோவில் பகுதியில் அமைந்துள்ள பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கான பொது தேர்வு தயாரிப்பு சிறப்பு வகுப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் தினசரி 100-ற்கு மேற்பட்ட மாணவிகள் கலந்து வருவது குறிப்பிடத்தக்கது. சிறப்பு வகுப்பில் பங்கேற்கும் மாணவிகளுக்கு சிற்றுண்டி அல்லது உணவு வழங்க வேண்டுமென பள்ளி தலைமையாசிரியர் விண்ணப்பித்ததை தொடர்ந்து, திருபுவனை சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு திரு. பா. அங்காளன் MLA அவர்கள் இன்று பள்ளியை…

Read More

தோனியுடன் இணைவதற்காக ஆவலுடன் காத்திருக்கும் சஞ்சு சாம்சன் : உற்சாகம் வெளிப்பாடு

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரரான சஞ்சு சாம்சன், முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியுடன் மீண்டும் நேருக்கு நேர் சந்திக்க ஆவலாக உள்ளதாக தெரிவித்துள்ளார். தோனியுடன் கழிக்கும் ஒவ்வொரு நேரமும் தன்னுக்கு ஒரு சிறப்பு அனுபவமாக இருக்கும் என அவர் கூறியுள்ளார். தோனியுடன் உரையாடுவது, உணவு பகிர்ந்து கொள்வது, கூடுதலாக பயிற்சி மேற்கொள்வது போன்றவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதாக சஞ்சு தெரிவித்துள்ளார். “தோனியுடன் உரையாட, உணவு சாப்பிட, பயிற்சி மேற்கொள்ள மிகவும் ஆவலாக நான் காத்திருக்கிறேன்….

Read More

தெற்கு அந்தமான் கடலில் புதிய தாழ்வு உருவானது: பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

சென்னை: வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் உருவாகி வரும் வானிலை மாற்றங்களின் காரணமாக அடுத்த சில நாட்களிலும் தென்னிந்திய கடல்சூழலில் மழை வலுத்து பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக்கடல் தாழ்வு வலுவிழந்தது : நவம்பர் 20ஆம் தேதி தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு அருகே நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து, 21ஆம் தேதி காலை அது வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக மட்டுமே காணப்பட்டது. இதேபோல் தெற்கு அந்தமான் கடல் மேல் வளிமண்டல…

Read More

“தலைவர் 173” சர்ச்சைக்கு பின் கமல்ஹாசன் : சுஹாசினியை சந்தித்த குஷ்பூ, வைரலாகும் பதிவு

சென்னை: தமிழ் திரையுலகை அதிரவைத்த பெரிய செய்திகளில் ஒன்று கமல்ஹாசன் – ரஜினிகாந்த் இணையும் திட்டம். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், இயக்குநர் சுந்தர் சி. இயக்க, ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 173’ அறிவிப்பு வெளியாகியபோது, ரசிகர்கள் அதை வரவேற்று பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர்.படத்தின் பூஜையும் பிரமாண்டமாக நடைபெற்றது. ஆனால் அதற்குப் பிறகு சில தினங்களிலேயே, எந்த காரணத்தையும் வெளிப்படுத்தாமல் சுந்தர் சி. திட்டத்திலிருந்து விலகியதாக அறிவித்தது சினிமா வட்டாரத்தைச் சலசலப்புக்கு உள்ளாக்கியது. இந்த திடீர் மாற்றம்…

Read More

காசாவில் 25 மீ ஆழத்தில் 7 கி.மீ நீள மிகப்பெரிய சுரங்கம் – இஸ்ரேல் படை வெளியிட்ட வீடியோ வைரல்

காசா: ஹமாஸ் – இஸ்ரேல் மோதல் தொடங்கிய 2023 அக்டோபர் 7 முதல் போர்நிலை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் வீடுகளின் அடித்தளங்களில், நிலத்தடியில் அமைக்கப்பட்டுள்ள ரகசிய சுரங்கங்களில் மறைந்து தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் படை குற்றம் சாட்டி வருகிறது.இந்த சுரங்கங்களை ஒன்றன் பின் ஒன்றாக கண்டுபிடித்து அழிக்கும் பணியில் இஸ்ரேல் படை ஈடுபட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, தெற்கு காசா எல்லைப்பகுதியில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவற்றில் மிகப் பெரியதாகிய புதிய ரகசிய சுரங்கம்…

Read More

ஜேஹ்ரான் மம்தானியை பாராட்டிய ட்ரம்ப், அரசியலில் அதிர்ச்சி; எதிரி இன்று நண்பன்!

அமெரிக்க அரசியலில் யாரும் எதிர்பாராத வகையில் பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன் கடுமையாக விமர்சித்த நியூயார்க் மேயர் ஜேஹ்ரான் மம்தானியை, தற்போது நேரடியாக பாராட்டி முழு ஆதரவை வழங்குவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற சந்திப்பில் இந்த ஆச்சரிய அறிவிப்பு வெளிவந்தது. மோதலாக எதிர்பார்க்கப்பட்ட சந்திப்பு, ஆனால் விஷயம் மாறியது! மம்தானியை “கம்யூனிஸ்ட் பைத்தியக்காரர்” என்று முன்பு ட்ரம்ப் பலமுறை தாக்கியிருந்தார். அவர் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் கூட்டாட்சி நிதியை நிறுத்துவேன்…

Read More

புதுச்சேரி வீட்டிற்குள் ஆறடி சாரைப்பாம்பு புகுந்த பரபரப்பு – வனத்துறை ஊழியர்கள் அரைமணி போராட்டத்தில் பிடிப்பு

புதுச்சேரி உழவர்கரை தொகுதி சுதாகர் நகரில் உள்ள ஒரு வீட்டில் திடீரென ஆறடி நீளமான சாரைப்பாம்பு நுழைந்ததால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்தப் பகுதியில், நேற்று இரவு லேசான மழை தொடர்ந்து பெய்து வந்தது. இதன்போது, தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர் குடும்பத்துடன் வீட்டில் சோபாவில் அமர்ந்து உணவு அருந்திக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ஆறடி நீள சாரைப்பாம்பு வீட்டுக்குள் விரைவாக நுழைந்தது. பாம்பை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அலறியடித்து…

Read More

காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பு நாளை நடைபெறவுள்ளது

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவர்ச்சத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நாளை மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் 1,500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க இருப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பை வெற்றிகரமாக நடத்துவதற்கான அனைத்து பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளும் செய்யப்பட்டுள்ளது என்றும் த.வெ.க. தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. நிகழ்ச்சியில் வரும் பொதுமக்களின் மனுக்களை பெறுதல், அவர்களின் தேவைகளை கேட்பது உள்ளிட்ட செயல்பாடுகள் நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

முதல்வர் ஸ்டாலின் கடிதம்: கோவை – மதுரை மெட்ரோ திட்டங்களை மீள் பரிசீலனை செய்ய பிரதமருக்கு வேண்டுகோள்

கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் சேவையை நிறுவுவதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் (DPR) குறித்து மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டின் நகரப் போக்குவரத்து வளர்ச்சியில் கோவை மற்றும் மதுரை முக்கிய நகரங்களாகும். இந்நகரங்களில் மக்கள் தொகை மற்றும் வாகன நெரிசல் அதிகரித்து வருவதால், மெட்ரோ ரயில் சேவை மிக அவசியமானதாக தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இதனை முன்னிட்டு,…

Read More

அடுத்த 3 மணிநேரத்தில் பல மாவட்டங்களில் மழை எச்சரிக்கை

அடுத்த 3 மணி நேரத்தில் செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், திருப்பூர், வேலூர் உள்ளிட்ட சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய இலேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மின்னல், இடியுடன் கூடிய மழை ஏற்படக்கூடும் என்பதால், மக்கள் அவசியமில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்கவும், திறந்த வெளி பகுதிகளில் நிற்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றவும் வானிலை துறை அறிவுறுத்தியுள்ளது.

Read More

சமூக ஊடகங்களில் ரவுடிகளைக் புகழ்வோருக்கு புதுச்சேரி SSP கடும் எச்சரிக்கை: 24 மணி நேர கண்காணிப்பு தொடக்கம்

புதுச்சேரியில் ரவுடிகள், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் மற்றும் வன்முறை செயல்களை சமூக ஊடகங்களில் ஊக்குவிக்கும் அல்லது புகழ்ந்து பேசும் நபர்களுக்கு எதிராக கடுமையான எச்சரிக்கையை மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் (சட்டம் & ஒழுங்கு) வெளியிட்டுள்ளார். புதுச்சேரி காவல்துறையின் தகவலின்படி, சமூக விரோத செயல்களைப் புகழ்ந்து பேசும் சில டிஜிட்டல் ஊடகக் கணக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இத்தகைய பதிவுகள் இளைஞர்களை தவறான பாதையில் ஈர்க்கும் அபாயம் உள்ளதுடன், பொது அமைதி மற்றும் பாதுகாப்புக்கும் தீங்கு விளைவிப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது….

Read More

அரியாங்குப்பத்தில் திருநங்கைகள் நினைவு தினம் அனுசரிப்பு : மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி

பாலின வேறுபாட்டினால் ஏற்படும் வன்முறை மற்றும் சமூக ஒதுக்கல் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில், ‘திருநங்கைகள் நினைவு தினம்’ (Transgender Day of Remembrance) அரியாங்குப்பத்தில் நேற்று மாலை அனுசரிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் திருநங்கைகள் சமூதாயம் எதிர்கொள்ளும் வன்முறை மற்றும் அநீதி காரணமாக உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நாளாகக் கடைப்பிடித்து வருகின்றனர். அதனை முன்னிட்டு, அரியாங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் அரங்கத்தில் நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி…

Read More

மாஸ்கோ ஏஐ கண்காட்சியில் மனித வடிவ ரோபோ நடனமாடி புதினை வரவேற்ற காட்சி வைரல்

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு (AI) கண்காட்சியில், அதிபர் விளாடிமிர் புதினை மனித வடிவ ரோபோ ஒன்று நடனமாடி வரவேற்ற காட்சி இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ரஷ்யாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான ஸ்பெர்பேங்க், தங்களின் தொழில்நுட்ப முன்னேற்றங்களை வெளிப்படுத்தும் நோக்கில் மாஸ்கோவில் இந்த ஏஐ கண்காட்சியை ஏற்பாடு செய்தது. அதற்கு சிறப்பு விருந்தினராக அதிபர் புதின் வருகை தந்தார். கண்காட்சிக்கு வந்த புதினை, ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட ‘கிரீன்’ என்ற மனித வடிவ ரோபோ…

Read More

துபாயில் தேஜஸ் போர்விமானம் விழுந்து நொறுங்கியது

துபாயில் நடைபெற்ற விமான கண்காட்சியில் இந்தியாவின் தேஜஸ் போர்விமானம் விபத்துக்குள்ளாகி நொறுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கண்காட்சி நிகழ்ச்சிக்காக வானில் வட்டமிட்டு சாகசம் செய்துகொண்டிருந்த தேஜஸ் விமானம் திடீரென கோளாறு ஏற்பட்டு கீழே விழுந்ததாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நிகழ்ந்த உடனே விமானம் தீப்பற்றி எரிந்தது. அதிர்ஷ்டவசமாக, விமானத்தில் இருந்த பைலட் தற்காலிக ரெயில் மூலம் வெளியேற்றப்பட்டு உயிர் பிழைத்ததாக துபாய் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வு நடைபெற்ற பகுதி முழுவதும் புகை மூட்டமாக மாறி,…

Read More

ஜனநாயகன்’ படத்தில் புதிய அப்டேட் – ரசிகர்களுக்கு படக்குழுவின் சிறப்பு ட்ரீட்

விஜய் நடிப்பில் எச். வினோத் இயக்கும் ‘ஜனநாயகன்’ படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாக உறுதியாகியுள்ளது. அரசியலில் களமிறங்கும் நிலையில், விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இது உருவாகி வருவதால், ரசிகர்களிடையே இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் முதல் பாடல் “தளபதி கச்சேரி” சில நாட்களுக்கு முன்…

Read More

மதுரையில் சர்வதேச ஹாக்கி அரங்கு திறக்கத் தயாராகிறது – 13 நாடுகள் பங்கேற்கும் உலகக்கோப்பை

மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உருவாக்கப்பட்டுள்ள புதிய சர்வதேச ஹாக்கி அரங்கு நாளை (நவம்பர் 22) அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட உள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ரூ. 10.55 கோடி செலவில் இந்த அரங்கத்தை நவீன வசதிகளுடன் மேம்படுத்தியுள்ளது. அரங்கின் புதிய அமைப்பு மற்றும் பணிகள் நுழைவாயில் மற்றும் சுற்றுப்புற அழகுபடுத்தல் பின்னணி நுழைவாயில் மின்விளக்குகள், செயற்கை நீரூற்று மற்றும் ஹாக்கி ஸ்டிக் வடிவமைப்புடன் அலங்கரிக்கப்படுகிறது.இடம் முழுவதும் சாலை அமைப்பு, பூச்சு மற்றும் தரை வேலைகள் இன்று முடிக்கப்படுகின்றன….

Read More

ஆங்கில எழுத்துகளை அகற்ற கோரி தமிழ் உரிமை இயக்கம் ஆர்ப்பாட்டம்.

புதுச்சேரியில் புதிதாக இயக்கப்பட்ட மினி மின்சார பேருந்துகளில் ஆங்கிலத்தில்  எழுதப்பட்டுள்ள பெயர்கள் மற்றும் பாதை விவரங்களை அகற்ற வேண்டும் என தமிழ் உரிமை இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது பரபரப்பு நிலவியது. பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் 25 மின்சார மினி பேருந்துகளை தனியாரிடம் ஒப்படைத்து கடந்த மாதம் முதல் இயக்கி வருகிறது. ஆனால், இந்தப் பேருந்துகளில் தமிழ் மொழி பயன்படுத்தப்படாமல் ஆங்கிலத்தில் மட்டுமே பாதைத் தகவல்கள் மற்றும் பேருந்துப் பெயர்கள் எழுதப்பட்டிருந்தது….

Read More

உலக மீனவர் தினத்தையொட்டி சிங்காரவேலர் சிலைக்கு தலைவர்கள் அஞ்சலி

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரி–கடலூர் சாலையில் அமைந்துள்ள சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் சிலைக்கு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு மீனவ அமைப்புகள் சார்பில் தொடர் மரியாதை செலுத்தப்பட்டது. அரசு சார்பில் முதலமைச்சர் நாராயணசாமி ரங்கசாமி, சட்டப்பேரவை தலைவர் செல்வம், பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதன்பின், காங்கிரஸ் சார்பில் மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்பி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் முன்னாள் சட்டமன்ற…

Read More

புதுச்சேரியில் மாநில அளவிலான ‘கலா உத்சவ் – 2025 : 83 மாணவர்கள் திறமை வெளிப்பாடு

புதுச்சேரியில் மாநில அளவில் நடைபெற்ற ‘கலா உத்சவ் – 2025’ போட்டியில் காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்ட பிராந்தியங்களிலிருந்து 83 மாணவ–மாணவிகள் பங்கேற்று தங்கள் கலைத் திறமைகளை வெளிப்படுத்தினர். இடைநிலை மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய கல்வி அமைச்சகம் நாடு முழுவதும் ‘கலா உத்சவ்’ போட்டிகளை நடத்தி வருகிறது. புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்ககத்தின் சமகர சிக்ஷா பிரிவு மாவட்டத் தளப் போட்டிகளை நடத்தியது. அதில் முதலிடத்தைப் பெற்றவர்கள் மாநில அளவிலான இறுதிப் போட்டியில் பங்கேற்க…

Read More

தென் கிழக்கு வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு உருவாகவுள்ளது, இந்திய வானிலை துறையின் அறிவிப்பு

தென் கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரங்களில் இந்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு இருப்பதாகவும், பின்னர் அது மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் எனவும் வானிலை துறை தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு உருவானால் தென் இந்திய மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளில் மழை கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கக்கடலின் தென்மேற்குப்…

Read More

சமூக வலைதளங்களில் இசைஞானியின் புகைப்படம் இனி ‘காப்புரிமை கண்காணிப்பு’, ஐகோர்ட்டின் அதிரடி உத்தரவு.

தமிழ் சினிமாவில் இசையின் வரலாறே பேசும் பெயர் இசைஞானி இளையராஜா. 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி மூலம் அறிமுகமான அவர், இன்று வரை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்து, 10,000-க்கும் அதிகமான பாடல்களை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். இவ்வளவு பெரும் இசை அந்தஸ்தை பெற்ற இளையராஜாவின் புகைப்படங்களும், பாடல்களும் அனுமதியின்றி பயன்படுத்தப்படுகின்றன என்ற குற்றச்சாட்டில் அவரது தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பல்வேறு…

Read More

“ஆண்கள் தினம் அப்படின்னு ஒன்று இருக்கா?” ஆண்ட்ரியாவின் கேள்வி, ரசிகர்கள் வேதனை!

சர்வதேச ஆண்கள் தினத்தை முன்னிட்டு நடிகை–பாடகி ஆண்ட்ரியாவிடம் ஓர் சாதாரண கேள்வி கேட்ட செய்தியாளர் கூட, அந்த ஒரு கேள்வி இணையத்தில் எவ்வளவு ‘ரியாக்ஷன்’ உருவாக்கும் என்பதை எதிர்பார்க்கவில்லை.ஆனால் ஆண்ட்ரியாவின் ஆச்சரியமும், சிரிப்பும், அதற்குப் பிறகு ரசிகர்கள் எழுதிய கமெண்டுகளும், இவை அனைத்தும் சேர்ந்து சமூக வலைதளத்தில் பெரிய கலகலப்பை உருவாக்கியுள்ளன. “அடடா… அப்படின்னு ஒரு தினமா இருக்கா?” – ஆண்ட்ரியாவின் நேரடி ரியாக்ஷன் ‘மாஸ்க்’ படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் ஆண்ட்ரியாவிடம் சர்வதேச ஆண்கள் தினம்…

Read More

ராமேசுவரம் அதிர்ச்சி: ஒருதலைக் காதல் கொடூரமாக முடிந்தது

ராமேசுவரம் அருகே உள்ள சேரான்கோட்டை கிராமத்தில் நடந்த பிளஸ்-2 மாணவி ஷாலினி கொலைச் சம்பவம், மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த கொடூரக் கொலையில் தொடர்புடைய மீனவர் முனியராஜ் 21 (வயது) கைது செய்யப்பட்ட பின்னர், அவர் அளித்த வாக்குமூலம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷாலினி 17 (வயது) அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். மீனவர் குடும்பத்தைச் சேர்ந்த இவரை, அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் முனியராஜ் சில மாதங்களாக ஒருதலைப்பட்சமாக காதலித்து…

Read More

SIR படிவத்துடன் எந்த ஆவணங்களும் சேர்க்கத் தேவையில்லை” – தேர்தல் ஆணையம் மீண்டும் தெளிவுபடுத்தல்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணியில் பயன்படுத்தப்படும் SIR | எஸ்ஐஆர் படிவங்களைச் சமர்ப்பிக்கும் போது, குடிமக்களிடம் எந்த வகையான ஆதார ஆவணங்களையும் கேட்க தேவையில்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மறுபடியும் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டின் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும், இம்மாதம் 4 ஆம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப்பணி நடைபெற்று வருகிறது. வீடு வீடாகச் சென்று படிவங்களை வழங்கி, அவற்றை நிரப்பி பெறும் பணியில் வாக்குச்சாவடி…

Read More

அமரன் திரைப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்

கோவாவில் இன்று தொடங்கி நவம்பர் 28 வரை நடைபெறும் 56வது சர்வதேச திரைப்பட விழா (IFFI) உலகம் முழுவதும் 81 நாடுகளைச் சேர்ந்த 240-க்கும் மேற்பட்ட படங்களை திரையிடுகிறது. இந்த விழாவில் தமிழ்த் திரைப்படமான அமரன் முதன்முதலில் திரையிடப்பட இருப்பது தமிழ் திரையுலகிற்கு ஒரு பெரும் மரியாதையாக கருதப்படுகிறது. இந்த சிறப்பு திரையிடலுக்காக அமரன் படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன் இன்று கோவாவிற்கு பயணம் செய்துள்ளார். கடந்த ஆண்டின் தீபாவளி வெளியீடாக வந்த அமரன், மறைந்த மேஜர் முகுந்த்…

Read More

IND vs RSA: இரண்டாவது டெஸ்டில் சுப்மன் கில்லுக்கு பதில் இவரா?

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் காயம் காரணமாக பங்கேற்க முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்குப் பதிலாக யார் களமிறங்கப் போகிறார்கள் என்ற கேள்விக்கு பதிலாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது தென்னாப்பிரிக்க அணி இந்தியா சுற்றுப்பயணத்தில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட்டில் இந்தியா தோல்வி அடைந்ததால், தொடரை சமன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி நாளை மறுநாள்…

Read More

குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்

மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் செயல்முறையில் குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு காலக்கெடு விதிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு இல்லை என அரசியல் சாசன அமர்வு முக்கியமான தீர்ப்பை வழங்கியது. தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து மாநில அரசு தொடர்ந்த வழக்கில், முன்னதாக இரு நீதிபதிகள் அமர்வு குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு மசோதாக்களை ஒப்புதல் அளிக்க 3 மாத காலக்கெடு நிர்ணயித்தது. மேலும், அரசியல் சாசனத்தின் பிரிவு 142-ஐ பயன்படுத்தி, சில மசோதாக்களுக்கு நேரடியாக உச்ச நீதிமன்றமே…

Read More

2048-ல் சென்னை முழுமையாக மாறும்… விரிவான போக்குவரத்து திட்டம் வெளியீடு

சென்னை நகரம் அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளில் பெரிய மாற்றத்தை நோக்கி நகர்கிறது. 2048 வரை நகரின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில், சென்னை மாநகரப் போக்குவரத்து ஆணையம் (CUMTA) விரிவான போக்குவரத்து திட்டம் (Comprehensive Mobility Plan – CMP) ஒன்றை உருவாக்கி வருகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. மெட்ரோ – LRT – RRTS: சென்னைக்கு புதிய போக்குவரத்து வலையமைப்பு புதிய CMP திட்டம், சென்னையின் தினசரி பயணத்தை எளிதாக்க பல்வேறு…

Read More

தமிழ்: தொன்மையும் உலகளாவிய பெருமையும் தாங்கும் மொழி

முன்னுரை  கல் தோன்றி மண் தோன்றா காலத்திதே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி” என்ற வரி, தமிழர்களின் கதையை காலத்துக்கும் மேல் உயர்த்திக்காட்டும் பெரும் சான்றாகும். மனித நாகரிகத்தின் ஆரம்ப காலத்திலேயே உருவெடுத்து, ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும் உயிரோடு வளர்ந்து வரும் மொழி “அது தமிழ்”. தமிழரின் பண்பாடு என்றல் சங்க புலவர் கணியன் பூங்குன்றனார் கூற்றுப்படி “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பதே ஆகும். அதாவது எந்த நாட்டிலிருந்து வந்தவர்களாக இருந்தாலும் அவர்களை வரவேற்று…

Read More

சென்னையில் திடீர் கனமழை: தி.நகர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னையில் இன்று மாலை பல்வேறு பகுதிகளில் திடீரென கனமழை பெய்தது. குறிப்பாக நுங்கம்பாக்கம், தி.நகர், எழும்பூர், மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம், அசோக்நகர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் மழையால் அதிகம் பாதிக்கப்பட்டன. வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே ‘இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு’ என எச்சரித்திருந்த நிலையில், மாலை நேர போக்குவரத்து உச்சத்தில் மழை ஆரம்பித்தது காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர். திடீரென மழை தீவிரமடைந்ததால் பல சாலைகளில்…

Read More

உலகம் முழுவதும் X தடை

சமூக ஊடக தளம் X உலகளாவிய அளவில் பெரும் செயலிழப்பை சந்தித்து வருகிறது. ஆயிரக்கணக்கான பயனர்கள் தங்களின் சிக்கல்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த தடங்கல் Android, iOS மொபைல் செயலிகளையும், வலைத்தளத்தையும் (x.com) ஒரே நேரத்தில் பாதித்து வருகிறது. மாலை 5.30 மணி நிலவரப்படி, தளத்தில் உள்நுழைய முடியாதது மற்றும் உள்ளடக்கங்களைப் பிரவுஸ் செய்ய முடியாதது உள்ளிட்ட காரணங்களுக்கு 11,300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ளன. இந்த உலகளாவிய தடங்கல் பல்வேறு நாடுகளின் பயனர்களை தங்கள் கணக்குகளுக்கு அணுக…

Read More

ராஜமௌலி – மகேஷ் பாபு ‘வாரணாசி’ படத்தின் பட்ஜெட் 1200 கோடி?

‘பாகுபலி’, ‘RRR’ போன்ற இந்திய சினிமாவின் மிகப்பெரிய பிரமாண்டங்களை உருவாக்கிய இயக்குனர் S.S. ராஜமௌலியின் அடுத்த படைப்பாக உருவாகி வரும் ‘வாரணாசி’ திரைப்படத்தைச் சுற்றி புதிய தகவல்கள் வெளியாகி, திரையுலகில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இணையத்தில் வைரலாகும் தகவல்களின் படி, இந்த படத்தின் தயாரிப்பு செலவு, நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பளம் உள்ளிட்ட மொத்தம் சுமார் ரூ. 1200 கோடி வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய திரைப்பட வரலாற்றில் உருவாகும் மிக உயர்ந்த பட்ஜெட்டான படங்களில் ‘வாரணாசி’வும்…

Read More

டெம்பா பவுமா – தோல்வியே சந்திக்காத டெஸ்ட் கேப்டன்!

தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா, தனது டெஸ்ட் தலைமையில் இதுவரை ஒரு தோல்வியும் காணாத கேப்டனாக புதிய உயரங்களைத் தொட்டுள்ளார். இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் 30 ரன்கள் வித்தியாசத்தில் கிடைத்த த்ரில் வெற்றியுடன், அவரது சாதனை மேலும் வலுவடைந்துள்ளது. 2023 முதல் தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணியை வழிநடத்தி வரும் பவுமா, முதல் கறுப்பின டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்று வரலாற்றுப் பொறுப்பை சுமப்பதோடு பல முக்கிய சாதனைகளையும் படைத்துள்ளார். இந்த ஆண்டின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை…

Read More

15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்கா வெற்றி – இந்தியா ஏன் தோற்றது?

தென்னாப்பிரிக்கா அணி இந்தியா சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள நிலையில், 2 டெஸ்ட், 3 ஓடிஐ மற்றும் 5 டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் டெஸ்ட் நவம்பர் 14 அன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இரண்டரை நாட்களில் முடிவுக்கு வந்த இந்த டெஸ்டில், தென்னாப்பிரிக்கா இந்தியாவை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்திய மண்ணில் 15 ஆண்டுகள் கழித்து தென்னாப்பிரிக்கா வெற்றி சாதித்துள்ளது. இந்தியாவும் 13 ஆண்டுகளுக்குப்…

Read More

கேட்பாரற்று கிடந்த திருபுவனை அரசு பள்ளி விளையாட்டு மைதானம் – MLA பா. அங்காளன் உடனடி நடவடிக்கை

இன்று (17.11.2025) திருபுவனை தொகுதிக்குட்பட்ட கலிதீர்த்தாள் குப்பம்,, கலைஞர் கருணாநிதி அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள காலை மற்றும் மாலையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மக்கள் கூடுகின்றனர். அப்படி இருக்கையில் விளையாட்டு மைதானத்தை சுற்றி செடி கொடிகள், புதர் மண்டி, விஷ ஜந்துக்கள் நடமாடும் நிலை உள்ளதை கண்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் அவர்கள், அங்காளன் MLA-வை சந்தித்து விளையாட்டுத்…

Read More

ராஜமவுலி இயக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு

எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் மிகப்பெரும் படமான SSMB29 குறித்து முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த இந்த பான்-இந்தியா படத்திற்கு அதிகாரப்பூர்வமாக ‘வாரணாசி’ என்ற தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய திரைப்பட உலகில் மிகப் பெரிய திட்டங்களில் ஒன்றாக உருவாகி வரும் இந்த படம், அறிவிக்கப்பட்ட முதல் அப்டேட்டிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜமவுலி தனது தனித்துவமான கதை சொல்லும் முறைக்குப் பெயர் பெற்றவர் என்பதை கருத்தில் கொண்டால்,…

Read More

ஜனநாயகன் கிளைமாக்ஸ் குறித்து விஜய் கொடுத்த ஸ்பெஷல் இன்புட்ஸ்!

நடிகர் விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் இன்னும் இரண்டு மாதங்களில் திரையரங்குகளைச் சூடேற்ற உள்ள நிலையில், படத்தின் கிளைமாக்ஸ் குறித்து நடிகர் விஜய் தனிப்பட்ட முறையில் இயக்குநர் ஹெச். விநோதுடன் கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படம் முடிந்தவுடன் ரசிகர்கள் திரையரங்கில் இருந்து மகிழ்ச்சியுடன் வெளியேற வேண்டும் என்பதே விஜயின் முக்கிய விருப்பமாக கூறப்படுகிறது. ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து, போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கிளைமாக்ஸ் காட்சியை இன்னும் உணர்ச்சிகரமாக மாற்றும் முயற்சியில்…

Read More

ஜடேஜாவை ஏன் விற்றார்கள்? – மனம் திறந்து பேசிய CSK நிர்வாக இயக்குநர்

சிஎஸ்கே அணியின் முக்கிய வீரரான ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரணை விற்று, அதற்குப் பதிலாக சஞ்சு சாம்சனை அணியில் சேர்த்தது குறித்து ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பி வந்த நிலையில், CSK நிர்வாக இயக்குநர் காசி விஸ்வநாதன் இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். “CSK எடுத்த மிகவும் கடினமான முடிவு…” வீடியோவில் அவர் கூறியதாவது: “ஜடேஜாவை விற்பது CSK வரலாற்றில் மிகக் கடினமான முடிவுகளில் ஒன்று. 2012 முதல் அணியின் முக்கிய தூணாக…

Read More

“தோனியா? கோலியா?” இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பதில்

13-வது மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. தென் ஆப்பிரிக்காவை 52 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி, 52 ஆண்டுகால உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை இந்திய பெண்கள் அணி கைப்பற்றியது. இந்த வரலாற்று வெற்றி நாடு முழுவதும் பெரும் கொண்டாட்டத்தைக் கிளப்பியுள்ளது. இந்த வெற்றியை முன்னிட்டு கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு சென்னை நகரிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் விசேஷ பாராட்டு விழா இன்று…

Read More

தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் அடுத்த சில நாட்களில் மழை அதிகரிக்கும் நிலையில், சென்னையிலும் இன்று மற்றும் நாளை மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் இலங்கை மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் தாக்கத்தால் மாநிலம் முழுவதும் மழை செயல்பாடு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (14.11.2025) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக திருநெல்வேலி…

Read More

திருச்சி–புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் விமானம் அவசர தரையிறக்கம்

திருச்சி–புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மதியம் 1 மணியளவில் அம்மா சத்திரம் அருகே சிறிய ரக பயிற்சி விமானம் திடீரென அவசரமாக தரையிறங்கியதால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாகவும், முன்பக்க இறக்கை உடைந்ததாலும், எரிபொருள் லீக் ஆனதாலும் பைலட் அவசரமாக விமானத்தை நெடுஞ்சாலையில் பாதுகாப்பாக தரையிறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பைலட் – பயிற்சி பெறுபவர் இருவரும் பாதுகாப்பாக மீட்பு விமானம் தரையிறங்கிய உடனே அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்ததை அடுத்து…

Read More

ரஜினி – கமல் ரசிகர்கள் ஷாக்! ‘தலைவர் 173’ படத்திலிருந்து சுந்தர்.சி திடீர் விலகல் – காரணம் என்ன?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகவிருந்த ‘தலைவர் 173’ திரைப்படத்தை இயக்குநர் சுந்தர்.சி இயக்குவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், எதிர்பாராத திருப்பமாக சுந்தர்.சி விலகுவதாக அறிவித்து, கோலிவுட் முழுவதையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். ரஜினி – கமல் – சுந்தர்.சி எனும் மூவரின் கூட்டணி அறிவிக்கப்பட்டபோது, ரசிகர்களிடையே பெரும் ஆர்வம் உருவாகியது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் உருவாகவிருந்த இந்த மெகா ப்ராஜெக்ட் மீது எதிர்பார்ப்பு வானளவு உயர்ந்திருந்தது. இவர்கள் மூவரும் சந்தித்த…

Read More

நிதிஷ் ரெட்டியை கழட்டிவிட்ட கம்பீர்… பிளேயிங் லெவனில் இவருக்கும் இடமில்லை

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நாளை (நவம்பர் 14) கொல்கத்தாவின் புகழ்பெற்ற ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. தென்னாப்பிரிக்க அணியை டெம்பா பவுமா தலைமையேற்கிறார். இந்நிலையில், சுப்மான் கில் தலைமையிலான இந்திய அணி சுமார் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு ஈடன் கார்டன்ஸில் டெஸ்ட் ஆட உள்ளது. கடைசியாக 2019ஆம் ஆண்டு இங்கு வங்கதேசத்துக்கு எதிராக பிங்க் பால் டெஸ்ட் ஆடி வெற்றி பெற்றது. ரெட் பால் டெஸ்ட் பார்த்தால்,…

Read More

RR கேப்டன் ஆகும் ஜடேஜா? – ராஜஸ்தான் ராயல்ஸ் முடிவு என்ன?

2026ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான மினி ஏலம் டிசம்பர் 14, 15 தேதிகளில் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு அனைத்து அணிகளும் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. சில முக்கிய வீரர்கள் அணிகள் மாறும் நிலை ஏற்பட்டிருப்பதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் அதிகம் பேசப்படும் விஷயம் — ரவீந்திர ஜடேஜா மற்றும் சஞ்சு சாம்சன் இடையேயான டிரேட் விவகாரம். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மேலாண்மையுடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக சஞ்சு…

Read More

பராமரிப்பு பணி: சென்னையின் சில பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை

சென்னை: தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் (TANGEDCO) வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, சென்னையில் பராமரிப்பு பணிகளுக்காக நாளை மறுநாள் (15.11.2025, சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை சில பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும். அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பராமரிப்பு பணி மதியம் 2 மணிக்குள் முடிந்தால், மின் விநியோகம் அதற்கு முன்னரே மீண்டும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகள்: திருமுல்லைவாயல், லட்சுமிபுரம், பெரியார்நகர், கோனிமேடு, கங்கைநகர், சரத்கண்டிகை,…

Read More

ஆட்சியை பிடிப்பது யார்..? பீகாரில் நாளை வாக்கு எண்ணிக்கை!

பீகார்: பீகார் சட்டசபைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. மொத்தம் 243 தொகுதிகளைக் கொண்ட மாநிலத்தில், முதல் கட்டமாக கடந்த 6ஆம் தேதி 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. இதில் 65.09% வாக்குகள் பதிவாகின. அதனைத் தொடர்ந்து, மீதமுள்ள 122 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக நேற்று முன்தினம் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் 69% வாக்குகள் பதிவாகியுள்ளன. முக்கியமாக, முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக உள்ள…

Read More

புதுச்சேரியில் செருப்பு வாங்குவது போல் வந்து மிரட்டிய ரௌடி!

புதுச்சேரி: புதுவையின் முத்தியால்பேட்டை, காந்திவீதியில் செருப்புகள் விற்பனை கடைக்கு வந்த நபர், செருப்பை எடுத்துக்கொண்டு பணம் தர முடியாது, ஓசியில் தர வேண்டும் என கேட்டு பணியில் இருந்த பெண்ணை மிரட்டியுள்ளார். அப்பொழுது பணம் கொடுத்தால்தான் செருப்பு தருவேன் எனக் கூறியதால் ஆத்திரமடைந்த வாலிபர் மறைத்து வைத்திருந்த கத்தியால் கடையின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியுள்ளார். கடையை கத்தியால் தாக்கிய நபர் அதிக போதையில் இருந்ததாக கூறப்படுகிறது, இங்கு போதை பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது….

Read More

கும்கி 2 திரைப்பட வெளியீட்டுக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள கும்கி 2 திரைப்படம் வெளியாகுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவிட்டுள்ளது. நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் 2012ஆம் ஆண்டு வெளியான கும்கி திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக, 13 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குநர் பிரபு சாலமன் தயாரித்து இயக்கியுள்ள கும்கி 2 திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி வெளியிடப்படவிருந்தது. இந்நிலையில், சினிமா பைனான்சியர் சந்திர பிரகாஷ் ஜெயின் அவர்கள், கும்கி 2 திரைப்படத்தை…

Read More

தகாத உறவு தகராறில் பெண்ணை வெட்டிய இளைஞர்

திருப்பூர்:திருப்பூர் மாவட்டம் பெருந்தொழு பகுதியில் தகாத உறவை மையமாகக் கொண்ட தகராறில் பெண்ணை வெட்டி காயப்படுத்திய இளைஞர், பின்னர் போலீசில் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெருந்தொழுவைச் சேர்ந்த சித்ரா (36) என்பவர், 2020 ஆம் ஆண்டு கணவர் ஜான்சன் கொரோனாவால் உயிரிழந்ததையடுத்து தனது மகளுடன் தனியாக வசித்து வந்தார். இதன் போது அருகில் வசிக்கும் மெக்கானிக் கருப்பண்ணன் என்பவருடன் அவருக்கு நெருக்கமான பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்த இந்த உறவில் அடிக்கடி…

Read More

இந்திய அணியில் ஷமி ஏன் இல்லை? – தேர்வுக்குழுவிற்கு கங்குலி கேள்வி!

ஹைதராபாத்:இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் சிறப்பான ஃபார்ம் மற்றும் ஃபிட்னஸைக் கருத்தில் கொண்டு, அவரை அனைத்து போட்டித் தொடர்களிலும் விளையாட வைக்கலாம் என முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணி விரைவில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் மோதவுள்ளது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நவம்பர் 14 அன்று தொடங்கி நவம்பர் 26 அன்று நிறைவடைகிறது. பின்னர் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களும்…

Read More

சம்பளம் வழங்காததால் பாசிக் அலுவலகக் கார் ஏலம் – நீதிமன்ற உத்தரவு!

புதுச்சேரி: சம்பளம் வழங்காத விவகாரத்தில், புதுச்சேரி பாசிக் (PASIC) அலுவலகத்தின் காரை ஏலம் விட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அருகே பாசிக் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. 2017–2018 ஆண்டுகளில், தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தைச் சேர்ந்த பாதுகாப்பு பணியாளர்கள் அங்கே பணியாற்றினர். ஆனால், அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல், மொத்தம் ரூ. 27.33 லட்சம் நிலுவையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த நிறுவனத்தின் பொது மேலாளர் புதுச்சேரி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த…

Read More

தோட்டா தரணிக்கு செவாலியர் விருது- இந்திய கலை உலகுக்கு பெருமை!

சென்னை: பிரபல கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு பிரான்ஸ் அரசின் ‘செவாலியர்’ (Chevalier de l’Ordre des Arts et des Lettres) விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதை இதற்கு முன்னர் சிவாஜி கணேசன், கமல்ஹாசன், பாலமுரளிகிருஷ்ணா, ஐஸ்வர்யா ராய், கல்கி கோச்சலின் ஆகியோர் பெற்று இருந்தனர். இப்போது தோட்டா தரணி ஆறாவது இந்தியராக இணைந்துள்ளார். ஆந்திராவைச் சேர்ந்த தரணியின் தந்தை தோட்டா வெங்கடேஸ்வர ராவ், 1950களில் பிரபலமான ஆர்ட் டைரக்டர். சிறு வயதிலேயே கலை…

Read More

டெல்லி கார் குண்டு வெடிப்பு நடந்தது ஏன்?

டெல்லியில் நடந்த கார் குண்டு வெடிப்பு விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்; மேலும் 25 பேர் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு, JCM மக்கள் மன்றம் சார்பில் மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்தப்பட்டது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட சமூக சேவகர் சார்லஸ் மார்டின் பேசுகையில், “ஒரு இந்தியராக, உயிரிழந்த அனைவருக்கும் இரங்கல் தெரிவிப்பது நமது கடமை. இதன் காரணமாக இம்மெழுகுவர்த்தி ஊர்வலத்தை…

Read More

பிகார்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் – என்.டி.ஏ முன்னிலை என கணிப்பு

பிகார் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இரண்டு கட்டங்களாக (நவம்பர் 6 மற்றும் 11) நடைபெற்றது. மொத்தம் 243 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 அன்று நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ) மற்றும் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மகா கூட்டணி மோதியன. பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன் சுராஜ் கட்சியும் களத்தில் போட்டியிட்டது. தேர்தலுக்குப் பிந்தைய பல கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. அவை அனைத்தும் என்.டி.ஏ முன்னிலை பெற்றிருப்பதாகச்…

Read More

புதுச்சேரியில் உலகளாவிய அமைதி தின விழா நடிகை நமீதா கலந்து சிறப்பிப்பு

புதுச்சேரி:உலகளாவிய அமைதி தினத்தையொட்டி புதுச்சேரியில் சிறப்பான விழா நடைபெற்றது. திருமூத்திமலை உலக சமாதான அறக்கட்டளை ஏற்பாட்டில், “தனிநபர் அமைதி – உலக அமைதி” என்ற தலைப்பில் இந்த விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் புதுவை கலை பண்பாட்டுத்துறை அமைச்சர் திருமுருகன், நடிகை நமீதா, மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய தருணமாக, சரியாக காலை 11.11 மணிக்கு, அனைவரும் உலக அமைதிக்காக ஒரு நிமிடம் அமைதியாக தவமிருந்தனர். விழாவை அறக்கட்டளை நிறுவனர் குருமகான்…

Read More

டெல்லி கார் வெடிப்பு- புதுச்சேரியில் ஜே.சி.எம். மக்கள் மன்றத்தின் மெழுகுவர்த்தி ஊர்வலம்

டெல்லியில் நிகழ்ந்த துயரமான கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், புதுச்சேரி ஜே.சி.எம். மக்கள் மன்றத்தினர் இன்று அமைதி மெழுகுவர்த்தி ஊர்வலத்தை நடத்தினர். அண்ணா சிலை அருகில் தொடங்கிய இந்த ஊர்வலத்திற்கு சமூக சேவகர் சார்லஸ் மார்டின் அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார். அண்ணா சாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாகச் சென்று, தூய ஜென்மராக்கினி அன்னை பேராலயம் அருகே ஊர்வலம் நிறைவுற்றது. சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இந்த அமைதி…

Read More

ஷ்ரேயாஸ் ஐயர் ஆடுவது சந்தேகம்!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற உள்ள ஒருநாள் (ODI) தொடரில் இந்திய அணியின் நடுத்தர வரிசை வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் பங்கேற்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக ஷ்ரேயாஸ் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஓய்வில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான வரவிருக்கும் ஒருநாள் தொடரில் அவர் ஆடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மருத்துவ அறிக்கைகள் மற்றும் தேசிய…

Read More

புதுச்சேரியில் ரூ.30 லட்சம் மோசடி வழக்கு – குற்றவாளிகளுக்கு 5 மாத சிறைத்தண்டனை

புதுச்சேரி:பிரபல கட்டுமான நிறுவனத்தின் பெயரில் போலியாக விளம்பரம் செய்து, ஒப்பந்ததாரரிடம் ரூ.30 லட்சம் மோசடி செய்த வழக்கில் குற்றவாளிகளுக்கு ஐந்து மாத சிறைத்தண்டனையும், தலா ரூ.20,000 அபராதமும் விதித்து புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த கட்டுமான ஒப்பந்ததாரர் சேதுராமன், தனியார் நிறுவனத்தின் பெயரில் Facebook-ல் வெளியான TMT கம்பிகள் பற்றிய விளம்பரத்தை நம்பி, மொத்தம் ரூ.30,97,000 பணத்தை செலுத்தி ஆர்டர் செய்துள்ளார். ஆனால், கம்பிகள் கிடைக்காததால் அவர் சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தார்….

Read More

நேபாள நாட்டில் நடைபெற்ற SGADF 2025 விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்று கோவை மாணவர்கள் சாதனை

கோவை: நேபாளத்தில் கடந்த 4 தேதி முதல் 8 தேதி வரை, ரங்கசாலா ஸ்டேடியத்தில், சர்வதேச அளவிலான இன்டோ நேபாள் SGADF 2025 விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் தடகளம், கபடி, கிரிக்கெட், சிலம்பம், யோகா, கராத்தே, கைப்பந்து, கூடைப்பந்து, உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கிய போட்டிகள் நடைபெற்றன. சுமார் 1000 க்கும் மேற்பட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். இந்திய சார்பாக கோவை, வடவள்ளி பகுதியை சேர்ந்த வருண்…

Read More

ஏன் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது?

ஒவ்வோர் ஆண்டும் ஐப்பசி பௌர்ணமி நாளில், அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு அன்னாபிஷேகம் நடைபெறுவது பாரம்பரிய வழக்கம். உயிர்களுக்கு உணவளிக்கும் சிவபெருமானுக்கு நன்றி செலுத்தும் விதமாக, சிவலிங்கத்தின் மீது வெந்த சாதம் வைத்து வழிபடுவதே அன்னாபிஷேகம் ஆகும். அன்னம் பரப்பிரம்மம் எனப்படும் உணவு, உடலையும் உள்ளத்தையும் வளர்க்கும் புனிதம் வாய்ந்தது. அதனால், அதை ஆண்டவனுக்கு படைத்து பிரசாதமாக எடுத்துக் கொள்வது பாவநிவாரணமாகக் கருதப்படுகிறது. ஐப்பசி பௌர்ணமியின் சிறப்பு:இந்த நாளில் சந்திரன் தன் சாபத்திலிருந்து விடுபட்டு பதினாறு கலைகளுடன் முழுப்…

Read More

வில்லியனூரில் JCM மக்கள் மன்ற அலுவலகத்தை திறந்து வைத்த சமூக சேவகர் சார்லஸ் மார்டின்

புதுச்சேரி:வில்லியனூர் பகுதியில் JCM மக்கள் மன்ற அலுவலகம் திறப்பு விழா இன்று சமூக சேவகர் சார்லஸ் மார்டின் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. வில்லியனூர் புறவழிச்சாலையில் சமூக சேவகர் சார்லஸ் மார்டினை வரவேற்க மக்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். பின்னர், வில்லியனூர் JCM மக்கள் மன்ற தலைவர் பூக்கடை ரமேஷ் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களில் பேரணியாக இணைந்து, சார்லஸ் மார்டினை மக்கள் மன்ற அலுவலகத்திற்குக் கொண்டுசென்றனர். அதன் பிறகு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சமூக…

Read More

குப்பை கொட்டுவதை புகைப்படம் எடுத்து அனுப்பினால் 2000 ரூபாய் சன்மானம்

அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலையில் குப்பைகள் மற்றும் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானதை தொடர்ந்து உள்ளாட்சி துறையின் உத்தரவின் பேரில் உழவர்கரை நகராட்சி கடந்த வாரம் அங்கு கொட்டப்பட்ட குப்பைகளை கிரீன் வாரியர் நிறுவனம் மூலம் அகற்றி கட்டிட கழிவுகளை சமன் செய்து குப்பைகள் கொட்டுவதை தவிர்க்கும் வகையில் அப்பகுதிகளில் குப்பைகள் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அப்பகுதியில் வாகனங்கள் மூலம் குப்பைகள் கொட்டப்படுவதாக புகார் வந்ததை தொடர்ந்து உடனடியாக அவற்றை சுத்தம் செய்யும்…

Read More

மழைநீர் வடிகால் பணிகள்: சரியாக மூடப்படாத சாலைகளால் மக்கள் அவதி

சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளின் காரணமாக பல சாலைகள் தோண்டப்பட்ட நிலையில், அவை முழுமையாக மூடப்படாததால் பொதுமக்கள் கடும் சிரமம் அனுபவித்து வருகின்றனர். இதை சரிசெய்ய மாநகராட்சி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பல கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் திட்டத்தின் கீழ் நகரின் பல பகுதிகளில் சாலைகள் தோண்டப்பட்டுள்ளன. ஆனால், பணிகள் முடிந்த பின்னரும் சாலைகள் சரிவர சீரமைக்கப்படாமல் இருப்பது போக்குவரத்துக்கும், நடைபாதை…

Read More

IND vs AUS 5th T20I: மழையால் கைவிடப்பட்ட போட்டி: தொடரை கைப்பற்றிய இந்தியா!

பிரிஸ்பேனில் நடைபெற்ற இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 5வது மற்றும் இறுதி டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இதன் விளைவாக, 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்று அசத்தியது. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இந்த டி20 தொடரில், முதல் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது போட்டியை ஆஸ்திரேலியா வென்றது. ஆனால், ஹோபார்ட் மற்றும் குயின்ஸ்லாந்தில் நடைபெற்ற மூன்றாம் மற்றும் நான்காம் போட்டிகளில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதனால், தொடர் முடிவுக்கு முன்னரே…

Read More

சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்க சிஎஸ்கே பெரிய முடிவு எடுக்கத் தயாரா?

ஐபிஎல் 2026 ஏலம் நெருங்கி வரும் நிலையில், டிரேடிங் தொடர்பான செய்திகள் கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதில் முக்கியமாக பேசப்படுவது — ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள். சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியை விட்டு வெளியேற விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தல தோனிக்குப் பிந்தைய திறமையான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை தேடி வரும் சிஎஸ்கே நிர்வாகம், அவரை அணியில் சேர்க்க…

Read More

ஜெய் ஷா தலையீட்டுக்கு பின் பிரதிகாவிற்கு உலகக்கோப்பை பதக்கம்!

கணுக்கால் காயம் காரணமாக அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளில் விளையாட முடியாத இந்திய தொடக்க வீராங்கனை பிரதிகா ராவலுக்கு, உலகக்கோப்பை வெற்றிக்கு பிறகு முதலில் பதக்கம் வழங்கப்படவில்லை. இதனால் ரசிகர்களிடையே ஏமாற்றம் ஏற்பட்டது. ஆனால், ஜெய் ஷா தலையீட்டின் மூலம் ஐசிசியுடன் பேசி, பிரதிகாவிற்கும் பதக்கம் கிடைத்துள்ளது. பிரதிகா அதை பெற்றபோது, “அந்த தருணம் என் மனதைக் கனக்க வைத்தது… நான் பொதுவாக அழுவதில்லை, ஆனால் அந்த பதக்கத்தை பார்த்தவுடன் உண்மையிலேயே கண்ணீர் வந்தது,” என அவர் உணர்ச்சியுடன்…

Read More

மீண்டும் காயம் – ரிஷப் பண்ட் ஆட்டத்தை பாதியில் விட்டு வெளியேறினார்!

பெங்களூருவில் நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதிரான இரண்டாவது நான்கு நாள் டெஸ்ட் போட்டியில் இந்தியா ‘ஏ’ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மீண்டும் காயமடைந்து ஆட்டத்தை பாதியில் விட்டு வெளியேறியுள்ளார். டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா ‘ஏ’ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா ‘ஏ’ அணி, துருவ் ஜூரல் விளாசிய 132 ரன்களின் ஆட்டத்தின் மூலமாக முதல் இன்னிங்ஸில் 255 ரன்கள் எடுத்தது. இதற்கு பதிலாக தென்னாப்பிரிக்கா ‘ஏ’…

Read More

திருச்செந்தூர் கடற்கரையில் இரவு தங்குவதற்கு தடை – போலீசார் கடும் நடவடிக்கை!

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இங்கு சூரபத்மனை வதம் செய்த இடமாகவும், தெய்வானையுடன் திருமணம் நடைபெற்ற புண்ணிய ஸ்தலமாகவும், கடற்கரையை ஒட்டிய ஒரே தலமாகவும் திருச்செந்தூர் சிறப்புபெற்றுள்ளது. சமீப ஆண்டுகளில் ஜோதிடர் ஒருவர் கூறியதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவலின்படி, “ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளில் இரவு கடற்கரையில் நிலவொளியில் தங்கி, மறுநாள் அதிகாலை புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தால்…

Read More

ஆன்லைன் வேலைவாய்ப்பு மோசடி – ஏமாற்றத்தால் மனவேதனையில் இளம்பெண் உயிரிழப்பு

உத்தரப் பிரதேசம் ஜான்சியில் ஆன்லைன் வேலைவாய்ப்பு மோசடியில் சிக்கிய இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு ஜான்சி மாவட்டம் பெத்வா நதிக்கரையில் ஒரு பெண்ணின் உடல் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில், அந்த பெண் 21 வயதான பாவ்னா பால் என அடையாளம் காணப்பட்டார். அவர் காணாமல் போனதாக அவரது கணவர் ஷேர் சிங் முன்பு புகார் அளித்திருந்தார். சிசிடிவி காட்சிகள் மூலம் பாவ்னா கோவிலுக்குச் சென்ற வழி கண்காணிக்கப்பட்டு,…

Read More

புதுச்சேரி தாவரவியல் பூங்கா உல்லாச ரயில் பழுதால் சிறுவர்கள் ஏமாற்றம்!

புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் சிறுவர்களுக்காக 1974ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட உல்லாச ரயில், கடந்த 50 ஆண்டுகளாக சிறுவர் மற்றும் சுற்றுலா பயணிகளின் பொழுதுபோக்காக இருந்து வந்தது. சமீபத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.13 கோடி செலவில் சுதேசி மில் வளாகம் மற்றும் தாவரவியல் பூங்கா புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோல் ரூ.150 கோடி செலவில் பேட்டரி மூலம் இயங்கும் புதிய உல்லாச ரயில் பூங்காவுக்கு வழங்கப்பட்டது. புதிய வடிவில் சீரமைக்கப்பட்ட பூங்கா கடந்த அக்டோபர் 27ஆம்…

Read More

பிகார் பேரவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு 64.66%!

பிகார் மாநிலத்தில் முதல்கட்டமாக நடைபெற்ற பேரவைத் தேர்தலில் 64.66 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. 18 மாவட்டங்களைச் சேர்ந்த 121 தொகுதிகளில் இன்று (நவம்பர் 6) வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 243 தொகுதிகள் கொண்ட பிகார் பேரவைக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டத் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா உள்ளிட்ட 1,314 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தலைமைத் தேர்தல் அலுவலர் வினோத் சிங் குஞ்சியால் தெரிவித்ததாவது: மாலை 6 மணி…

Read More

14 ஆண்டுகளாக பேருந்து வசதி இன்றி தவிக்கும் கோர்க்காடு கிராம மக்கள்!

புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள கோர்க்காடு கிராமம் கடந்த 14 ஆண்டுகளாக பேருந்து சேவையின்றி பெரும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.சுமார் 4,000 குடும்பங்கள் வசிக்கும் இந்த பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று மட்டுமே பேருந்து சேவையைப் பயன்படுத்த வேண்டிய நிலை தொடர்கிறது. இரவு நேரங்களில் தெருவிளக்குகள் இல்லாததால், பேருந்திலிருந்து இறங்கி நடந்து செல்லும் மக்கள் நாய்களின் தொல்லையும் சமூகவிரோதிகளின் அச்சுறுத்தல்களும் எதிர்கொள்கின்றனர். இதுகுறித்து பலமுறை…

Read More

புதுச்சேரி தனியார் மருத்துவக் கல்லூரியில் பாலியல் சீண்டல் பரபரப்பு – நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீர் போராட்டம்!

புதுச்சேரி கனகசெட்டிகுளம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பிம்ஸ் (PIMS) மருத்துவக் கல்லூரி வளாகத்தில், 10-க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தக் கல்லூரியின் செவிலியர் பிரிவில் பயிலும் மாணவிகள் மருத்துவமனைப் பிரிவில் பயிற்சிக்காகச் செல்லும் போது, எக்ஸ்ரே பிரிவில் பணிபுரியும் இரண்டு டெக்னீசியன்கள் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மாணவிகள் புகார் அளித்துள்ளனர். புகார் கிடைத்ததையடுத்து, கல்லூரியின்…

Read More

கோயிலில் தொலைந்த 4 பவுன் தாலி செயினை கண்டுபிடித்த மேஸ்திரிக்கு பாராட்டுகள்!

புதுச்சேரி பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோயிலில் நடைபெற்ற ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கடலூர் மஞ்சகுப்பத்தைச் சேர்ந்த பாலசுந்தரத்தின் மனைவி கீதா தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்தபோது, அவரின் கழுத்திலிருந்த 4 பவுன் தாலி செயின் காணாமல் போனது தெரியவந்தது. இதையடுத்து அவர் உடனடியாக கோயில் வளாகத்தில் இருந்த பக்தர்கள் மற்றும் பாதுகாப்பு பணியிலிருந்த காவலர்களிடம் தகவல் தெரிவித்தார். அனைவரும் இணைந்து நகையைத் தேடும் பணியில்…

Read More

பகலில் பெயிண்டர் – இரவில் வாழை திருடன்! புதுச்சேரி போலீசாரின் சோதனையில் சிக்கினார்

புதுச்சேரி கூனிச்சம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவர் தனது தோட்டத்தில் அடிக்கடி வாழைத்தார் திருட்டு நடைபெறுவதாக காவல்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து திருக்கனூர் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் செட்டிபட்டு, சோம்பட்டு உள்ளிட்ட பல கிராமங்களிலும் விவசாய நிலங்களில் இருந்து வாழைத்தார்கள் அடிக்கடி திருடப்படுவதாக தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஒரு இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் வாழைத்தார்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வாகன ஓட்டியை கைது செய்து விசாரித்ததில்,…

Read More

வீராம்பட்டினம் ஜீவரத்தினம் பெண்கள் நடுநிலைப் பள்ளியில் தூய்மை பணியில் JCM மக்கள் மன்றம்!

வீராம்பட்டினம் ஜீவரத்தினம் பெண்கள் நடுநிலைப் பள்ளி வளாகத்தில் இன்று, பள்ளி மாணவிகளும் JCM மக்கள் மன்றம் நிர்வாகிகளும் இணைந்து தூய்மை பணியில் சிறப்பாக ஈடுபட்டனர். பள்ளி வளாகம் முழுவதும் உள்ள குப்பைகள், உலர்ந்த இலைகள் மற்றும் கழிவுகள் அனைத்தும் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன. இந்தப் பணிகள் அனைத்தும் எங்களின் மாண்புமிகு தலைவர் JCM SIR அவர்களின் வழிகாட்டுதலின்படி மேற்கொள்ளப்பட்டன.அவரின் சமூக நல நோக்கங்களும், மக்களுக்கான அர்ப்பணிப்பும் எங்களுக்கெல்லாம் ஒரு ஊக்கமாக இருந்து வருகின்றன. மேலும், எங்கள் JCM…

Read More

முன்னாள் அமைச்சர் ப. கண்ணனின் 2ஆம் ஆண்டு நினைவு நாள் – JCM மக்கள் மன்றம் மரியாதை

புதுச்சேரி:முன்னாள் அமைச்சர், சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய ப. கண்ணனின் 2ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி மரியாதை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில், சமூக சேவகர் சார்லஸ் மார்டின் சார்பில், JCM மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார் புதுச்சேரி வைஷியால் வீதியில் உள்ள கண்ணனின் இல்லத்திற்கு சென்று அவரது உருவப்படத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, கண்ணனின் மகன் விக்னேஷ் கண்ணனிடம் ரீகன் ஜான்குமார் சந்தித்து உரையாடினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான…

Read More

பல ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லை – புதுச்சேரி அரசு கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

புதுச்சேரி:புதுச்சேரி அரசு கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள், கடந்த 15 ஆண்டுகளாக பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு வழங்கப்படாததை கண்டித்து, தாகூர் கலைக்கல்லூரி வளாகத்தில் காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதுச்சேரி அரசின் கீழ் புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் மொத்தம் 7 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் சுமார் 350 பேராசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் 2002 முதல் 2018 வரை டெல்லி யூனியன்…

Read More

வாடிப்பட்டி அருகே சாலையில் நெல் குவியல்கள் – அரசு கொள்முதல் நிலைய தாமதத்தால் விவசாயிகள் வேதனை

மதுரை:மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நெல் அறுவடை செய்யப்பட்டு கொள்முதல் நிலையத்தில் சேர்க்க முடியாத நிலையில், சாலையோரம் நெல் மூட்டைகள் குவிந்து கிடப்பதால் விவசாயிகள் கடும் அவதியில் உள்ளனர். வாடிப்பட்டி அருகிலுள்ள தனிச்சியம் கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடை பூர்த்தியடைந்த நிலையில், அந்தப் பகுதியில் தற்காலிக அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. தனிச்சியம், கொண்டயம்பட்டி, செம்புகுடிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 800 ஏக்கருக்கு மேற்பட்ட நெல் அரசு கொள்முதல் நிலையத்துக்குக்…

Read More

மதுரையில் வைகை ஆற்றில் கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி மாயம்

மதுரை:மதுரை சமயநல்லூர் அருகே வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பரவை அருகே சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த ராஜா என்பவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அவரது இரண்டாவது மகன் சந்தோஷ் (18) கல்லூரி மாணவர் ஆவார். அவர் தந்தையுடன் சேர்ந்து டாடா ஏஸ் வாகனத்தை கழுவுவதற்காக வைகை ஆற்றிற்கு சென்றிருந்தார். வாகனத்தை கழுவிய பிறகு, சந்தோஷ் தனியாக ஆற்றில் குளிக்கச் சென்றார். அப்போது அருகில் இருந்தவர்கள் “நீரின் ஓட்டம்…

Read More

பீஹாரில் நாளை முதல் கட்ட சட்டசபை தேர்தல் – 18 மாவட்டங்களில் 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு

பாட்னா:பீஹார் மாநில சட்டசபை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. 18 மாவட்டங்களைச் சேர்ந்த 121 தொகுதிகளில் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை செலுத்தவுள்ளனர். பாதுகாப்பு காரணங்களால் பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் மத்திய பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. தேர்தல் கமிஷன் அனைத்து தொகுதிகளிலும் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. தற்போது பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் (JDU) – பா.ஜ. கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. மொத்தம் 243 தொகுதிகள் கொண்ட…

Read More

பா.ஜனதா என்னை இயக்கவில்லை – செங்கோட்டையன் பேட்டி

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட செங்கோட்டையன் எம். எல்.ஏ. கோவை விமான நிலையத்தில் இன்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவரிடம் நிருபர்கள் அரசியல் நிலவரம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இதற்கு செங்கோட்டையன் பதிலளித்து பேசுகையில் கூறியதாவது:- அ.தி.மு.க.வில் என்ன நடக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். என்னை பா.ஜனதா இயக்கு வதாக ஒருசிலர் குற்றம் சாட்டி வருகின்றனர். நான் 53 ஆண்டுகளாக அரசியலில் உள்ளேன். என்னை யாரும் இயக்க முடியாது. ஆலங்குளம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ….

Read More

முதல்வர் வேட்பாளராக விஜய் தேர்வு – த.வெ.க. செயற்குழு தீர்மானம்

சென்னை:தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று காலை மகாபலிபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது. தலைவர் விஜய் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், பொதுச்செயலாளர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், மற்றும் பொருளாளர் வெங்கட்ராமன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசுகையில் தலைமை நிலைய பொதுச்செயலாளர் என். ஆனந்த்,“2026ல் தளபதி விஜயை தமிழக முதல்வராக அமர்த்துவது நமது இலக்கு. மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை தரக்கூடிய ஒரே கட்சி த.வெ.க.,”…

Read More

தஞ்சையில் குருவை நெல் கொள்முதல் உற்சாகமாக நடைபெற்று வருகிறது!

தஞ்சை மாவட்டத்தில் குருவை நெல் சாகுபடி கொள்முதல் பருவம் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் 352 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது அதில் 291 நிலையங்கள் செயல்பாட்டில் இருந்து, நெல் கொள்முதல் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. கொள்முதல் நிலையங்களில் நெல் வாங்குவதற்கான தேவையாக 8,06,563 சாக்குகள் இருப்பில் உள்ளன. அதே நேரத்தில், சேமிப்புக்கிடங்குகளில் 12,73,628 சாக்குகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், கொல்கத்தா சனல் ஆலை வழியாக, மேற்குவங்க…

Read More

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் முன்னிட்டு திருப்பூர் ரயில் நிலையத்தில் பெரும் நெரிசல்!

திருப்பூர்:வரும் நவம்பர் 6ஆம் தேதி நடைபெற உள்ள பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திருப்பூரில் பணிபுரியும் பீகாரை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர். இதனால், திருப்பூர் ரயில் நிலையத்தில் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.தங்களின் வாக்குரிமையைச் செலுத்துவதற்காக விடுமுறை எடுத்த தொழிலாளர்கள், இன்று அதிகாலை முதலே ரயில் நிலையம் நோக்கி திரண்டனர். இதனால் பல்வேறு ரயில் நிலைய நுழைவாயில்கள், பிளாட்ஃபாரங்கள் மற்றும் முன்பதிவு மையங்கள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன.ரயில்களில் இடம்…

Read More

2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி வரலாற்று வெற்றி!

2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி வரலாற்று வெற்றி! 2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில், தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி வரலாற்றுச் சாதனை படைத்தது. இதன் மூலம் இந்தியா, மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் தனது முதல் உலகக் கோப்பை பட்டத்தை கைப்பற்றியது. நவம்பர் 2 அன்று மழையால் இரண்டு மணி நேரம் தாமதமாகத் தொடங்கிய இப்போட்டியில், டாஸ்…

Read More

மயிலாடுதுறையில் அதிர்ச்சி! மூதாட்டியின் கழுத்திலிருந்து செயின் பறிப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் நடந்த தைரியமான செயின் பறிப்பு சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரம் பகுதியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு 500 மீட்டர் தொலைவில் உள்ள அழகப்பா செட்டித்தெருவை சேர்ந்த 75 வயது மூதாட்டி சுசிலா என்றவர், வழக்கம்போல தெருமுனையிலுள்ள கோவிலுக்கு சென்று வீடு திரும்பி வந்துள்ளார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களில் ஒருவர், சுசிலாவின் பின்னால் நடந்து வந்து, அவர் கழுத்தில் இருந்த 12 சவரன் தங்கச்…

Read More

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சாட்சிகளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தும் சிபிஐ அதிகாரிகள்

கரூர்: நடிகர் விஜயின் மக்கள் சந்திப்பு பரப்புரையின் போது வேலுச்சாமி புரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த அதிர்ச்சிச் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.நீதிமன்ற உத்தரவின் பேரில் விசாரணை தொடங்கிய சிபிஐ, இதுவரை சம்பந்தப்பட்ட பல்வேறு சாட்சிகள் மற்றும் நிகழ்வில் ஈடுபட்டவர்களிடம் தொடர்ந்து தகவல் சேகரித்து வருகிறது. இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக சாட்சிகளிடம் விசாரணை நடத்துவதற்காக நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. கரூர்…

Read More