ssnews

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி: வரலாறு படைக்கும் நேரம்!

உலகக் கோப்பை கிரிக்கெட் அரங்கில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்படும் தருணம் நெருங்கி வருகிறது.2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் நவம்பர் 2 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நவி மும்பையில் உள்ள டாக்டர் டி.ஒய். பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் மோதவிருக்கின்றன. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற பாரம்பரிய வல்லணிகள் இல்லாத இந்த இறுதிப் போட்டி, இரு அணிகளுக்கும் முதல் முறையாக உலகக் கோப்பை வெல்லும் வாய்ப்பை வழங்கியுள்ளது….

Read More

தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழா – 48 வகை பொருட்களால் பெருவுடையாருக்கு பேரபிஷேகம்!

தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழா இன்று மிகுந்த ஆனந்தத்துடன், ஆன்மிக உற்சாகத்தில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பான நாளை முன்னிட்டு, காலை நேரத்தில் பெருவுடையார் (பிரகதீஸ்வரர்) அவர்களுக்கு 48 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. விபூதி, தைலக்காப்பு, சாம்பிராணி தைலம், மஞ்சள் பொடி, அரிசி மாவு, பஞ்சாமிர்தம், தேன், நெய், பசும்பால், தயிர், மாதுளை முத்து, பிலாச்சுளை, அன்னாசி, திராட்சை போன்ற பல்வேறு பொருட்களுடன் சொர்ணாபிஷேகம் மற்றும்…

Read More

புதுச்சேரி அரசு மருத்துவமனை – கொசு உற்பத்தி மையமாக மாறியதா? பொதுமக்கள் அதிருப்தி!

புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனை மற்றும் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி சுற்றுப்புறம் தற்போது கொசு உற்பத்தி மையமாக மாறி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மருத்துவமனைக்கு எதிரே அமைந்துள்ள நீர்நிலைத் தொட்டிகள் சரிவர பராமரிக்கப்படாததால், அதில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால், கொசுக்கள் பெருகி டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சுகாதாரத்துறை டெங்கு மற்றும் மலேரியா ஒழிப்பு பிரச்சாரங்களை பெயரளவில் மட்டுமே மேற்கொள்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பொதுமக்களின் கூற்றுப்படி, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு…

Read More

ஆந்திராவில் கோவில் கூட்ட நெரிசல் விபத்து: குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழப்பு!

ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம், காசிபுக்கா பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஷ்வரா சுவாமி கோவிலில் இன்று காலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். பிரபலமான இந்த கோவில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களை வரவேற்கிறது. இன்று ஏகாதசி நாளையொட்டி வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்ய வந்ததால், கோவிலின் உள் பகுதிகளில் கடும் நெரிசல் ஏற்பட்டது. இந்த திடீர் நெரிசலில் பலர் மிதிக்கப்பட்டு காயமடைந்தனர். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட…

Read More

புதுச்சேரியில் விடுதலை நாள் கொண்டாட்டம்: தேசியக் கொடியேற்றி அணிவகுப்பு மரியாதை ஏற்றார் முதல்வர் ரங்கசாமி!

புதுச்சேரி:புதுச்சேரி விடுதலை நாள் விழாவை முன்னிட்டு, மாநில முதல்வர் என். ரங்கசாமி அவர்கள் இன்று காலை கடற்கரை மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்றி, காவல்துறை மற்றும் தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்த விழாவில் சபாநாயகர் செல்வம், துணை சட்டப்பேரவை தலைவர் ராஜவேலு, உள்துறை அமைச்சர் நமசிவாயம், எதிர்க்கட்சி தலைவர் சிவா, திமுக எம்.எல்.ஏக்கள், தலைமை செயலாளர்கள், மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர். விழா நிகழ்வில், மாணவர்கள் மற்றும்…

Read More

தமிழகத்துக்கு மழை வாய்ப்பு – வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது!

அடுத்த 24 மணி நேரத்தில், மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மிதமான காற்றோட்டம் மற்றும் மேகங்கள் உருவாகி வருகின்றன. இந்த காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால், வரும் நவம்பர் 7 வரை,தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வானிலை நிபுணர்கள் தெரிவித்ததாவது,…

Read More

முதலியார்பேட்டை இளைஞர் விஷ்வா – உலக நினைவாற்றல் போட்டியில் பங்கேற்கிறார்!

புதுச்சேரி மாநிலம் முதலியார்பேட்டை தொகுதியைச் சேர்ந்த இளைஞர் திரு. விஷ்வா அவர்கள், உலக அளவில் நடைபெறும் நினைவாற்றல் போட்டியில் பங்கேற்கவுள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திறமையாளர்களுடன் இணைந்து, புதுச்சேரியின் பெருமையை உயர்த்தும் வகையில் இவர் மும்பை நகரம் நோக்கிப் பயணமாகிறார். இவரது பயணத்திற்குத் தேவையான முழு செலவினங்களையும், போட்டியில் பங்கேற்க தேவையான அனைத்து வசதிகளையும் முதலியார்பேட்டை JCM மக்கள் மன்றம் கிளைத் தலைவர் திரு. குமார் அவர்கள் வழங்கியுள்ளார். இந்த சிறப்பான தருணத்தில், கிளை…

Read More

புதுச்சேரியில் மேம்பால சாலையை சரி செய்து தர கோரி JCM மக்கள் மன்றம் சார்பில் மனு

புதுச்சேரி நோணாங்குப்பம் பகுதியில் உள்ள சுண்ணம்பாறு மேம்பாலதின் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், அதனை உடனடியாக சரி செய்து தர கோரி JCM மக்கள் மன்றம் சார்பில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. JCM மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார், சமூக சேவகர் சார்லஸ் மார்டின் அறிவுறுத்தலின்படி லால் பகதூர் சாஸ்திரி வீதியில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்திற்கு JCM மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் வந்து மனு ஒன்றை அளித்தார், அந்த…

Read More

புதுவையில் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக முற்றுகை போராட்டம்!

புதுவையில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் மின் கட்டண உயர்வை அமல்படுத்த இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்ததை எதிர்த்து, அதிமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது. வம்பாக்கீரைபாளையம் பகுதியில் உள்ள மின்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு நடைபெற்ற இந்த போராட்டத்தில், அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர். மின் கட்டண உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், அரசு இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். போராட்டத்தின்…

Read More

மும்பையில் அதிர்ச்சி: 17 குழந்தைகளை பணய கைதிகளாக கடத்திய நபர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

மும்பை: மும்பையின் போவை (Powai) பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நகரத்தை உலுக்கியது. “ஆர்.ஏ. ஸ்டூடியோ” (RA Studios) எனப்படும் நடிப்பு பயிற்சி நிலையத்தில் 15 முதல் 20 குழந்தைகள் வரை கடத்தப்பட்டு சிறைபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிப்பு வகுப்புகளுக்காக வந்திருந்த குழந்தைகள் சிலர் ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டிருந்த காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்த, கவலைக்கிடமான பெற்றோர்கள் ஸ்டூடியோவின் வெளியே திரண்டனர். இந்த சம்பவத்தில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டவர் ரோஹித் ஆர்யா (Rohit…

Read More

கல்லறை திருநாளை முன்னிட்டு புதுச்சேரியில் சுத்தம் மற்றும் அலங்காரப் பணிகள் தீவிரம்!

புதுச்சேரி: கல்லறை திருநாளை (All Souls Day) முன்னிட்டு கிறிஸ்தவர்களின் நினைவிடங்களில் சுத்தம் செய்தல், வண்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கிறிஸ்தவர்களின் நம்பிக்கையில், மரணம் என்பது முடிவல்ல, புதிய வாழ்வின் தொடக்கம் என்ற எண்ணத்தை நினைவூட்டும் ஒரு நாள் இதுவாகும். ஆண்டுதோறும் நவம்பர் 2ஆம் தேதி கல்லறை திருநாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில், மக்கள் தங்களது முன்னோர்களின் கல்லறைகளுக்கு சென்று மலர்கள், மெழுகுவர்த்திகள் மற்றும் வாசனை திரவியங்களால் அலங்கரித்து, அவர்களின் ஆன்மாக்களுக்காக பிரார்த்தனை…

Read More

ஒரே காரில் பயணித்த ஓ. பன்னீர்செல்வம் மற்றும் கே. ஏ. செங்கோட்டையன்!

அதிமுக வட்டாரத்தில் புதிய அரசியல் அலைகளை கிளப்பும் வகையில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் ஒரே காரில் பயணித்தது தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுப்பொருளாக மாறியுள்ளது. சமீபத்தில், அதிமுகவினரை ஒன்றிணைக்க வேண்டும் என வலியுறுத்தி பேசியிருந்த செங்கோட்டையன், தற்போது பன்னீர்செல்வத்துடன் இணைந்து பயணம் செய்தது, அந்த கருத்தை வலுப்படுத்தும் அரசியல் அறிகுறியாக பலரும் கருதுகின்றனர். தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரையில் இருந்து ராமநாதபுரத்திற்கு இருவரும் ஒன்றாக காரில்…

Read More

புதுச்சேரியில் விடுதலை நாள் இறுதி கட்ட அணிவகுப்பு ஒத்திகை சிறப்பாக நடைபெற்றது

புதுச்சேரியில் நவம்பர் ஒன்றாம் தேதி நடைபெற உள்ள விடுதலை நாள் கொண்டாட்டத்திற்கான இறுதி கட்ட அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்றது. பிரான்ஸ் ஆதிக்கத்திலிருந்து புதுச்சேரி 1954 ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி முறைப்படி இந்திய ஆட்சி பரப்போடு இணைந்தது. இந்நாளை புதுச்சேரியின் விடுதலை நாளாக புதுச்சேரி அரசு ஆண்டுதோறும் கொண்டாடுகிறது. வரும் ஒன்றாம் தேதி புதுச்சேரி மாநிலம் முழுவதும் விடுதலை நாள் கோலாகலத்துடன் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிகழ்வில் முதலமைச்சர்…

Read More

மீண்டும் உயரத் தொடங்கிய தங்கம் விலை – இன்றைய நிலவரம்

மீண்டும் உயரத் தொடங்கிய தங்கம் விலை – இன்றைய நிலவரம் சில நாட்களுக்கு முன் தங்கம் விலை சரிவை சந்தித்த நிலையில், இன்று மீண்டும் உயர்வை பதிவு செய்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு பிந்தைய நாட்களில் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து, நேற்று ஒரு சவரன் ரூ. 88,600 என குறைந்த நிலைக்கு வந்தது. இதனால், வியாபாரிகளின் முன்கணிப்புகள் அனைத்தும் தவறானதாக அமைந்தன. முன்பு ஒரு சவரன் தங்கம் ரூ. 97,000 ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்ட நிலையில்,…

Read More

TNPSC Group 4 தேர்வு: காலிப் பணியிடங்கள் அதிகரிக்க தேர்வர்கள் கோரிக்கை

சென்னை:தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப் 4 தேர்வு முடிவடைந்த நிலையில், அறிவிக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இம்முறை குரூப் 4 தேர்வில் மொத்தம் 3,985 காலிப் பணியிடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டன. தமிழக அரசுத் துறைகளில் அதிகபட்ச பணியிடங்களை நிரப்பும் தேர்வாகக் கருதப்படும் குரூப் 4 தேர்வுக்கு, வழக்கம்போல் இந்த முறைவும் பெருமளவில் விண்ணப்பங்கள் வந்தன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே கல்வித் தகுதியாக இருப்பதால், பல்வேறு…

Read More

சுற்றுலா பயணிகளுக்கு அதிர்ச்சி: இனி வால்பாறைக்கும் இ-பாஸ் கட்டாயம்

ஊட்டி மற்றும் கொடைக்கானல் போலவே வால்பாறைக்கும் இனி இ-பாஸ் கட்டாயம் என்ற அதிரடி உத்தரவு அமலுக்கு வரவுள்ளது. சமீப காலமாக வால்பாறை சுற்றுலாத் தலத்தில் சுற்றுலா பயணிகள் பெருமளவில் வருகை தருவதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல். விடுமுறை நாட்களில் சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து, போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுகின்றது. இதை கட்டுப்படுத்தும் நோக்கில், ஊட்டி மற்றும் கொடைக்கானலில் எத்தனை வாகனங்களை அனுமதிக்கலாம் என்பதற்காக சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் நிறுவனங்கள் ஆய்வு…

Read More

லேசான மழைக்கே தேங்கும் மழைநீர் – அவதியை போக்கிய JCM மக்கள் மன்றம்

புதுச்சேரிசமீபத்தில் பெய்த லேசான மழையிலும், ரெயின்போநகர், கிருஷ்ணாநகர் பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனுடன், சங்கரதாஸ் ஸ்வாமிகள் நகர் மற்றும் தேவகி நகர் பகுதிகளிலும் நீர் தேங்கும் பிரச்சனை ஏற்பட்டது.காலி மனைகளில் புதர் மண்டி காணப்பட்டதுடன், அங்கு கொசுக்கள் மற்றும் தொற்றுகள் உருவாகும் அபாய நிலை ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என JCM மக்கள் மன்றத்திற்கு புகார் தெரிவித்தனர்.மக்கள் புகாரை பெற்ற உடனே, JCM மக்கள் மன்ற…

Read More

தரமற்ற மாத்திரைகள் கொள்முதல் – புதுவையில் முன்னாள் சுகாதாரத்துறை அதிகாரிகள் கைது

தரமற்ற மாத்திரைகள் கொள்முதல் – புதுவையில் முன்னாள் சுகாதாரத்துறை அதிகாரிகள் கைது புதுவையில் சுகாதாரத்துறையில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தும் வகையில், தரமற்ற மாத்திரைகள் கொள்முதல் செய்யப்பட்டதாக முன்னாள் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய தீவிர விசாரணையின் பின்னர், முன்னாள் சுகாதார இயக்குநர்கள் ராமன், மோகன்குமார், மற்றும் துணை இயக்குநர் அல்லி ராணி ஆகிய மூவரையும் கைது செய்துள்ளனர். அவர்கள் பணியாற்றிய காலத்தில் தரமற்ற மருந்துகள் மற்றும் மாத்திரைகள் கொள்முதல் செய்யப்பட்டதாக…

Read More

தீபாவளிக்குப் பிறகு தங்கம் விலை இன்று தாறுமாறாக வீழ்ச்சி – நகை ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

தங்கம் விலையில் திடீர் வீழ்ச்சி! கடந்த சில நாட்களில் சவரனுக்கு ரூ.97 ஆயிரத்திலிருந்து ரூ.88 ஆயிரமாக சரிவு தீபாவளி பண்டிகைக்கு முன்பாக தங்கம் விலை வரலாற்று உச்சத்தை எட்டியது. ஒரு சவரன் தங்கம் ரூ.97 ஆயிரத்தை தாண்டிய நிலையில், பண்டிகைக்குப் பிறகு விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. சென்னையில் கடந்த 23-ந்தேதி சவரன் ரூ.92 ஆயிரமாக இருந்தது. அடுத்த நாள் (24-ந்தேதி) ரூ.91,200 ஆகக் குறைந்தது. 25 மற்றும் 26-ந்தேதிகளில் மீண்டும் சற்று உயர்ந்து ரூ.92 ஆயிரத்தில்…

Read More

புதுவை மாநிலத்தை மிரட்டும் மோன்தா புயல்! ஏனாமில் கடைகள் வணிக நிறுவனங்கள் மூடல்!

‘மோன்தா’ புயல் காரணமாக புதுவை மாநிலத்தின் ஏனாம் பகுதியில் இன்று பகல் 12 மணிக்குள் கடைகள், வணிக நிறுவனங்களை மூட புதுவை அரசு சார்பில் உத்தரவு வெளியிடப்பட்டது. ஆந்திராவில் புயல் கரையை கடக்கும்போது 90 – 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில் புதுவை அரசு இந்த நடவடிக்கையை எடுத்தது. மேலும், ஏனாம் அருகே புயல் கரையை கடக்க உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஏனாம் மண்டல…

Read More

புதுச்சேரி – லாஸ்பேட்டையில் காவல்நிலையம் முன் வெட்டப்பட்ட ரவுடி உயிரிழப்பு!

புதுச்சேரியில் நேற்று முன்தினம் லாஸ்பேட்டை புறக்காவல் நிலையம் வாயில் முன்பு மர்மநபர்களால் வெட்டப்பட்ட ரவுடி ஜாக்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காதல் விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஜாக்பால் வெட்டப்பட்ட பிறகு, இரண்டு சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். இந்த நிலையில் கீழே தவறி விழுந்ததில் 2பேருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். அடிக்கடி இன்ஸ்டாகிராமில் மாஸாக முகத்தை காட்டி ரீல்ஸ்…

Read More

புதுச்சேரியில் விவசாயிடம் லஞ்சம் பெற்ற மின்துறை இளநிலை பொறியாளர் அதிரடி கைது!

புதுச்சேரியில் விவசாயிடம் லஞ்சம் பெற்ற மின்துறை இளநிலை பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர் புதுச்சேரி,செல்லிபட்டு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பூபதி ராஜா இவர் தனது விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு வேண்டி வாதனூர் பகுதியில் உள்ள மின்துறை இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்த நிலையில் மின் இணைப்பு வழங்க மின்துறை இளநிலை பொறியாளர் ராஜேந்திரன் 30 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு விவசாயி பூபதிராஜா…

Read More

சேலத்தில் நடந்து சென்றவரிடம் வழிப்பறி! செல்போன் & ரூ.2000 பணம் பறிப்பு

சேலத்தில் நடந்து சென்ற நபரிடம் இளைஞர்கள் தாக்குதல் நடத்தி செல்போன் மற்றும் பணத்தை பறித்துச் சென்ற காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே மேம்பாலத்தின் மீது திருநெல்வேலி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது நண்பரை பார்ப்பதற்காக நடந்து சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் 3 பேர் அவரை வழிமறித்து கடும் தாக்குதல் நடத்தி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் 2000 ரூபாய் பணத்தை பறித்துச் சென்றனர். பட்ட…

Read More

சோகத்தில் முடிந்த இன்ஸ்டா காதல்! காதலன் உயிரிழப்பு, காதலிக்கு தீவிர சிகிச்சை!

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்த காதலர்கள், கருத்து வேறுபாட்டால் குளத்தில் விழுந்து தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், காதலன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். காதலி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். திருவாரூர் மாவட்டம் மருதப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமாருக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர். இருவருக்கும் கடந்த சில நாட்களாக மனக்கசப்பு ஏற்பட்ட நிலையில், நேற்று…

Read More

கோவை அருகே கோர விபத்து! 4 பேர் உயிரிழப்பு! – ஒருவருக்கு தீவிர சிகிச்சை!

கோவை சிறுவாணி சாலையில் கார் ஒன்று புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்தனர். அதிவேகமாக சென்று கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் நால்வர் உயிரிழந்த நிலையில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். கோவை பேரூர் அருகே உள்ள செட்டிபாளையம் பகுதியில்…

Read More

புதுச்சேரி லாஸ்பேட்டையில் காவல்நிலையம் முன் வெட்டப்பட்ட ரவுடி உயிரிழப்பு!

புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் காவல் நிலையம் வாயிலில் மர்ம நபர்களால் வெட்டப்பட்டு முகம் சிதைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த ரவுடி ஜாக்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நேற்று முன்தினம் நண்பரின் மகனின் பிறந்தநாள் விழாவுக்காக சென்றிருந்தபோது மர்ம கும்பல் வெறிச்செயலை அரங்கேற்றி விட்டு தப்பிய நிலையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தனர். ஜாக்பால் உயிரிழந்த நிலையில் தற்போது இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

Read More

படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

அரியாங்குப்பம் அடுத்த நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். புதுச்சேரி அடுத்த நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றில் புதுச்சேரி அரசு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் படகு குழாம் செயல்பட்டு வருகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் சுண்ணாம்பாற்றில் பல்வேறு வகையான படகுகளில் பயணம் செய்து பேரடைஸ் பீச்சுக்குசென்று ஆனந்தமாக மகிழ்ந்து மீண்டும் படகில் படகு குழாமுக்கு வருவது வழக்கம். இதனால் வாரந்தோறும் சனி, ஞாயிறு மட்டுமின்றி தொடர் விடுமுறை தினங்களிலும்…

Read More

புதுவையில் அடுத்தடுத்து இரண்டு புயல்… பேனர்கள் அகற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவு…

புதுச்சேரியில் கட்டவுட், பேனர்கள் வைக்க 15 நாட்களுக்கு தடை.. மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அறிவிப்பு. புதுச்சேரியில் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது …வடகிழக்கு பருவ மழை தொடங்கியதை தொடர்ந்து புதுவை முழுவதும் தற்போது அடை மழை பெய்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த 15 நாட்களுக்கு அக்டோபர் 26ஆம் தேதி மற்றும் நவம்பர் 5ஆம் தேதி வங்காள விரிகுடாவில் அடுத்தடுத்து இரண்டு தனி தனி குறைந்த காற்றழுத்த தாழ்வு…

Read More

புதுச்சேரியில் பட்டப்பகலில் ரவுடி முகத்தை வெட்டிய மர்ம நபர்கள்! 4 பேர் கைது!

புதுச்சேரியில் காதல் விவகாரத்தில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக ரவுடியை ஓட ஓட விரட்டி காவல் நிலைய வாசலில் வைத்து சரமாரியாக வெட்டியதில் முகம் சிதைந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய 4பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி ஜாக்(எ) ஜாக்பால்(23), இவர் மீது கொலை,கொலை முயற்சி,அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.இந்நிலையில் ரவுடி…

Read More

காரைக்காலில் சிறை கைதிகளிடம் சோதனை! – செல்போன், சிம் கார்டு, புகையிலை பொருட்கள் பறிமுதல்!

காரைக்கால் கிளை சிறையில் அதிகாரிகள் சோதனை செய்தபோது கைதியிடமிருந்து செல்ஃபோன், சிம் கார்டுகள், புகையிலைப் பொருட்கள் மற்றும் மது பாட்டில்கள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கிளை சிறையில் சிறைச் சாலை அதிகாரிகள் சோதனை செய்தபோது பல்வேறு வழக்குகளில் கைதாகி விசாரணை கைதியாக இருந்த நந்தகுமார் என்பவரது அறையில் உள்ள கழிப்பறையில் ஒரு செல்போன், இரண்டு பேட்டரிகள், ஒரு சிம் கார்டு, புகையிலைப் பொருட்கள் மற்றும் மது…

Read More

பேனர்கள் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்! – உழவர்கரை நகராட்சி ஆணையர் எச்சரிக்கை!

திறந்தவெளியில் அனுமதியில்லாத பேனர்களால் ஆபத்து ஏற்படும்பட்சத்தில் சம்மந்தப்பட்டவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் – உழவர்கரை நகராட்சி வெளிப்புற ஊடக சாதனம் துணை விதிகள்படி உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பேனர் விளம்பரம் வைப்பதற்கு உரிய அனுமதி பெற்று வைக்கப்பட வேண்டும். மேலும் அனுமதி பெறாமல் வைக்கப்படும் பேனர்களை அப்புறப்படுத்தவும் மற்றும் அதனை வைப்பவர்கள் மீது அபராதம் விதிக்கவும் வழிவகை உள்ளது. எதிர்வரும்…

Read More

புதுவையில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி!

புதுச்சேரி சோலை நகர் பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரப்படாததால் மழைநீர் சாலைகளில் தேங்கி வீடுகளுக்குள் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி முத்தியால்பேட்டையில் இருந்து சோலை நகர் வழியாக குருச்சிக்குப்பம் பகுதி வரை உள்ள கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரப்படாததால் கழிவு நீர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பாப்பம்மாள் கோவில் வீதி, எல்லை மாரியம்மன் கோவில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீரோடு கழிவுநீரும் கலந்து குடியிருப்புகளை சூழ்ந்து கொள்வதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். புதுவை…

Read More

காரைக்காலில் நள்ளிரவு முதல் கொட்டி தீர்த்தது வரும் கனமழை!

காரைக்காலில் நள்ளிரவு முதல் கொட்டி தீர்த்தது வரும் கனமழை : கடந்த 24 மணி நேரத்தில் 9.3 சென்டிமீட்டர் மழை பதிவு: தொடர் மழையால் பொதுமக்கள் கடும் அவதி: பல்வேறு பகுதியில் மின்வெட்டு பாதிப்பு. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுப்பெற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற உள்ளதால் இன்று தமிழகத்தில்…

Read More

புதுவை சபாநாயகருக்கு எதிராக திடீரென போர்க்கொடி தூக்கிய முன்னாள் பாஜக நிர்வாகி!

புதுவை சபாநாயகர் செல்வத்துக்கு எதிராக அவரது ஆதரவாளர் போர்க்கொடி தூக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜ.க. மாநில இளைஞரணி பொருளாளராகவும், அரியாங்குப்பம் மாவட்ட பொருளாளராகவும் இருந்தவர் முருகன். சபாநாயகர் செல்வத்தின் தீவிர ஆதரவாளரான இவர் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் தேர்தல் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் தற்போது அவர் சபாநாயகருக்கு எதிராக தனது ஆதரவாளர்களுடன் போர்க்கொடி தூக்கியுள்ளார். இது குறித்து அவர் தனது ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “சபாநாயகருக்கு கட்சியில் சேர்ந்த நாளில் இருந்து உண்மையாக உழைத்துள்ளேன்….

Read More

புதுவை – அமைச்சர் ஜான் குமார் விழிப்புணர்வு காணொலி வைரல்!

புதுச்சேரியில் சமீப காலமாக குடிநீர் சரியில்லை என குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், மழைநீர் சேகரிப்பதன் அவசியம் மற்றும் சேகரிக்கும் முறை குறித்து அமைச்சர் ஜான்குமார் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புதுச்சேரியில் சமீப காலமாக பல்வேறு பகுதிகளில் குடிநீர் சரியில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டு வைத்து வருகின்றனர். இந்நிலையில் வட கிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், மழைநீரை சேகரிப்பதன் அவசியம் மற்றும் சேகரிப்பு முறை குறித்து அமைச்சர் ஜான்குமார் வெளியிட்டுள்ள…

Read More

வங்ககடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி!

தமிழ்நாடு மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பரவலாக இரு மாநிலங்களிலும் அவ்வப்போது மழைபொழிந்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த சில தினங்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுவையில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (21.10.2025) காலை 5:30 மணியளவில் தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம்…

Read More

காவலர்கள் நினைவு தினம் – புதுவை முதல்வர் ரங்கசாமி மரியாதை!

புதுவையில் கொட்டும் மழையில் நடைபெற்ற காவலர் நினைவு தினத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி மழையில் நனைந்தபடி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க மலர் தூவி மரியாதை செலுத்தினார். புதுவையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ம் தேதி காவலர் நினைவு தினம் ‌கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று கோரிமேடு ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற காவலர் நினைவு தினத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம்,…

Read More

எஸ்.எஸ்.பி லட்சுமி சௌஜன்யா தீபாவளி வாழ்த்து!

புதுச்சேரி மாவட்ட காவல் மேலாளர் எஸ்.எஸ்.பி. லட்சுமி சௌஜன்யா அவர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வாழ்த்து வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், மக்கள் அனைவரும் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன், ஆனால் பாதுகாப்பாகக் கொண்டாட வேண்டும் எனவும், பட்டாசுகளை வெடிக்கும் போது குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும், போக்குவரத்து விதிகளைப் பின்பற்றி, பண்டிகை நாட்களில் விபத்துகளைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

Read More

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தீபாவளி வாழ்த்து

புதுவை மக்களுக்கு துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். “ஒளிமயமான தீபாவளி பண்டிகையை ஒட்டி இந்திய மக்கள் அனைவருக்கும் குறிப்பாக, புதுச்சேரி மக்களுக்கு எனது அன்பான “தீபாவளி“ நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தீபாவளி பண்டிகை நாட்டு மக்களிடையே ஒற்றுமையை – சகோரத்துவத்தை பலப்படுத்துகிறது. இந்த தீபாவளி நம் அனைவரது வாழ்விலும் ஒளிமயமான எதிர்காலத்தை, மகிழ்ச்சியைக் கொண்டு வருவதாக அமையட்டும்.உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் லட்சியப் பாதையில் இந்தியா பயணித்துக் கொண்டு இருக்கிறது….

Read More

புதுவை முதல்வர் ரங்கசாமி தீபாவளி வாழ்த்து!

புதுவை மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து முதல்வர் ரங்கசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.பல்வேறு சமூகப் பின்னணிகளை கொண்ட மக்களை ஒன்றிணைத்தல், கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல், உள்ளூர் வணிகங்களுக்கு வருவாய் ஈட்டுவதற்கான வாய்ப்புகளை வழங்குதல், ஆன்மிகச் சிந்தனைகளைப் பிரதிபலித்தல் போன்ற உள்ளார்ந்த பண்புகளை இந்தியப் பண்டிகைகள் கொண்டுள்ளன. அத்தகைய பண்டிகைகளில் தீபாவளி முக்கியமான ஒன்றாகும். தீபாவளிப் பண்டிகை நாடு முழுவதும் பரவலாகக் கொண்டாடப்படுவதற்கு, இருளை நீக்கி ஒளியும், தீமையை அழித்து நன்மையும், அறியாமையை அகற்றி அறிவும் மேலோங்கும் என்ற ஆழமான…

Read More

கரூர் கூட்ட நெரிசல் – உயிரிழந்த 41 பேருக்கு அஞ்சலி – தீபாவளி கொண்டாட வேண்டாம் – த.வெ.க. அறிவிப்பு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி பரப்புரை கூட்டத்தை மேற்கொண்டபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டு பெண்கள், குழந்தைகள் என 41 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகையாக ரூ. 20 லட்சம் வழங்கப்படும் என தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அந்த குடும்பத்தை சேர்ந்தவர்களின் வங்கி கணக்கில் ரூ.20 லட்சம் வரவு வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த…

Read More

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – த.வெ.க. சார்பில் நிவாரண தொகை ரூ.20லட்சம் வரவு வைக்கப்பட்டது!

கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கரூரில் பரப்புரை கூட்டத்தை மேற்கொண்டபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டு பெண்கள், குழந்தைகள் என 41 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகையாக ரூ. 20 லட்சம் வழங்கப்படும் என தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அந்த குடும்பத்தை சேர்ந்தவர்களின் வங்கி கணக்கில் ரூ.20 லட்சம் வரவு வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read More

தமிழ்நாட்டு கிட்னி திருட்டு கும்பல் புதுச்சேரியில் காட்டி வருகிறதா?

தமிழ்நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கிய கிட்னி திருட்டு விவகாரத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் தற்போது கிட்னி திருட்டு நடைபெற்று வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஏழை மக்களின் வறுமையை பயன்படுத்தி அவர்களின் கிட்னிக்கு சில ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வாயிலாக பல கோடி ரூபாய் சுருட்டிய கும்பல் கடந்த சில வாரங்களுக்கு முன் தமிழ்நாட்டில் சிக்கியது. இச்சம்பவத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை அதிகாரிகள் ஊழியர்கள் ஏஜென்ட்களுக்கு தொடர்பு உள்ளதாகவும் தனியார் மருத்துவமனைகளை நடத்தும் அரசியல்வாதிகளும்…

Read More

அங்கன்வாடி பணி அறிவிப்பு ரத்து – மகளிர் மேம்பாட்டுத்துறை அறிவிப்பு!

புதுச்சேரியில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் பதவிக்கு கௌரவ ஊதிய அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த 30.09.25 அன்று வெளியிடப்பட்டது. தொழில்நுட்ப பிழை காரணமாக விண்ணப்பதாரர்களால் வலைதளத்தை அணுக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரச்சனையை சரி செய்யும் பணியில் துறை சார்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த பணி திட்டமிட்டபடி முடியாத காரணத்தால் செப்டம்பர் 30 அன்று வெளியான அறிக்கை ரத்து செய்யப்பட்டது. பணிகள் சீரான பின்னர் விண்ணப்பங்கள் ஏற்கப்படும். புதிய அறிவிப்பு வெளியிடப்படும். விண்ணப்பித்த நபர்கள்…

Read More

புதுச்சேரியில் பள்ளிகள் அருகில் ரெஸ்டோ பார் திறப்பு – பொதுமக்கள் சாலை மறியல்!

புதுச்சேரி நகர்ப்பகுதியில் அரசு பள்ளி மற்றும் குடியிருப்பு பகுதியில் புதிதாக ரெஸ்டோ பார் ஒன்று திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உருளையான்பேட்டை தொகுதிக்குட்பட்ட திருவள்ளூர் சாலையில் குடியிருப்பு மற்றும் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே புதியதாக ரெஸ்டோ பார் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய ரெஸ்டோ பாருக்கு எதிர்ப்பு தெரிவித்து, உடனடியாக மூட வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர், மேலும் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் நேரு போராட்டத்திற்கு…

Read More

தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அரசு விடுமுறை – முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு!

புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு தீபாவளி அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தீபாவளி அடுத்த தினமும் விடுமுறை அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வந்த நிலையில், தீபாவளி மறுநாள் அக்டோபர் 21-ந்தேதி செவ்வாய்க்கிழமை கூடுதல் விடுமுறை விடப்படுவதாக முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

Read More

புதுச்சேரியில் இரவு மழை பெய்ததால் மக்கள் சிரமத்திற்குள்ளாகினர்!

புதுச்சேரியில் இரவு 8 மணி முதல் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையின் காரணமாக தீபாவளிக்கு பொருட்கள் வாங்க கடைக்கு சென்ற மக்கள் சிரமத்திற்குளாகினார். மேலும் மழையால் புதுச்சேரியில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், இன்று மாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், இரவு சுமார் 8…

Read More

போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்த புதுச்சேரி!

தீபாவளி பண்டிகைக்கு தேவையான பொருட்கள் வாங்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் மக்கள் படையெடுத்து,வருவதால் புதுச்சேரி நகரமே கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கிறது,பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் போலீஸார் ரோந்து பணியிலும் ஈடுபட்டனர். தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் பண்டிகைக்கு தேவையான புத்தாடைகள் மற்றும் பட்டாசு உள்ளிட்ட தேவையான பொருட்களை வாங்குவதற்காக புதுச்சேரிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர். பொதுமக்களின் படையெடுப்பால் நகரப் பகுதி முழுவதும் மனித தலைகளாவே…

Read More

கரூர் – ஆவணங்கள் எரிக்கப்பட்டதா? Pen Drive மீட்பு!

கரூரில் சிபிஐ விசாரணை தொடங்க உள்ள நிலையில் எஸ்.ஐ.டி தற்காலிக அலுவலக வளாகத்தில் தேவையற்ற ஆவண நகல்கள் தீயிலிட்டு எரிக்கப்பட்டுள்ளது – குறிப்பாக 32 GB அளவுள்ள பென் டிரைவ் ஒன்றும் கீழே வீசப்பட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த கரூர் வந்துள்ள சிபிஐ அதிகாரிகளை சிறப்பு புலனாய்வு குழுவை சேர்ந்த ஏ.டி.எஸ்.பி ஒருவர் சந்தித்து, கரூர் பிரச்சார கூட்ட நெரிசல் வழக்கில் இதுவரை நடந்த விசாரணை குறித்து விளக்கம் அளித்துள்ளார். சிபிஐ…

Read More

புதுச்சேரி உழவர்கரை நகராட்சி அறிவிப்பு!

தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகள் வெடிப்பதினால் உருவாகும் குப்பைகளை சாலைகளில் அப்படியே விடுவதினால் தெருக்கள் முழுவது அசுத்தமாக இருப்பதோடு அவை காற்றில் பறந்து கால்வாய்களில் விழ்ந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் அவற்றை சுத்தம் செய்ய வரும் தூய்மைபணியாகளுக்கு சிரமம் ஏற்படும் என்பதால் பொதுமக்கள் அனைவரும் பட்டாசுகள் வெடித்த பின்பு உருவாகும் குப்பைகளை தண்ணீர் ஊற்றி அனைத்து அதனை தொட்டிகளில் சேகரித்து வைத்திருந்து தங்கள் பகுதிகளில் குப்பைகள் சேகரிக்க வரும் தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. தவறினால் அபராதம்…

Read More

JCM மக்கள் மன்றம் சார்பில் பாசிக் ஊழியர்களுக்கு தீபாவளி பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன!

புதுச்சேரியில் JCM மக்கள் மன்றம் சார்பில் விரைவில் மூடப்பட உள்ள பாசிக் நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு தொகுப்பு மற்றும் பரிசு தொகையை மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார் வழங்கினார். புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான பாசிக்கை மூட அரசு அறிவிப்பு வெளியிட்டு வரும் டிசம்பர் 25ம் தேதிக்குள் மூட மூடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு பணி புரியும் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பம் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் விரைவில் மூடப்பட உள்ள பாசிக்…

Read More

தீபாவளி பரிசுக்கு அரசு பணத்தை செலவழிக்க கூடாது – மத்திய நிதி அமைச்சகம்

தீபாவாளி பண்டிகை பரிசு பொருட்களுக்கு அரசின் பணத்தை செலவழிக்க கூடாது என மத்திய நிதி அமைச்சகம் அரசு துறைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. புதுவை முதல்வர் ரங்கசாமி மற்றும் எம்.எல்.ஏக்கள் அரசு நிதியில் பரிசு பொருட்களை வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் நிதியமைச்சகத்தில் இருந்து அறிக்கை! புதுச்சேரியில் ரங்கசாமி முதல்வராக இருக்கும்போது எல்லாம், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி சுயேட்சை என பாகுபாடு பார்க்காமல் அரசு செலவில் தீபாவளி பண்டிகையின் போது 500 பட்டாசு பாக்ஸ் மற்றும் 500 ஸ்வீட் பாக்ஸ்களை…

Read More

ரஞ்சி கோப்பை தொடர் – புதுச்சேரி வீரர்கள் புறக்கணிப்படுகிறார்களா?

இந்திய அணிக்கு தேர்வாக வேண்டும் என்றால் பொதுவாக ரஞ்சி கோப்பையில் விளையாடி தகுதியை நிரூபிக்க வேண்டும் என்பது தான் விதி. அப்படி இருக்கையில் புதுச்சேரி கிரிக்கெட் அணி ரஞ்சி கோப்பை தொடரில் பங்கேற்று வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரி கிரிக்கெட் அணியில் புதுச்சேரியை சேர்ந்த வீரர்கள் யாரும் பங்கேற்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை குறிப்பிட்டு சமூக சேவகர் சார்லஸ் மார்டின் கருத்து தெரிவித்துள்ளார். புதுச்சேரியை சேர்ந்த வீரர்களை நிர்வாகம் வஞ்சிப்பதாக தெரிவித்துள்ளார். ரஞ்சி கோப்பை கிரிக்கெட்…

Read More

புதுச்சேரிக்கு ஒரு வழி பாதை மிகவும் தேவை! – சமூக சேவகர் சார்லஸ் மார்டின் வலியுறுத்தியுள்ளார்!

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கதிர்காமம் சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் இது குறித்து பலர் கருத்துகளையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து சமூக சேவகர் சார்லஸ் மார்டின் கருத்து தெரிவித்துள்ளார். “புதுச்சேரியில் ஒருவழிப்பாதை தேவை என்று பலமுறை வலியுறுத்தியிருக்கிறேன். இதனை கண்டுகொள்ளாத புதுச்சேரி அரசின் நிர்வாகச் சீர்கேட்டினால், கதிர்காமம் சாலையில் போக்குவரத்து நெரிசலில் முதலமைச்சர் ரங்கசாமியே சிக்கிக்கொண்டார். எனவே, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் திட்டங்களை…

Read More

டிராபிக் ஜாமில் சிக்கிய புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி!

புதுச்சேரியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என பல்வேறு தரப்பில் இருந்து அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் அரசு கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில், புதுச்சேரி கதிர்காமம் சாலையில் முதல்வர் ரங்கசாமி காரில் சென்றுகொண்டிருந்தபோது போக்குவரத்து நெரிசலில் சிக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Read More

புதுச்சேரியில் காற்று மாசுபாடு கண்டறியும் கருவி மூலம் கண்காணிப்பு!

புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படும் காற்றின் மாசுபாட்டை கண்டறிய மாசு கட்டுப்பாடு குழுமம் சார்பில் ஏர் மானிட்டர் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் வருகிற 20-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் பட்டாசு விற்பனையும் சூடு பிடித்துள்ளது. தீபாவளிக்கு நகரம் மற்றும் கிராமப்புறங்களில் அதிக அளவு பட்டாசுகள் வெடிப்பதால் காற்றில் நச்சுப் பொருட்கள் கலந்து காற்று மாசு ஏற்படுகிறது. பட்டாசு வெடிக்கும் போது வெளியாகும் சல்பர்…

Read More

MLA அங்காளன் தலைமையில் JCM மக்கள் மன்ற நிர்வாகிகள் மக்களுக்காக களத்தில் இறங்கினர்

புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக மரக்கிளைகள் விழுந்து மின் இணைப்புகள் துண்டிக்கப்படாமல் இருக்கவும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்காமல் தடுக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பணியில் திருபுவனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் தலைமையில் JCM மக்கள் மன்ற நிர்வாகிகள் ஈடுபட்டனர். புதுச்சேரி திருபுவனை தொகுதிக்குட்பட்ட மதகடிப்பட்டு, செல்லிப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின் கம்பங்களில் மரக்கிளைகள் படர்ந்து இருப்பதால் அவ்வப்போது மின் இணைப்பு பாதிக்கப்படுகிறது. மேலும் பருவ மழை தொடங்கி இருக்கக்கூடிய…

Read More

புதுச்சேரி சட்டப்பேரவை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விசிக நிர்வாகிகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனையும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்யையும் குறிவைத்து அவதூறு கருத்துகளை திட்டமிட்டுப் பரப்பி வரும் பாஜகவினரை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனையும், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்யையும் குறிவைத்து இழிவுப்படுத்துவதுடன் அவதூறுக் கருத்துகளைத் திட்டமிட்டுப் பரப்பி வரும் பாஜகவினரை கண்டித்தும், பாலியல் கொடுமைகளுக்கும், பெண்ணுரிமைக்கும், ஜனநாயக மாண்புகளுக்கும், மாணவர்களின் பாதுகாப்புக்கும் குந்தகம் விளைவிப்பதைக் கண்டித்துப் போராடிய புதுவைப் பல்கலைக்கழக மாணவர்களைக்…

Read More

திருச்செந்தூரில் விடிய விடிய கனமழை!

திருச்செந்தூரில் விடிய விடிய இடி மின்னலுடன் பல மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த மழையால் சிவன் கோயில் பிரகாரத்தில் மழைநீர் புகுந்தது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மேலும் வடகிழக்கு பருவ மழையும் தொடங்கி உள்ளது. இதனால் நேற்று முதல் சென்னை உட்பட 22 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. திருச்செந்தூர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக, வெயில் வாட்டி வதைத்த நிலையில், நேற்று காலை…

Read More

தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read More

போலி சைக்கிள் நிறுவன மோசடி – அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! – புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் அறிக்கை!

போலி சைக்கிள் நிறுவன மோசடியில் சிக்கிய ஒரு அதிகாரி மட்டுமின்றி பல உயர் அதிகாரிகளும், வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதாகவும் அவர்கள் மீதும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “போலி சைக்கிள் நிறுவனத்திடம் 80 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது காவல்துறைக்கு…

Read More

புதுச்சேரியில் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டம்!

புதுச்சேரி அரசு பள்ளியில் பணிபுரியும் ஒப்பந்த ஆசிரியர்கள் 100 க்கும் மேற்பட்டோர் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பேரணியாக சென்று சட்டபேரவை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி அரசு பள்ளிகளில் 300 க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் பல வருடங்களாக பணியாற்றி வரும் ஒப்பந்த ஆசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுப்படனர். தொடர்ந்து இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் ஆசிரியர்களை பணி…

Read More

புதுச்சேரியில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை!

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் புதுச்சேரியில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் புதுச்சேரி கடற்கரை சாலை, உப்பளம், நெல்லித்தோப்பு, உருளையான்பேட்டை, ராஜ்பவன் உள்ளிட்ட புதுச்சேரி நகர்ப் பகுதிகளிலும், அதே போல் பாகூர், கண்ணிகோயில், காலாபட்டு, சேதராபட்டு, வில்லியனூர், சோம்பட்டு, மதகடிப்பட்டு உள்ளிட்ட அனைத்து கிராம பகுதிகளிலும் இன்று காலை முதல் விட்டு விட்டு பரவலாக…

Read More

கவனத்தை ஈர்த்த அதிமுகவினர்! சட்டப்பேரவை வளாகத்தில் பரபரப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் நாள்தோறும் அவை நடவடிக்கைகள் அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவையின் உள்ளே வரும்போது அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் பேட்ஜ் ஒன்றை சட்டையில் அணிந்து வந்தனர். கடந்த சில கூட்டத்தொடர்களில் அதிமுகவினர் அணிந்து வந்த பேட்ஜ்கள் அனைவராலும் பேசப்பட்ட நிலையில் இன்று ‘கிட்னிகள் ஜாக்கிரதை’ என்ற பேட்ஜ் அணிந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி, நாமக்கல் போன்ற மாவட்டங்களில் கிட்னி திருட்டு…

Read More

அரசனை காணத்தவறாதீர்கள்! – பிரபல நடிகரின் ட்வீட்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

பிரபல நடிகர் சிலம்பரசன் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘அரசன்’. இந்த திரைப்படத்தை வெற்றி மாறன் இயக்கி வருகிறார். ‘வடசென்னை’ திரைப்படத்தின் முன்பகுதியாக இது இருக்கும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலாக எதிர்ப்பார்த்து காத்திருக்கும் நிலையில், திரைப்படத்தின் தியேட்டர் வடிவ முன்னோட்டத்தை (Theatrical Promo) பின்னணி இசையுடன் பார்த்ததாகவும் கண்டிப்பாக அனைவரும் தியேட்டரில் பார்க்க வேண்டும் எனவும் அந்த அனுபவத்தை தவற விடாதீர்கள் எனவும் நடிகர் சிலம்பரசன் ‘X’ வலைதளத்தில் பதிவு செய்ததால் ரசிகர்கள் மகிழ்சசியடைந்துள்ளனர். இந்த…

Read More

பிரபல நடிகரும் நடிகையும் திருவண்ணாமலையில் சாமி தரிசனம்!

தீபாவளிக்கு தனது டீசல் திரைப்படம் வெளியாவதில் மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார். ரசிகர்களுக்கு இந்தப் படம் விருந்து படைக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் பட்டி தொட்டியெங்கும் பேசப்பட்ட ‘லப்பர் பந்து’ திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் கதாப்பாத்திரம் அனைவரையும் கவரும் வகையில் இருந்தது. இந்த நிலையில் அவரது புதிய திரைப்படமான ‘டீசல்’ தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு நடிகர் ஹரிஷ் கல்யாண், நடிகை அதுல்யா ரவி, இயக்குனர் சண்முக முத்துசாமி ஆகியோர் திருவண்ணாமலை…

Read More

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியில் மதுக்கடை திறப்புக்கு எதிராக மக்கள் சாலை மறியல்!

புதுவையில் ரெஸ்டோ பாருக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு! வில்லியனூரில் பாரதிநகர், ஆரியப்பாளையம் பகுதியில் புதிய மதுபான கடை (ரெஸ்டோ பார் ) ஒன்று திறக்கப்படுவதாக தகவல் வந்ததையடுத்து, அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுவால் இளைஞர்கள், குடும்பங்கள், சமூக அமைதி ஆகியவை பாதிக்கப்படும் எனக் கூறி நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து சாலை மறியல் செய்து கடும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து, காவல்…

Read More

புதுச்சேரியில்”கோ ப்ரீ சைக்கிள்”மோசடி வழக்கில் ஆய்வாளர் சஸ்பெண்ட்!

புதுச்சேரியில் Go Free Cycles (கோ ப்ரீ சைக்கிள்) என்ற போலி சைக்கிள் நிறுவனம் மூலம் பொதுமக்களிடம் 50 கோடிக்கு மேல் மோசடி செய்யப்பட்ட வழக்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதில் சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரியான சைபர் கிரைம் ஆய்வாளர் கீர்த்தியை போலீஸ் தலைமையகம் உத்தரவிட்டு சஸ்பெண்ட் செய்துள்ளது. பெங்களூரு தலைமையிடமாக செயல்பட்ட கோ ப்ரீ சைக்கிள் நிறுவனத்தின் புதுச்சேரி கிளை, காமராஜர் சாலையில் இயங்கியதில், வாடிக்கையாளர்களுக்கு அதிக லாபம் தருவதாக வாடிக்கையாளர்களை கவர்ந்து ரூ.4.5 லட்சம் முதலீடு…

Read More

குன்னூர்-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் பாறை விழுந்து விபத்து!

நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு விடிய, விடிய இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து, பல பகுதிகளில் அவதி உண்டாக்கியது. வானிலை ஆய்வு மையம் முன்னதாகவே மாவட்டத்தில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை வழங்கியுள்ளது. கோவையிலிருந்து மானந்தவாடி நோக்கி சென்று கொண்டிருந்த கேரளா அரசு பேருந்து குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் குரும்பாடி பகுதியில் பாறை விழுந்ததில் முன்பகுதி சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக, பேருந்தில் இருந்த 48 பயணிகள் யாரும் காயமின்றி உயிர் தப்பினர். மாற்று பேருந்து மூலம் பயணிகள் பாதுகாப்பாக…

Read More

மின் கம்பத்திற்கு பதிலாக மரக் குச்சிகள்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தில்லைநகர் பகுதியில், மின்வாரியத்தின் அலட்சியமான நடவடிக்கை ஒன்று பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சின்னசேலம் துணை மின் நிலையத்தின் கீழ்பட்ட அந்தப் பகுதியில் உயர் மின் அழுத்த கம்பிகள் செல்கின்றன. இந்நிலையில், புதிய மின் கம்பம் அமைப்பதற்கு பதிலாக மின்துறை ஊழியர்கள் மரக் குச்சிகளை வைத்து மின் கம்பங்களுக்கு முட்டுக் கொடுத்து இணைத்துள்ளனர். உலகமே டிஜிட்டல் யுகமாக மாறிக் கொண்டிருக்கும்போது, இவ்வாறு மரக் குச்சிகளை மின் கம்பங்களுக்கு மாற்றாக பயன்படுத்தியிருப்பது அப்பகுதி மக்களிடையே…

Read More

புதுச்சேரியில் தண்ணீர் கேனில் கரப்பான் பூச்சி!

புதுச்சேரி லெனின் வீதியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு விநியோகம் செய்யப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கேன்களில் கரப்பான் பூச்சி மிதக்கும் காட்சி கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் இயங்கி வரும் தனியார் குடிநீர் சுத்திகரிப்பு தொழிற்சாலையில் இருந்து, டீலர்கள் மூலம் புதுச்சேரி முழுவதும் தண்ணீர் கேன்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. அதன்படி, லெனின் வீதியில் உள்ள விஷ்ணு டிரிங்கிங் வாட்டர் சப்ளை நிறுவனம் இன்று கார்த்திக் காந்தி என்பவரது நிறுவனத்திற்கு தண்ணீர்…

Read More

மயிலாடுதுறை அருகே அரசு பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்!

மயிலாடுதுறை அருகே அரசு பேருந்தில் படியில் பயணம் செய்த மாணவர்களை மேலே வருமாறு கேட்டுக்கொண்டதால், நடத்துனர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறையிலிருந்து திருச்சிற்றம்பலம் நோக்கி செல்லும் 1C எண் அரசு பேருந்து மாலை 6.10 மணியளவில் புறப்பட்டது. இதில் நடராஜபுரத்தைச் சேர்ந்த முனியப்பன் (46) கண்டக்டராக பணியாற்றி வந்தார். பேருந்து சென்று கொண்டிருக்கும்போது படியில் நின்ற மாணவர்களை மேலே ஏறச் சொன்ன முனியப்பனின் பேச்சைக் கேட்காமல் மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர்,…

Read More

கழிவறை கட்டும் திட்டத்தில் தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டர் கைது!

புதுச்சேரி அரியாங்குப்பம் கொம்யூனில், மத்திய அரசின் ஸ்வச் பாரத் தனிநபர் கழிவறை கட்டும் திட்டத்தில் ரூ.60 லட்சம் மோசடி நடந்தது தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டரை கைது செய்துள்ளனர். 2016 முதல் 2021 வரை நடைமுறையில் இருந்த இந்த திட்டத்தில், கழிவறைகள் கட்டப்படாமல் ரூ.59.89 லட்சம் தொகை முறைகேடாக எடுத்துக்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தற்போதைய வட்டார வளர்ச்சி அதிகாரி கார்த்திகேசன் கடந்த ஜூலை மாதம் புதுச்சேரி லஞ்ச ஒழிப்பு பிரிவில் புகார் அளித்தார்….

Read More

கோத்தகிரியில் மின்கம்பியில் சிக்கி கரடி உயிரிழப்பு!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழையால் மின் கம்பி அறுந்து விழுந்தது. அதில் சிக்கிய 6 வயது மதிக்கத்தக்க ஆண் கரடி பரிதாபமாக உயிரிழந்தது. சமீப காலமாக கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கரடிகள் உணவு, தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் அடிக்கடி நுழைந்து வருகின்றன. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு கோத்தகிரி – அல்லமலை கிராமம் செல்லும் நடைபாதையில் மின் கம்பி ஒன்று அறுந்து விழுந்தது. இன்று…

Read More

தமிழ்நாட்டில் தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை!

தமிழ்நாட்டில் நாளை வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சில பகுதிகளில் அடிக்கடி மற்றும் இடியுடன் கூடிய மழை நடைபெறலாம் என காத்திருக்கும் வானிலை நிலவரம் எச்சரிக்கிறது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், கடலோர பகுதிகளில் வலுவான காற்று காரணமாக சேதம் ஏற்படக்கூடும் என்பதைக் கருத்தில் கொள்ளவும் வானிலை அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

Read More

காஸா போர் நிறுத்தத்தில் ட்ரம்ப் மட்டும் அல்ல!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் காஸாவில் போர் நிறுத்தத்தை தனது சாதனையாக காட்டியாலும், உண்மையில் பல நாடுகள் முக்கிய பங்காற்றியுள்ளன. டிரம்ப் 20 அம்ச திட்டத்தை அறிவித்தார்; ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் அதற்குப் பின் ஒப்புக்கொண்டதால் தாக்குதல் நிறுத்தப்பட்டது. கத்தார் ஆரம்பத்திலிருந்தே மத்தியஸ்தராக செயல்பட்டு, ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையேயான பேச்சுவார்த்தைக்கு இடம் அளித்து அமைதிக்கு வழி செய்தது. கத்தார் அழுத்தத்தின்படி அமெரிக்கா கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், அரபு நாடுகள் போர் நிறுத்தம் தொடர்பில் ஐநா பொதுச் சபையில் அழுத்தம்…

Read More

புதுச்சேரி கட்டிடத் தொழிலாளர்கள் போராட்டம்!

புதுச்சேரியில் 300க்கும் மேற்பட்ட கட்டிடத் தொழிலாளர்கள் தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள கட்டிட தொழிலாளர்கள் நலவாரிய அலுவலகத்தை முற்றுகை செய்து, தீபாவளி போனஸ் ₹6,000 வரை உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். தொழிலாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போனஸ் கிடையாது என்ற தகவல் பரவியதால் பரபரப்பும் ஏற்பட்டது. அதிகாரிகள் சரியான பதில் அளிக்கவில்லை என்றும், வட மாநில தொழிலாளர்கள் அதிகமாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தொழிலாளர்கள் குற்றச்சாட்டு எழுப்பினர்.

Read More

புதுச்சேரி சுகாதாரதுறை பணியாளர்கள் போராட்டம்!

புதுச்சேரி சுகாதார துறையில் பணியாற்றும் ஆஷா பணியாளர்கள், மாதமாதம் தாமதமின்றி ஊதியம் வழங்க வலியுறுத்தி, முதலமைச்சர் அறிவித்த ஊதிய உயர்வை வழங்காததை கண்டித்து, இயக்குனர் அலுவலக வாயலில் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 100க்கும் மேற்பட்ட ஆஷா பணியாளர்கள் பங்கேற்றனர். புதுச்சேரியில் சுமார் 500 ஆஷா பணியாளர்கள் வீட்டுக்குவீடு சென்று, குழந்தைகளுக்கு தடுப்பூசி உள்ளிட்ட சுகாதார பணிகளில் உதவுகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்கள் ரூ.10,000 மாத ஊதியம் பெற்றுவருகின்றனர். கடந்த மார்ச் சட்டப்பேரவை கூட்டத்தில் முதலமைச்சர்…

Read More

புதுச்சேரியில் தீபாவளி அன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி

உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில், புதுச்சேரியில் தீபாவளி நாளன்று பட்டாசு வெடிப்பதற்கு இரண்டு மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழுமம் வெளியிட்ட அறிவிப்பில், தீபாவளி நாளில் பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்ட நேரங்கள் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளன காலை: 7.00 மணி முதல் 8.00 மணி வரை,மாலை: 7.00 மணி முதல் 8.00 மணி வரை அதே நேரத்தில், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் நீதிமன்றக் கட்டிடங்கள் உள்ளிட்ட அமைதிப்பகுதிகளின் 100 மீட்டர் சுற்றளவில்…

Read More

புதுச்சேரியில் 1986ல் தொடங்கப்பட்ட பாசிக் நிறுவனம் மூடல்!

புதுச்சேரி அரசின் வேளாண் சேவை மற்றும் தொழில் கார்ப்பரேஷன் (பாசிக்) நிறுவனம் 1986ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. வேளாண் இடுபொருட்கள், விதைகள், செடிகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் போன்ற துறைகளில் பாசிக் நிறுவனம் செயல்பட்டு வந்தது. 2006–07 வரை லாபகரமாக இயங்கிய நிறுவனம் பின்னர் நஷ்டத்தை சந்தித்து வந்தது. 2007–08ஆம் ஆண்டில் ரூ.85 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது. தற்போது நிறுவனம் சுமார் ரூ.50 கோடி நஷ்டத்தில் உள்ளது. சுமார் 300 பேருக்கு வேலை வழங்க வேண்டிய நிலையில்,…

Read More

பாகூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் மணல் திருட்டு!

பாகூர் அருகே சோரியாங்குப்பம் பகுதியில் தென்பெண்ணை ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். பசுமை தீர்ப்பாயம் தென்பெண்ணை ஆற்றில் மணல் எடுப்பதற்கு தடை விதித்து இருந்தது. மேலும் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்காமல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இதற்கிடையில், சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்….

Read More

40 ஆண்டுகள் பின்னர் கிளிஞ்சல்மேடு ஸ்ரீ எல்லையம்மன் ஆலயத்தில் தேர் திருவிழா

காரைக்கால் அருகே கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ எல்லையம்மன் ஆலயத்தில், 40 ஆண்டுகளுக்கு பின் தேர் திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. 1976 ஆம் ஆண்டிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த தேர் திருவிழாவை மீண்டும் நடத்தும் நோக்கில், ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய தேர் தயாரிக்கப்பட்டது. பணி முடிவடைந்ததைத் தொடர்ந்து, இன்று ஸ்ரீ எல்லையம்மன் புதிய தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் ஏராளமான மீனவ மக்கள் “ஓம்…

Read More

அரியாங்குப்பத்தில் கஞ்சா விற்ற 2  கல்லூரி மாணவர்கள் கைது!

அரியாங்குப்பம் அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்றதாக இரு வாலிபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. புதுச்சேரி முழுவதும் கஞ்சா விற்பனை மற்றும் அதனால் ஏற்படும் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதால், டிஜிபி உத்தரவின்படி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, அரியாங்குப்பம் பாரதி நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுகிறது என்ற ரகசிய தகவலினை அடிப்படையாகக் கொண்டு, இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் உத்தரவின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம்…

Read More

PF கணக்கில் இருந்து 100% பணம் எடுக்கலாம்…

மத்திய நிதி அமைச்சின் கீழ் கார்ப்பரேட் அபாய விரிவாக்கக் குழு (CBDT) கூட்டத்தில் வருங்கால வைப்பு நிதி (Provident Fund – PF) கணக்குகளில் பணம் எடுக்கும் விதிகளில் முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 100% தொகை எடுக்கும் உரிமை: அவசர தேவைகள் (மருத்துவம், வீட்டு கடன் போன்றவை) ஏற்பட்டால் PF-ல் உள்ள முழு தொகையையும் எடுக்கலாம். முன்பு வரம்புகள் இருந்தன. கல்வி செலவுகள் வரம்பு உயர்வு: குழந்தைகளின் கல்விக்காக PF-லிருந்து எடுக்கக்கூடிய தொகை 10 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது….

Read More

பள்ளி மாணவர்களுக்கு JCM மக்கள் மன்றம் சார்பில் தீபாவளிக்கு பட்டாசு பெட்டிகள்

திருபுவனை தொகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சமூக சேவகர் சார்லஸ் மார்டின் அறிவுறுத்தலின்படி பட்டாசு பெட்டிகள் வழங்கப்பட்டன. திருபுவனை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அங்காளன், பள்ளிச் சிறுவர்களுக்கு பட்டாசு பெட்டிகளை வழங்கி, தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். JCM மக்கள் மன்றம் சார்பில் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு இந்த பட்டாசுகள் வழங்கப்பட்டு, மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வில் JCM மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர்…

Read More

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு கண்டனம்!

டாஸ்மாக் முறைகேடு புகார் வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கடுமையான கேள்விகள் எழுப்பியது. நீதிமன்றம், சந்தேகம் இருந்தாலே எந்த அரசு நிறுவனத்திலும் நுழைந்து ஆவணங்களை எடுத்துச் செல்லலாமா என  கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாடு அரசு வழக்கில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றது எனக் கூறி அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம், அரசு அலுவலகத்தில் சோதனை நடத்துவது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராகவா? என்று கேள்வி எழுப்பியது. அமலாக்கத்துறை வாதம், விசாரணை அதிகாரி தவறு செய்திருந்தால் தனிப்பட்ட முறையில் அவரை…

Read More

கூடலூரில் அரசு பேருந்தை தாக்க முயன்ற காட்டு யானை!

கூடலூர் அருகே கரியசோலை பகுதியில், இரவு நேரத்தில் பயணிகளுடன் சென்ற அரசு பேருந்தை காட்டு யானை தாக்க முயன்ற சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்கிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. கூடலூரிலிருந்து தேவலா வழியாக அரசு பேருந்து கரியமலை பகுதியை நோக்கி சென்றபோது, வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் வெளியேறிய யானை, தனது குட்டியை பாதுகாக்கும் நோக்கில் பேருந்தை தாக்க முயன்றது. பயணிகள் ஹார்ன் ஒலியை கேட்டு ஓட்டுனர்…

Read More

சீர்காழியில் வேல் வடிவ ஆலய கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயிலடி சாலையில், மார்கோனி மந்திராலயா கார்டனில் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ வேல்முருகன் ஆலய கும்பாபிஷேகம் விமர்சியாக நடைபெற்றது. வேல் வடிவில் அமைக்கப்பட்ட ஆலய மண்டலத்தில், புனித நீர் கொண்ட கலசங்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. பின்னர், ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை மற்றும் ஸ்ரீ வேல்முருகன் சுவாமிக்கு மாப்பொடி, மஞ்சள் பொடி, திரவிய பொடி, பால், சந்தனம், பஞ்சாமிர்தம் போன்ற பொருட்களை கொண்டு சிறப்பு…

Read More

விற்பனைக்கு வைத்த 5 கிலோ கஞ்சா – மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த நபர் கைது!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ரயில் நிலையம் அருகே வாகன நிறுத்தம் பகுதியில் விற்பனைக்கு வைத்து இருந்த 5 கிலோ கஞ்சா மீதான நடவடிக்கையில், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மதியார் ரஹ்மான் மொல்லா (26) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பரிந்துரையின் அடிப்படையில், கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் குற்றவாளி மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்நிலையில், கஞ்சா வழக்கு குற்றவாளி மதியார்…

Read More

புதுச்சேரியில் குழந்தைகளுக்கு இலவச பாதுகாப்பு கண்ணாடி…

புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வாங்கும் 20,000 குழந்தைகளுக்கு இலவச பாதுகாப்பு கண்ணாடி வழங்கப்படும். முதலில் 5,000 கண்ணாடிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் அ. குலோத்துங்கன் கூறியதாவது, தீபாவளி போது வெடிக்கும் பட்டாசுகள் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இதற்கெதிராக, அனைத்து பட்டாசு கடைகளிலும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கண்ணாடிகள் வழங்கப்படும். இது புதுச்சேரி அரவிந்த் மருத்துவமனை மற்றும் கெராலிங்க் இன்டர்நேஷனல் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. கண்ணாடிகள், துகள்கள், ஒளி தீவிரம், புகை…

Read More

நேரு எம்.எல்.ஏ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலை கண்டித்து, மாணவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்பப்பெறவும், பாலியல் புகார் விசாரணைக் குழு அமைக்கவும் வலியுறுத்தி அண்ணாசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மனிதநேய மக்கள் சேவை இயக்கத் தலைவர் மற்றும் உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழர் களம், மாணவர் கூட்டமைப்பு, காரைக்கால் மக்கள் போராட்டக் குழு உள்ளிட்ட பல்வேறு சமூக மற்றும் பொதுநல அமைப்புகள்…

Read More

புதுச்சேரியில் சாலை விபத்தில் ஊழியர் பலி!

புதுச்சேரி பத்துக்கண்ணு அருகே செங்கல் ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த மினி லாரி, எதிரே வந்த இருசக்கர வாகனத்தை மோதியதில் தனியார் தொழிற்சாலை மேலாளர் ராஜா (35) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வளவனூர் பகுதியைச் சேர்ந்த ராஜா, புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் உற்பத்தி மேலாளராக பணியாற்றி வந்தார். திருமணமாகி மூன்று மாத பெண் குழந்தைக்கு தந்தையான அவர், பணி காரணமாக புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. லாரி ஓட்டுனர் விபத்துக்குப் பின்…

Read More

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட 21 வயது வாலிபர்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 16 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்த குற்றச்சாட்டில் 21 வயது கவியரசன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பரிந்துரையின் அடிப்படையில், கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் குற்றவாளியை “பாலியல் குற்றவாளி” என கருதி, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்….

Read More

அன்புமணி ஆதரவு பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் தர்ணா போராட்டம்!

அன்புமணி ஆதரவு பாமக சட்டமன்ற உறுப்பினர்கள், ஜி.கே. மணி பாமக சட்டமன்ற உறுப்பினர் குழு தலைவராக இருந்து வரும் பொறுப்பிலிருந்து நீக்கப்படுமாறு கோரி சட்டமன்ற பேரவை வளாகத்தில் தர்ணா போராட்டம் மேற்கொண்டனர். போராட்டத்தில் வெங்கடேஸ்வரன், சிவகுமார், சதாசிவம் ஆகியோர் பங்கேற்றனர். அவர்கள் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரனை பாமக சட்டமன்ற உறுப்பினர் குழு தலைவராக, மற்றும் மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவகுமாரை பாமக கொரடா’வாக நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். போராட்டத்திற்குப் பிறகு வெங்கடேஸ்வரன் செய்தியாளர்களை…

Read More

புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியத்தில் கனமழை!

புதுச்சேரி மாநிலத்தின் ஏனாம் பிராந்தியத்தில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள், கோயில்கள், பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள இடங்களில் மழை நீர் தேங்கி வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 9 செ.மீ மழை பதிவாகியுள்ள இந்த பகுதியில், சித்தாராம வீதி, பிள்ளையார் கோயில் வீதி, நீரோடம் வீதி, சிக்காரிய வீதி போன்ற பகுதிகளில் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வினாயகர் கோயில் மற்றும் ஏனாம் காவல் நிலையம் உள்ளிட்ட…

Read More

தீபாவளி முன்னிட்டு புதுச்சேரியில் பட்டாசு குடோன்களில் போலீசார் தீவிர ஆய்வு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பட்டாசுகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் குடோன்களில் போலீசார் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். பண்டிகை காலங்களில் அனுமதிக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு மட்டுமே பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறதா, அரசின் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதனை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திருக்கனூர், கூனிச்சம்பட்டு, சந்தை புதுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் திருக்கனூர் காவல் ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் ஆய்வு செய்தனர். இதில், அனுமதிக்கப்பட்ட அளவில் மருந்துப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதா மற்றும் அதிக சத்தம் எழுக்கும் பட்டாசுகள்…

Read More

அரியாங்குப்பம்–முள்ளோடை வரை 13 கி.மீ. மேம்பாலத்துக்கு ₹650 கோடி நிதி ஒதுக்கீடு

அரியாங்குப்பம் முதல் கடலூர் எல்லையான முள்ளோடை வரை 13 கிலோமீட்டர் நீளத்தில் மேம்பாலம் அமைக்க ரூ.650 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்தார். புதுச்சேரியில் ரூ.436 கோடி மதிப்பில் உயர்மட்ட வழித்தடம் மற்றும் சாலை மேம்பாட்டு பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, முள்ளோடை வரை மேம்பாலம் அமைக்க மத்திய நிதி வழங்க வேண்டும் என கோரினார். அதனை ஏற்ற…

Read More

மேலும் 2 மேம்பாலங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்க வேண்டும்!

புதுச்சேரியில் மேலும் இரண்டு மேம்பாலங்கள் கட்ட மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என ஆளுநர் கைலாஷ்நாதன் வலியுறுத்தியுள்ளார். புதுவையில் ரூ.436 கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர் கைலாஷ்நாதன், “நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சாலை, பாலம், துறைமுகம், ரயில், விமான நிலையம் போன்ற உள்கட்டமைப்புகள்தான் நரம்பு மண்டலமாக உள்ளன. மக்கள் தொகை, வாகன எண்ணிக்கை, நகர வளர்ச்சி, தொழிற்சாலைகள் அதிகரிப்பால் போக்குவரத்து…

Read More

பழமையான குபேர் அங்காடி இடிப்பு வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!

புதுச்சேரியின் வரலாற்றுச் சிறப்புமிக்க குபேர் அங்காடி இடிப்பு தொடர்பான வழக்கில், நகராட்சி ஆணையர் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள குபேர் அங்காடி, 1826ஆம் ஆண்டு பிரெஞ்சு ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பழமையான சந்தையாகும். தற்போது காய்கறி, பூ, மீன் மற்றும் மளிகை உள்ளிட்ட 1400க்கும் மேற்பட்ட கடைகள் இங்கு செயல்பட்டு வருகின்றன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், பழைய கட்டிடத்தை இடித்து மூன்று அடுக்குகள் கொண்ட புதிய மார்க்கெட்டை…

Read More

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருந்து நிறுவனங்களிலும் ஆய்வு செய்ய அரசு உத்தரவு!

இருமல் மருந்து குடித்து 25 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருந்து தயாரிப்பு நிறுவனங்களிலும் விரிவான ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் மருந்து உற்பத்தி நிறுவனங்களின் தரம், உற்பத்தி முறை, பாதுகாப்பு நடைமுறைகள் ஆகியவை குறித்து துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட வழக்கில், மருந்து தயாரித்த ஸ்ரீசன் நிறுவனம் தயாரிப்பு உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் செயல்பாடு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது….

Read More