சேதுசெல்வம் – LJK தலைவர் சந்திப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகிய அக்கட்சியின் முன்னாள் துணைச் செயலாளரும், ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் முன்னாள் மாநில பொதுச் செயலாளருமான சேது செல்வத்தை, லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின், தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட அவ்வை நகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். முன்னதாக சேதுசெல்வத்தின் இல்லத்திற்கு வருகை தந்த லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினுக்கு, பட்டாசுகள் வெடித்து, மலர் தூவி உற்சாகமான வரவேற்பு…

Read More

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினற்கு LJK சார்பில் நிதி உதவி

காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 11 மீனவர்கள் நேற்று முன்தினம் ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரை லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். காரைக்கால் மாவட்டம் கீழகாசாகுடிமேடு பகுதியில் மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்த அவர் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை மீட்க சட்ட ரீதியான நடவடிக்கைகளை லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்….

Read More

LJK வில் இணைந்த பாஜக மகளிர் அணியினர்

காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த பாஜக மகளிர் அணி மாவட்ட துணை தலைவி பிருந்தா முருகானந்தன் இன்று காலை லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை நேரில் சந்தித்து கட்சியில் இணைந்த நிலையில், அவரது தந்தை சேதுராமன் மற்றும் தங்கை தீபா ஆகியோரும் லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை நேரில் சந்தித்து தங்களை லட்சிய ஜனநாயக கட்சியில் இணைத்து கொண்டனர். உடன் லட்சிய ஜனநாயக கட்சியின் மண்டல பொதுச்செயலாளர் அப்துல் பாஷித்,…

Read More

லட்சிய ஜனநாயகக் கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் புத்தாண்டு வாழ்த்து!

கால் நூற்றாண்டுக்கும் மேலாக பின்தங்கி இருக்கும் புதுவையின் வளர்ச்சிக்கான காலம் கனிந்துள்ளது என லட்சிய ஜனநாயகக் கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். 2026 தேர்தலுக்கான களத்தில் லட்சிய ஜனநாயகக் கட்சி புதுவை மக்களின் அமோக ஆதரவை பெற்று வருகிறது எனவும் லட்சிய ஜனநாயகக் கட்சிக்கும் இதுதான் புத்தாண்டு எனவும் ஜோஸ் சார்லஸ் மார்டின் தெரிவித்துள்ளார் .

Read More

புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டல் – ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிப்பு

புதுச்சேரி மாநிலத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, இன்று நள்ளிரவு கடற்கரை சாலை காந்தி சிலை முன்பு நடைபெற உள்ள புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிக்காக, தமிழகம், பெங்களூர், சென்னை, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரிக்கு வருகை தருகின்றனர். இதனால் புதுச்சேரி நகரம் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடற்கரை சாலை பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்து வருகின்றனர். மேலும், காலை…

Read More

புதுவையில் போலி மாத்திரை விவகாரம்: மருந்தகங்கள் முற்றுகை – அதிமுக கடும் கண்டனம்

புதுச்சேரி:புதுச்சேரியில் போலி மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகார் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் இதுவரை 26 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 13 குடோன்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. புதுவை அரசின் மருந்து கட்டுப்பாட்டு துறை சார்பில் பல்வேறு இடங்களில் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதுச்சேரி புஸ்ஸி வீதியில் செயல்பட்டு வந்த ‘செம்பருத்தி மருந்தகம்’ மற்றும் ‘ஸ்ரீ குகா மருந்தகம்’ ஆகியவற்றில் போலி மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டதாக கண்டறியப்பட்டது. இதையடுத்து,…

Read More

புத்தாண்டையொட்டி புதுச்சேரியில் நள்ளிரவு வரை இயங்கும் மதுபான கடைகளுக்கு கூடுதல் கட்டணம் – கலால் துறை அறிவிப்பு

புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு, புதுச்சேரியில் மதுபான கடைகள் மற்றும் பார்கள் நள்ளிரவு வரை இயங்க அனுமதி வழங்கப்படுவதாக கலால் துறை அறிவித்துள்ளது. இதற்காக சம்பந்தப்பட்ட விற்பனையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கலால் துறை அறிவிப்பின் படி, பார் வசதி இல்லாத சில்லறை மதுபான விற்பனை கடைகள் இரவு 11.30 மணி வரை இயங்க ரூ.10,000 கட்டணம் செலுத்த வேண்டும். அதேபோல், பார் வசதியுடன் கூடிய சில்லறை விற்பனை கடைகள், வழக்கமான நேரத்துக்கு மேலாக கூடுதலாக…

Read More

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் லட்சிய ஜனநாயக கட்சியின் வாக்குறுதி விளக்கக் கூட்டம்

புதுச்சேரி லட்சிய ஜனநாயக கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் தீர்மானங்களை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில், புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டை தொகுதியில் விளக்கவுரை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பெருமளவில் மகளிர் மற்றும் சுயஉதவி குழு பெண்கள் கலந்து கொண்டு, கட்சியின் இலட்சியங்கள் மற்றும் பெண் இலட்சியத் தலைவர்களின் பெயரில் அறிவிக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து விரிவான விளக்கங்களை கவனத்துடன் கேட்டனர். விளக்க உரை நிகழ்ச்சியில் பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்று, கட்சியின் செயல்பாடுகளை பாராட்டினர். கூட்டத்தில் கலந்து கொண்ட மகளிர்,…

Read More

LJK வாக்குறுதிகள் விளக்கவுரை கூட்டம் வில்லியனூரில் நடைபெற்றது

வில்லியனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆத்துவாய்க்கால்பேட்டில், LJK கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் வழங்கிய வாக்குறுதிகள் தொடர்பான விளக்கவுரை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பொதுமக்களுக்கு வாக்குறுதிகளின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது. வில்லியனூர் JCM மன்றத்தின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சமூக சேவகி கிரிஜா விளக்கவுரையை தொகுத்து வழங்கினார். அவர், மக்களின் அன்றாட தேவைகள், பெண்களின் முன்னேற்றம் மற்றும் சமூக நலத்திட்டங்கள் குறித்து வாக்குறுதிகள் எவ்வாறு அமையவுள்ளன என்பதை தெளிவாக எடுத்துரைத்தார்….

Read More

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4.42 லட்சம் பேர் விண்ணப்பம்

தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க இதுவரை 4.42 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தேர்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வரும் தேர்தல்களை முன்னிட்டு, தகுதி பெற்ற புதிய வாக்காளர்கள் அதிக அளவில் விண்ணப்பித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் மற்றும் நேரடி முறைகளில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வரும் நிலையில், சில பகுதிகளில் படிவங்கள் சரியாக பெறப்படாதது மற்றும் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஊரக பகுதிகளில் படிவம் கொடுப்பதில் குழப்பங்கள் நீடிப்பதால்,…

Read More

கோவிலில் திருப்பணிக்காக LJK தலைவர் நிதியுதவி – புதுவையில் நிகழ்ச்சி

புதுவை பாகூர் தொகுதி பரிக்கல்பட்டு அம்மன், வக்காளியம்மன் கோவிலில் மேற்கொள்ளப்படும் திருப்பணிகளுக்காக லட்சிய ஜனநாயக கட்சி (LJK) தலைவர் ஜோஸ் சார்ல்ஸ்மார்டின் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், கோவில் திருப்பணிக்குழுவினரிடம் நிதி உதவியை LJK தலைவர் ஜோஸ் சார்ல்ஸ்மார்டின் நேரில் வழங்கினார். கோவிலின் அடிப்படை வசதிகள் மேம்பாடு மற்றும் திருப்பணிகள் சிறப்பாக நடைபெறுவதற்காக இந்த உதவி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், லட்சிய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் மற்றும் பகுதி மக்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை…

Read More

மக்களுக்குக் நாள்காட்டி வழங்கிய LJK தலைவர் – புதுவையில் நிகழ்ச்சி

புதுவை வில்லியனூர் தொகுதியில், லட்சிய ஜனநாயக கட்சி (LJK) தலைவர் ஜோஸ் சார்ல்ஸ்மார்டின் சார்பில் பொதுமக்களுக்கு நாள்காட்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 2026 ஆம் ஆண்டுக்கான நாள்காட்டி மற்றும் ஒரு கிலோ சர்க்கரை ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், நிகிழ்ச்சியில் பொதுச்செயலாளர் பூக்கடை ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். கட்சியின் சமூக நலப்பணிகளின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பொதுமக்கள் நலனை முன்னிறுத்தி தொடர்ந்து பல்வேறு உதவித் திட்டங்களை…

Read More

புதுவை மூலக்குளம் பகுதியில் தனியார் கராத்தே பயிற்சி பள்ளி தொடக்கம்

புதுவை மூலக்குளம் பகுதியில் புதிதாக தொடங்கப்பட்ட தனியார் கராத்தே பயிற்சி பள்ளி, லட்சிய ஜனநாயக கட்சி (LJK) தலைவர் ஜோஸ் சார்ல்ஸ்மார்டின் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். இந்த தொடக்க நிகழ்ச்சியில், நிகேஷ்சியில் JCM மக்கள் மன்ற தலைவர் ரிகன் ஜான்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்துகொண்டு, நிகழ்ச்சியை சிறப்பித்தனர். பள்ளியின் தொடக்கம், இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே தற்காப்புக் கலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்ததாக தெரிவிக்கப்பட்டது. கராத்தே உள்ளிட்ட தற்காப்புக் கலை…

Read More

கோ-கோ வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின்

புதுவை கோ-கோ அமெச்சூர் அசோசியேஷனைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வரும் 9ஆம் தேதி தெலுங்கானாவில் நடைபெற உள்ள சீனியர் தேசிய கோ-கோ போட்டியில் புதுவையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்க உள்ளனர். இந்தப் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள், போட்டிக்கு முன்னதாக LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை நேரில் சந்தித்து வாழ்த்துகளை பெற்றனர். அப்போது அவர், தேசிய அளவிலான போட்டியில் சிறப்பாக விளையாடி, புதுவைக்கு பெருமை சேர்க்க வேண்டும் என வீரர்களுக்கு உற்சாக வார்த்தைகளை தெரிவித்தார். வீரர்களின் இந்த சாதனை…

Read More

LJKவுக்கு படையெடுக்கும் மகளிர் குழுவினர்.

புதுவை லாஸ்பேட்டை சட்டமன்றத் தொகுதியில், ராஜசேகரன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர், லட்சிய ஜனநாயக கட்சி (LJK)யில் இணைந்தனர். இவர்கள் அனைவரும், LJK கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை நேரில் சந்தித்து, கட்சியின் கொள்கைகளில் நம்பிக்கை தெரிவித்து, அதிகாரப்பூர்வமாக கட்சியில் இணைந்து கொண்டனர். இந்த நிகழ்வின் போது, கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு, புதிய உறுப்பினர்களை வரவேற்றனர்.

Read More

LJK | Pondicherrry |புதுவைக்கு நல்ல மாற்றம் வரட்டும் : LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினுக்கு நன்றி

புதுவையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, கிறிஸ்தவ குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய LJK கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினுக்கு, புதுச்சேரி பாஸ்டர்ஸ் அசோசியேஷன் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்த சந்திப்பின் போது, “புதுவைக்கு நல்ல மாற்றம் வரட்டும்” என வாழ்த்துகளை தெரிவித்த அவர்கள், மக்கள் நலனுக்காக தொடர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும் ஜோஸ் சார்லஸ் மார்டினுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

Read More

LJK வில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

புதுச்சேரி: புதுவை லாஸ்பேட் சட்டமன்றத் தொகுதியில் இருந்து பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த வேல்முருகனும், என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் ராஜேஷும், LJK கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை நேரில் சந்தித்து, அந்தக் கட்சியில் இணைந்தனர். மேலும், தட்டாஞ்சாவடி பகுதியைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர் சுப்ரமணி உள்ளிட்ட பலரும் LJK கட்சியில் இணைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பு நிகழ்வின் போது, LJK கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Read More

மீனவ பெண்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்- LJK தலைவர்

சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு, 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு சின்னத்தில் லட்சிய ஜனநாயக கட்சி (LJK) தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அஞ்சலி செலுத்தினார். புதுச்சேரி வீராம்பட்டினம் கடற்கரையில் உள்ள சுனாமி நினைவு சின்னத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய அவர், உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்தார். இதனைத் தொடர்ந்து, வீராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவ பெண்களுடன் சந்தித்து, அவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து நேரில் கேட்டறிந்தார். மீனவர்களின்…

Read More

LJK சார்பில் சுனாமி நினைவுதின அஞ்சலி: 21ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்

21ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு, 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களுக்கு லட்சிய ஜனநாயக கட்சி (LJK) சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தலைமையில், கட்சியின் நிர்வாகிகள் புதுச்சேரி வீராம்பட்டினம் கடற்கரையில் அமைந்துள்ள சுனாமி நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில், சுனாமியில் உயிரிழந்தவர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்து, அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும், இவ்வகையான பேரழிவுகள் மீண்டும்…

Read More

தந்திரயான் குப்பம் கடலில் குளிக்க சென்ற மாணவன் பலி: உடல் முத்தியால்பேட்டை அருகே கரை ஒதுங்கியது

புதுச்சேரி அருகே தந்திரயான் குப்பம் கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற போது மாயமான 10ம் வகுப்பு மாணவரின் உடல், முத்தியால்பேட்டை அருகே கரை ஒதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. புதுச்சேரி முத்தியால்பேட்டை மணிக்கூண்டு பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவர் பெயின்டர் தொழில் செய்து வருகிறார். அவரது மகன் பரணிதரன், முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். தற்போது அரையாண்டு விடுமுறை என்பதால், நேற்று முன்தினம் காலை பெற்றோருக்கு தெரியாமல், தனது…

Read More

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் போலி சான்றிதழ்: கேரளா மாணவர் கைது

புதுச்சேரி சின்ன காலாப்பட்டில் செயல்பட்டு வரும் மத்திய பல்கலைக்கழகமான புதுச்சேரி பல்கலைக்கழகத்தில், போலி கல்விச் சான்றிதழ் சமர்ப்பித்து மேற்படிப்பிற்காக விண்ணப்பித்ததாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த சித்தீக் என்பவர், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பிற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார். அவரது விண்ணப்பத்தை பரிசீலித்த பல்கலைக்கழக நிர்வாகம், அவர் சமர்ப்பித்திருந்த இளநிலை கல்வி கல்லூரி சான்றிதழ் போலியானது என்பதை கண்டறிந்தது. இதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரி வம்சீதர ரெட்டி,…

Read More

ஆசிரியர்கள் போராட்டத்தில் போலீசார் வாக்குவாதம்

புதுவையில் கல்வித்துறை வளாகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆசிரியர்களின் போராட்டத்தின் போது, போலீசாருக்கும் போராட்டக்கார ஆசிரியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கல்வித்துறை சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து, ஆசிரியர்கள் வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதையடுத்து, அங்கு வந்த போலீசார், அவர்களை அப்புறப்படுத்த முயற்சி செய்தனர். இதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்ட நிலையில், போராட்டத்தை கைவிட்டு கலைந்து போகக் கூறியதாக தகவல்…

Read More

LJK தலைவருக்கு விளையாட்டு வீரர்கள் நன்றி

மகாராஷ்டிராவில் டிசம்பர் 12 முதல் 14 வரை நடைபெற்ற தேசிய அளவிலான கயிறு தாண்டல் (Rope Skipping) சாம்பியன்ஷிப் போட்டியில் புதுவையைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்று, சிறப்பாக விளையாடி பரிசுகளை வென்றனர். இந்த போட்டியில் பங்கேற்பதற்காக தேவையான நிதி உதவியை வழங்கிய லட்சிய ஜனநாயக கட்சி (LJK) தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களை, வெற்றி பெற்ற வீரர்கள் நேரில் சந்தித்தனர். அப்போது, தாங்கள் வென்ற பரிசுகள் மற்றும் பதக்கங்களை காண்பித்து, அவருக்கு நன்றியை தெரிவித்தனர்….

Read More

புதுச்சேரியில் லெனின் சிலை தார்ப்பாயால் மூடல் – போலீஸ் பாதுகாப்பு தொடர்ச்சி

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில், நகர்ப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த லெனின் சிலையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தார்ப்பாய் கொண்டு முழுமையாக மூடியுள்ளனர். தொடர்ந்து, அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட லெனின் வீதியில், மணிமேகலை அரசு பள்ளி அருகே, கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீரென லெனின் சிலையை நிறுவியதாக கூறப்படுகிறது. இதற்கு, நீதிமன்ற உத்தரவின்படி புதிய சிலைகள் அமைக்கக்…

Read More

LJK தலைவர் விளையாட்டு வீரர்களுக்கு நிதியுதவி

புதுவை அமெச்சூர் ரோல் பால் அசோசியேஷன் சார்பில், புதுவை வீரர்கள் வரும் 2025 ஜனவரி 29 முதல் ஜனவரி 1 தேதி வரை ஜம்முவில் நடைபெறவுள்ள 17வது ஜூனியர் நேஷனல் ரோல் பால் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கின்றனர். இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு தேவையான ஊக்குவிப்பு மற்றும் பயணச் செலவுகளுக்காக, ஜர்சி மற்றும் பயண செலவுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. இந்த நிதியுதவியை அனுப்பி வைத்தவர் LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்கள்….

Read More

பணி நிரந்தரம் கோரி புதுச்சேரியில் 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

புதுச்சேரி:பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஆசிரியர்கள் இன்று புதுச்சேரி கல்வித்துறை வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர். புதுச்சேரியில் கடந்த 2020ஆம் ஆண்டு, அந்நேரம் நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், வேலைவாய்ப்பு அலுவலகம், தகுதி தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் 288 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். நிதி நிலைமையை காரணமாகக் காட்டி, அவர்களை அரசு ஒப்பந்த முறையில் பணி அமர்த்தியது. இதனைத் தொடர்ந்து, இவர்களின் ஒப்பந்தம் ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட்டு வந்த நிலையில், தங்களை நிரந்தரமாக்க…

Read More

செஸ் போட்டியை தொடங்கி வைத்த LJK தலைவர்

புதுவை: புதுவை Hunters Queens Trophy முதல் இன்டர்நேஷனல் கிளாசிக் டூர்னமென்ட், புதுவை லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் மற்றும் அவரது துணைவியார் குத்துவிளக்கு ஏற்றி, செஸ் போட்டியை தொடங்கி வைத்தனர். இந்த சர்வதேச அளவிலான கிளாசிக் செஸ் போட்டியில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். போட்டி தொடக்க விழாவில் விளையாட்டு ஆர்வலர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து…

Read More

புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் பெருவிழா: தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

புதுச்சேரி:இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் கிறிஸ்துமஸ் பெருவிழா, புதுச்சேரி முழுவதும் கிறிஸ்தவ மக்களால் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, மாநிலம் முழுவதிலுள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி மற்றும் கூட்டுப் பிரார்த்தனைகள் நடைபெற்றன. புதுச்சேரி மிஷன் வீதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஜென்மராக்கனி ஆலயத்தில், கிறிஸ்துமஸ் விழாவையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, குழந்தை இயேசுவை தோளில் சுமந்தபடி ஆலயத்தை சுற்றிவரும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கடலூர்-புதுச்சேரி உயர்மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில்…

Read More

புதுச்சேரி போலி மருந்து விவகாரம்: முன்னாள் IFS அதிகாரி, GST கண்காணிப்பாளர் கைது: மொத்தம் 23 பேர் சிக்கினர்

புதுச்சேரி: புதுச்சேரியில் போலி மருந்துகளை தயாரித்து நாடு முழுவதும் விநியோகம் செய்த வழக்கில், முன்னாள் IFS அதிகாரி சத்தியமூர்த்தி மற்றும் GST அலுவலக கண்காணிப்பாளர் பரிதா ஆகியோர், சிறப்பு புலனாய்வு குழு (SIT) போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வழக்கு, பிரபல மருந்து நிறுவனமான சன் பார்மா அளித்த புகாரின் பேரில் வெளிச்சத்துக்கு வந்தது. புகாரை தொடர்ந்து, புதுச்சேரி CBCID போலீசார் மேற்கொண்ட விசாரணையில்,…

Read More

புதுச்சேரி நகராட்சி ஊழியர்கள் வாரிசுகளின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ச்சி: 3 பெண்கள் மருத்துவமனையில் அனுமதி

புதுச்சேரி: புதுச்சேரி நகராட்சியில் பணியின் போது உயிரிழந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, உள்ளாட்சி துறை அலுவலகம் முன்பு நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டம், இரவு நேரத்திலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நீண்ட நேரமாக உணவு தவிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டதால் உடல்நலக் குறைவு ஏற்பட்ட மூன்று பெண்கள், அரசு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்கள் கடும் பொருளாதார…

Read More

புதுச்சேரி லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் காமராஜர் நகர் தொகுதியில் கிறிஸ்துமஸ்-புத்தாண்டு வாழ்த்துகள்

புதுச்சேரி: புதுச்சேரி லட்சிய ஜனநாயக கட்சி சார்பில், கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டை முன்னிட்டு, காமராஜர் நகர் தொகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வீடு வீடாகச் சென்று கேக் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி, அக்கட்சியின் தலைவர் திரு. ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அவர்களின் சார்பில் நடத்தப்பட்டது. காமராஜர் நகர் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பொதுமக்களுக்கு கேக் வழங்கி, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளை கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த நிகழ்வுக்கு, காமராஜர் நகர் தொகுதி…

Read More

2026 சட்டமன்றத் தேர்தலில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் வித்தியாசமான கிறிஸ்துமஸ் குடில்-விழிப்புணர்வு முயற்சி

புதுச்சேரி: 2026 சட்டமன்றத் தேர்தலில் 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தும் நோக்கில், வித்தியாசமான முறையில் கிறிஸ்துமஸ் குடில் அமைத்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர். புதுச்சேரி அரியாங்குப்பம் உப்புக்கார வீதியில் வசித்து வரும் சுந்தரராசு, அரியாங்குப்பம் தந்தை பெரியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நுண்கலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் சமூக விழிப்புணர்வை மையமாக வைத்து கிறிஸ்துமஸ் குடில் அமைப்பதை வழக்கமாக கொண்டுள்ள இவர், இந்த ஆண்டு…

Read More

தட்டாஞ்சாவடியில் திறக்கப்பட்ட JCM மக்கள் மன்றம்!

புதுவையில் லட்சிய ஜனநாயக கட்சி சார்பில், புதுவை முழுவதும் JCM மக்கள் மன்றங்கள் தொடர்ச்சியாக திறக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களின் ஆலோசனையின்படி, JCM மன்றத் தலைவர் ரீகன் ஜான் குமார் அவர்களின் தலைமையில், தட்டாஞ்சாவடி தொகுதியில் மன்றத் தலைவர் ராஜா அவர்களின் ஏற்பாட்டில் JCM மன்ற திறப்பு விழா தாகூர் நகர் பகுதியில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் JCM மன்றத் தலைவர் ரீகன் ஜான்…

Read More

LJK சார்பில் மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா | தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினுக்கு உற்சாக வரவேற்பு

லட்சிய ஜனநாயக கட்சி (LJK) சார்பில் காமராஜ் நகர் தொகுதியில் உள்ள 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா சித்தன்குடியில் உள்ள ஜெயராம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க வந்த LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினுக்கு கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து, மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு அவர் நேரில் பரிசுகளை…

Read More

புதுவை வீரர்களுக்கு LJK தலைவர் பாராட்டு – தேசிய போட்டிக்கு முன் ஊக்கமளிப்பு

புதுவையைச் சேர்ந்த டென்னிஸ் மற்றும் வாலிபால் கிளப் வீரர்கள், வரும் 25ம் தேதி ஜார்கண்டில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க உள்ள நிலையில், LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை சந்தித்து வாழ்த்துகளை பெற்றனர். இந்த சந்திப்பின்போது, தேசிய போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் தங்களின் பயிற்சி அனுபவங்கள், எதிர்பார்ப்புகள் குறித்து பகிர்ந்து கொண்டனர். அதற்கு பதிலளித்த ஜோஸ் சார்லஸ் மார்டினை, புதுவை வீரர்கள் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் வகையில் சிறப்பாக விளையாட வேண்டும்…

Read More

LJK-வில் இணைந்த என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள்

புதுச்சேரி:புதுச்சேரி இந்திராநகரைச் சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமையில், 10-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் லட்சிய ஜனநாயக கட்சி (LJK) யில் இணைந்தனர். இவர்கள், LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை நேரில் சந்தித்து, கட்சியின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளில் ஈர்ப்பு அடைந்ததாக தெரிவித்து, தங்களை அதிகாரப்பூர்வமாக கட்சியில் இணைத்துக் கொண்டனர். இந்த இணைவு நிகழ்வின் மூலம், புதுச்சேரி பகுதியில் LJK கட்சியின் அமைப்பு மேலும் வலுப்பெறும் என கட்சி…

Read More

மின்துறை ஓய்வு பெற்ற உதவி பொறியாளர் LJK-வில் இணைவு

புதுச்சேரி:புதுச்சேரி உப்பளம் தொகுதியைச் சேர்ந்த, விருப்ப ஓய்வு பெற்ற மின்துறை உதவி பொறியாளர் சகாயன், லட்சிய ஜனநாயக கட்சி (LJK) தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை நேரில் சந்தித்து, அக்கட்சியில் இணைந்தார். இந்த சந்திப்பின்போது, கட்சியின் பொதுச் செயலாளர் துரைசாமி மற்றும் LJK நிர்வாகி ஜெ.ஜெ. ஜெய்சங்கர் ஆகியோர் உடனிருந்தனர். கட்சியின் கொள்கைகள் மற்றும் சமூக வளர்ச்சி நோக்கங்கள் தம்மை ஈர்த்ததால் LJK-வில் இணைந்ததாக சகாயன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. சகாயன் இணைவால், உப்பளம் தொகுதியில் கட்சியின் அமைப்பு…

Read More

LJK தலைவரை சந்தித்து மீனவம் காப்போம் இயக்கத்தினர் மனு!

மீனவம் காப்போம் மக்கள் இயக்கம் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வநாதன் தலைமையில் நிர்வாகிகள் லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை நேரில் சந்தித்து புதுவையில் லட்சிய ஜனநாயக கட்சியின் நிர்வாக பொறுப்பு மற்றும் வேட்பாளர் பட்டியலில் மீனவர்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். மேலும் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் மீனவர்களுக்கு தற்போது 2 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் நிலையில், அதனை 10 சதவீதமாக உயர்த்த…

Read More

LJK | லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்த வீராம்பட்டினம் மீனவ கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் இளைஞர்கள்

புதுச்சேரி : புதுச்சேரி வீராம்பட்டினம் பகுதியில் JCM மக்கள் மன்ற தலைவர் குமரன் தலைமையில், 50க்கும் மேற்பட்ட வீராம்பட்டினம் மீனவ கிராமத்தின் முக்கியஸ்தர்கள் மற்றும் இளைஞர்கள், லட்சிய ஜனநாயக கட்சி (LJK) தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை நேரில் சந்தித்து, அக்கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்வின்போது, கட்சியின் கொள்கைகள் மற்றும் சமூக நல நோக்கங்கள் குறித்து விளக்கப்பட்டதாகவும், கட்சியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு இணைந்ததாக புதிய உறுப்பினர்கள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அவர்களை வரவேற்ற ஜோஸ் சார்லஸ்…

Read More

லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்த முன்னாள் ராணுவ வீரர், நடிகர் அசோக்பாண்டியன் இராமசாமி

முன்னாள் ராணுவ வீரரும், தமிழ் திரைப்பட நடிகருமான அசோக்பாண்டியன் இராமசாமி, லட்சிய ஜனநாயக கட்சி (LJK) தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை நேரில் சந்தித்து, அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த சந்திப்பு நிகழ்வின்போது, JCM மக்கள் மன்றத்தின் துணைத் தலைவர் ரத்தினமும் உடனிருந்தார். அசோக்பாண்டியன் இராமசாமி கட்சியில் இணைந்ததைத் தொடர்ந்து, அவருக்கு கட்சி சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டதாகவும், அரசியல் மற்றும் சமூக சேவைகளில் அவர் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த…

Read More

புதுச்சேரி முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் நலச் சங்கம் குற்றச்சாட்டு

புதுச்சேரி : புதுச்சேரி முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரத்தாய்மார்கள் நலச் சங்கத்தின் தலைவர் மோகன், முன்னாள் ராணுவ வீரர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் முறையாக வழங்கப்படவில்லை என அரசை கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். அவர் தெரிவித்ததாவது, முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும் என பலமுறை முதலமைச்சரை சந்தித்து மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதே நேரத்தில், தொகுதி வாரியாக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் முதலமைச்சரை சந்தித்து வேண்டப்பட்ட சிலருக்கு…

Read More

புதுச்சேரியில் போலியோ சொட்டு மருந்து முகாம்: 5 வயதுக்குட்பட்ட 74,698 குழந்தைகள் பயனடைவார்கள்

புதுவை : சிறு வயது குழந்தைகளை பாதிக்கக்கூடிய போலியோ நோயிலிருந்து பாதுகாக்கும் நோக்கில், இந்திய அரசு ஆண்டுதோறும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்களை நடத்தி வருகிறது. உலகில் உள்ள 200க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றைத் தவிர மற்ற அனைத்து நாடுகளிலும் போலியோ நோய் முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம், வரும் 21.12.2025 அன்று புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது….

Read More

புதுச்சேரியில் வண்ணமயமான அலங்காரப் பொருட்கள் விற்பனை களைகட்டல்…

கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ், வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. இயேசு கிறிஸ்து பிறந்த தினமான இந்நாளை, கிறிஸ்தவர்கள் தங்களது இல்லங்களில் குடில் அமைத்து, இயேசு சொரூபத்தை வைத்து வெகு விமரிசையாகக் கொண்டாடுவர். இதற்காக வீடுகளில் ஸ்டார், குடில், கிறிஸ்துமஸ் மரம் உள்ளிட்ட அலங்காரங்களை அமைத்து அழகுபடுத்துவது வழக்கம். அந்த வகையில், புதுச்சேரியில் விதவிதமான வண்ணங்களிலும் புதிய வடிவங்களிலும் கிறிஸ்துமஸ் ஸ்டார்கள் விற்பனைக்கு வந்துள்ளன. அதேபோல், கிறிஸ்துமஸ் மரம், குடில் அமைப்பதற்கு…

Read More

தடுப்பூசியால் உயிரிழந்த குழந்தையின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த LJK தலைவர்!

புதுச்சேரி நெட்டப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்திய குழந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவர் பற்றாக்குறையால் கடந்த 5ஆம் தேதி உயிரிழந்த நிலையில் குழந்தையின் குடும்பத்தினரை லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அந்த குழந்தையின் பெற்றோருக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்தார். உடன் சட்டமன்ற உறுப்பினர் அங்காளன், பொதுச்செயலாளர்கள் பூக்கடை ரமேஷ், பிரபாகரன், மண்டல பொதுச்செயலாளர் முனைவர் கண்ணபிரான், சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள்…

Read More

மக்கள் முன்னேற்ற கழக மீனவர் அணி கூட்டம்

புதுவை மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில மீனவர் அணி ஆலோசனைக் கூட்டம், அணி தலைவர் இதயச்சந்திரன் தலைமையில் கிழக்கு மாவட்ட தலைவர் ஜி. சி சந்திரன் மற்றும் கட்சியின் துணைத் தலைவர் நித்தியானந்தம் முன்னிலையில் மில்லினியம் வீதி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதுவை அரசு மீனவர்களுக்கான இ.பி.சி இட ஒதுக்கீட்டை இரண்டு சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், காலாப்பட்டு சாசன் கம்பெனியின் கடலில் உள்ள கழிவுநீர் குழாய் குறித்து…

Read More

கிராமத்து மக்களுக்கு பேருந்து வசதி கோரி LJK தலைவர் மனு

புதுவை இருளஞ்சந்தை மற்றும் தென்னம்பாக்கம் சுற்றுவட்டார கிராமங்களுக்கு பேருந்து வசதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, லட்சிய ஜனநாயக கட்சியின் (LJK) தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் மனு அளித்தார். பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அன்றாடப் போக்குவரத்துக்கு கடும் சிரமம் எதிர்கொண்டு வருவதாகக் கூறி, இதற்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையுடன் சம்பந்தப்பட்ட துறை ஆணையரிடம் நேரில் சந்தித்து LJK தலைவர் மனு வழங்கினார். போக்குவரத்து துறை ஆணையர் அமன் சர்மா நேரில் மனுவை…

Read More

LJK-வில் ஐக்கியமான உழவர்கரை தொகுதி முக்கியஸ்தர்கள்

புதுவை உழவர்கரை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தியாகுபிள்ளை நகரைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள், லட்சிய ஜனநாயக கட்சியின் (LJK) தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை நேரில் சந்தித்து கட்சியில் இணைந்தனர். இந்த சந்திப்பின் போது, கட்சியின் கொள்கைகள் மற்றும் எதிர்கால செயல்திட்டங்களை ஏற்றுக்கொண்டு, LJK-வில் இணைவதாக அவர்கள் உறுதியளித்தனர். புதிய உறுப்பினர்களை வரவேற்ற தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின், கட்சியின் வளர்ச்சியில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கரன், LJK பொதுச்செயலாளர்…

Read More

மல்யுத்தத்தில் வெற்றி – மாணவிக்கு பாராட்டு

புதுவை : தேசிய அளவில் இரண்டாவது இடம் பிடித்து சாதனை படைத்த மாணவி சங்கவியை லட்சிய ஜனநாயக கட்சியின் (LJK) தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் சால்வை அணிவித்து பாராட்டினார். மல்யுத்தத்தில் தேசிய அளவில் 2வது இடம் பிடித்த மாணவி சங்கவிக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. மாணவியின் கல்வி சாதனைக்கு வாழ்த்து தெரிவித்த ஜோஸ் சார்லஸ் மார்டின், இளம் தலைமுறையினர் கல்வி மற்றும் விளையாட்டுத் துறைகளில் சாதிக்க வேண்டும் என ஊக்கமளித்தார்….

Read More

பொங்கலுக்கு பிறகு பாதயாத்திரை – LJK தலைவர் அறிவிப்பு

புதுவை : புதுவையில் லட்சிய ஜனநாயக கட்சியின் (LJK) தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பொங்கலுக்கு பிறகு 60 நாட்கள் புதுவை முழுவதும் பாதயாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். புதுவை மக்களின் பிரச்சனைகளை நேரடியாக அறிந்து, அவர்களது கோரிக்கைகளை கேட்கும் நோக்கில் இந்த பாதயாத்திரை நடத்தப்படுவதாக அவர் கூறினார். மேலும், பாதயாத்திரையின் போது மக்களை சந்தித்து கட்சியின் கொள்கைகள் மற்றும் செயல்திட்டங்களை விளக்க உள்ளதாகவும் தெரிவித்தார். பாதயாத்திரை தொடங்கும்…

Read More

LJK மாநில, மண்டல நிர்வாகிகள் நியமனம்

புதுவை : புதுவையில் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களின் தலைமையில் தொடங்கப்பட்டுள்ள லட்சிய ஜனநாயக கட்சியின் (LJK) மாநில மற்றும் மண்டல நிர்வாகிகள் நியமன விழா இன்று புதுவை ரெட்டியார்பாளையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் முதற்கட்டமாக மாநிலப் பொதுச்செயலாளர்கள், மாநிலச் செயலாளர்கள், மண்டலப் பொதுச்செயலாளர்கள் மற்றும் மாநில செய்தித் தொடர்பாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு மொத்தம் 13 நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அறிவிப்பு வெளியிட்டார். மாநிலப் பொதுச்செயலாளர்களாக டாக்டர் ஆர். துறைசாமி, பூக்கடை…

Read More

ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய கும்பாபிஷேகத்திற்கு நன்கொடை: ஜோஸ் சார்லஸ் மார்டின் வழங்கினார்

புதுச்சேரி: புதுச்சேரி நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட மூலப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்தாலம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேக விழாவிற்காக, லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கினார். ஊர் கிராம முக்கியஸ்தர்கள் இளங்கோ தலைமையில், ஆலய கும்பாபிஷேக ஏற்பாடுகள் தொடர்பாக ஜோஸ் சார்லஸ் மார்டினை சந்தித்தனர். அப்போது, ஆலய திருப்பணி மற்றும் கும்பாபிஷேக பணிகள் சிறப்பாக நடைபெற வேண்டி அவர் இந்த நன்கொடையை வழங்கினார். இந்த நிகழ்வில் ஆலய நிர்வாகிகள், கிராம முக்கியஸ்தர்கள்…

Read More

கோவில் திருப்பணிக்கு நன்கொடை: ஜோஸ் சார்லஸ் மார்டின் வழங்கினார்

புதுச்சேரி: புதுச்சேரி வில்லியனூர் வெள்ளாழர் வீதியில் அமைந்துள்ள அக்கா சாலை விநாயகர் கோவில் திருப்பணிக்காக, லட்சிய ஜனநாயக கட்சி (LJK) தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் நன்கொடை வழங்கினார். LJK பொதுச்செயலாளர் பூக்கடை ரமேஷ் தலைமையில், கோவில் நிர்வாகிகள் திருப்பணி தொடர்பான பத்திரிகையை வழங்கியதை தொடர்ந்து, கோவில் திருப்பணிக்காக ரூ.1 லட்சம் நன்கொடையாக ஜோஸ் சார்லஸ் மார்டின் வழங்கினார். இந்த நிகழ்வில் கோவில் நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு, திருப்பணி பணிகள் சிறப்பாக…

Read More

புதுவையில் 85,531 வாக்காளர்கள் நீக்கம்: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்

புதுச்சேரி: தீவிர சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, புதுச்சேரியில் வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் குலோத்துங்கன் இன்று வெளியிட்டார். இந்த திருத்தத்தின் அடிப்படையில், புதுச்சேரியில் மொத்த வாக்காளர்களில் 10.04 சதவீதம் என 85,531 வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, மாஹே மற்றும் யேனாம் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகளின் முடிவாக இந்த வரைவு பட்டியல் வெளியிடப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, தகுதியான வாக்காளர்கள் தவறுதலாக நீக்கப்பட்டிருந்தால்,…

Read More

LJKவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்!

புதுவையில் சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் லட்சிய ஜனநாயக கட்சியை பிரம்மாண்டமாக கொடியேற்றி தொடங்கிய நிலையில் பல்வேறு கட்சிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் புதுவையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் JCM மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார் மற்றும் பொதுச்செயலாளர் (சட்டம்) வழக்கறிஞர் பிரபாகரன் தலைமையில் புதுவை வழக்கறிஞர் சங்க பொருளாளர் ராஜ பிரகாஷ், முன்னாள் பொருளாளர் லட்சுமணன் ஆகியோர்…

Read More

போலி மருந்து விவகாரத்தில் சிபிஐ விசாரணை மட்டுமே உண்மையை வெளிக்கொண்டு வரும் – ஜோஸ் சார்லஸ் மார்டின்

புதுச்சேரி:போலி மருந்து விவகாரத்தில் எத்தனை SIT குழுக்கள் அமைத்தாலும், முழுமையான வெளிப்படைத்தன்மை கிடைக்காது என்றும், சிபிஐ விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை வெளிவரும் என்றும் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தெரிவித்தார். புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், நடிகர் விஜய் புதுச்சேரி குறித்து புரிதல் இல்லாமல் கருத்து தெரிவித்துள்ளார் என விமர்சனம் செய்தார். புதுச்சேரியைப் பற்றி தெளிவான புரிதல் இல்லாத நிலையில், அவருடன் கூட்டணி குறித்து அவசரமாக முடிவு எடுக்க…

Read More

போலி மருந்து விவகாரத்தில் சிபிஐ விசாரணை அவசியம் – சார்லஸ் மார்டின் பேட்டி

புதுச்சேரி: புதுச்சேரியில் கடல் சார்ந்த வரலாறு மற்றும் மீனவர் சமூகத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில், லட்சிய ஜனநாயக கட்சியின் கொடி கடலில் அறிமுகப்படுத்தப்பட்டது. மீனவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கத்துடன் இந்த நிகழ்வு நடைபெற்றதாக கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், புதுச்சேரியில் பல்வேறு அடிப்படை பிரச்சினைகள் நீண்ட காலமாக தீர்வு காணப்படாமல் இருப்பதாகக் கூறினார். குறிப்பாக, போலி மருந்து விவகாரத்தில் பல முக்கிய புள்ளிகள் தொடர்பில் உள்ளதாக குற்றச்சாட்டுகள்…

Read More

புதுச்சேரியில் குழந்தைகள் தின பரிசளிப்பு விழா – ஜோஸ் சார்லஸ் மார்டின் தலைமையில் நிகழ்ச்சி தொடக்கம்

புதுச்சேரி:புதுச்சேரியில் குழந்தைகள் நலனை முன்னிலைப்படுத்தும் வகையில், குழந்தைகள் தின பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வு, சமூக சேவகரும் லட்சிய ஜனநாயக கட்சியின் (LJK) தலைவருமான ஜோஸ் சார்லஸ் மார்டின் தலைமையில் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியின் தொடக்கமாக குத்துவிளக்கு ஏற்றப்பட்டு, குழந்தைகளுக்கான பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் கலந்து கொண்ட இந்த விழாவில், கல்வி, திறன் வளர்ச்சி மற்றும் குழந்தைகள் நலன் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இந்த விழாவில் சிறப்பு…

Read More

ஐ.நா. மேடையில் உரையாற்றியதற்காக ஜோஸ் சார்லஸ் மார்டினுக்கு உலக சாதனை சங்கம் சான்றிதழ்

புதுச்சேரி:லட்சிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்கள், ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் உரையாற்றியதற்காக உலக சாதனைகள் சங்கம் வழங்கிய சான்றிதழ் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். 9ஆம் தேதி 2025 டிசம்பர் , ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், லட்சிய ஜனநாயகக் கட்சியின் தலைவராக ஜோஸ் சார்லஸ் மார்டின் தனது முதல் உரையை நிகழ்த்தினார். அந்த உரையில், புதுச்சேரி மற்றும் இந்தியாவின் தமிழ் மண்ணை பெருமையுடனும், தொலைநோக்குப்…

Read More

புதுச்சேரியை உலக வரைபடத்தில் முன்னணி நகரமாக மாற்றுவதே இலக்கு – ஜோஸ் சார்லஸ் மார்டின்

புதுச்சேரி:புதுச்சேரியில் சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வரவில்லை என்றும், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் தான் அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளதாக லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தெரிவித்தார். பாண்டி மெரினா கடற்கரையில் நடைபெற்ற லட்சிய ஜனநாயக கட்சியின் தொடக்க விழாவில் உரையாற்றிய அவர், புதுச்சேரியில் பல்வேறு அடிப்படை பிரச்சினைகள் நிலவி வருவதாகக் குறிப்பிட்டார். குடிநீர் தட்டுப்பாடு, மருத்துவத்துறையில் ஊழல் உள்ளிட்ட பல குறைகளுக்கு தீர்வு காண வேண்டிய அவசியம் உள்ளது என அவர் கூறினார்….

Read More

பாண்டி மெரினா கடற்கரையில் லட்சிய ஜனநாயக கட்சி தொடக்க விழா – 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

புதுச்சேரி:புதுச்சேரி சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தலைமையிலான லட்சிய ஜனநாயக கட்சியின் தொடக்க விழா, பாண்டி மெரினா கடற்கரையில் வெகுவாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் புதுச்சேரி முழுவதிலும் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கட்சி தொடக்கத்தை உற்சாகமாகக் கொண்டாடினர். நிகழ்வின் முக்கிய அம்சமாக, லட்சிய ஜனநாயக கட்சியின் கொடி பாடல் வெளியிடப்பட்டது. “சொல் அல்ல செயல் தான் நமது லட்சியம்” என்ற வரிகளுடன் தொடங்கும் இந்த பாடல், கட்சியின் கொள்கைகள் மற்றும்…

Read More

லட்சிய ஜனநாயக கட்சி கொடி அறிமுகம் – ஜோஸ் சார்லஸ் மார்டின் கொடி ஏற்றி தொடக்கம்

புதுச்சேரி:புதுச்சேரியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள லட்சிய ஜனநாயக கட்சியின் (LJK) அதிகாரப்பூர்வ கொடி இன்று பொதுமக்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. கட்சியின் தலைவர் மற்றும் சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் கட்சி கொடியை ஏற்றி வைத்து அரசியல் பயணத்தை தொடங்கினார். நீலம், வெள்ளை, சிவப்பு ஆகிய நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கொடியில், கையில் வேலுடன் சிங்க முத்திரை இடம்பெற்றுள்ளது. மேலும், கொடியில் ஆறு நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், கட்சியின் சின்னமாக LJK என்ற எழுத்தும் பதிக்கப்பட்டுள்ளது. வலிமை, தைரியம்,…

Read More

மும்மத வழிபாட்டுடன் லட்சிய ஜனநாயக கட்சி தொடக்கம் – ஜோஸ் சார்லஸ் மார்டின் பிரார்த்தனை

புதுச்சேரி:புதுச்சேரியில் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட உள்ள லட்சிய ஜனநாயக கட்சியின் தொடக்கத்திற்கு முன்பாக, கட்சியின் நிறுவனர் மற்றும் சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் மும்மத வழிபாடுகளை மேற்கொண்டு பிரார்த்தனை செய்தார். பிள்ளையார் சுழி போட்டு அரசியல் பயணத்தை தொடங்கும் வகையில், அவர் முதலில் புதுவை மணக்குள விநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து, புதுவை தூய ஜென்மராக்கினி அன்னை பேராலயத்தில் பிரார்த்தனை செய்து, அமைதி, மக்கள் நலம் மற்றும் நல்லாட்சிக்காக வேண்டுதல் செய்தார்….

Read More

புதுச்சேரியில் ‘லட்சிய ஜனநாயக கட்சி’ தொடக்கம் – ஜோஸ் சார்லஸ் மார்டின் தலைமையில் அரசியல் பயணம்

புதுச்சேரி:புதுச்சேரியில் புதிய அரசியல் கட்சியாக லட்சிய ஜனநாயக கட்சி இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட உள்ளது. கட்சியின் கொடி மற்றும் கொள்கை பிரகடனம் பொதுமக்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள நிலையில், கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தலைமையில் இந்த புதிய அரசியல் இயக்கம் உதயமாக உள்ளது. மக்கள் நலன், வெளிப்படையான நிர்வாகம் மற்றும் வளர்ச்சி நோக்குள்ள அரசியலை மையமாகக் கொண்டு கட்சி செயல்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியை சிங்கப்பூர் போல மேம்பட்ட நிர்வாகம், உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார…

Read More

மாயமான பெண் கொலை! கொலையாளி கைது!

மாயமான பெண் கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் கழுத்தை நெறித்து படுகொலை. புதுச்சேரி வில்லியனூர் அடுத்த உருவையாறு மேம்பாலம் அருகே சாக்கு மூட்டையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் வில்லியனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாக்கு மூட்டையை திறந்த போது, 45 வயது மதிக்கத்தக்க பெண் அழுகிய நிலையில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்….

Read More

Confed கைத்தறி ஊழியருக்கு உதவிய JCM மக்கள் மன்றத்தினர்!

புதுவை முத்தியால்பேட்டையில் கலையரசி என்ற கைத்தறி ஊழியர் Confedல் பணியாற்றி வந்தார். கால் முறிவு ஏற்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில் மேல் சிகிச்சைக்கு ஏழ்மை காரணமாக சிகிச்சை செய்ய இயலாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். Confed கைத்தறி நெசவாளர்களை சமூக சேவகர் சார்லஸ் மார்டின் சந்தித்த போது அவரிடம் சிகிச்சைக்காக உதவி கோரப்பட்டது. அவரது கோரிக்கையை ஏற்ற சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் நிதியுதவி அளித்து உதவினார். அதன் பின்னர் கலையரசிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு…

Read More

காரைக்காலில் 200க்கும் மேற்பட்டோர் கண்டன பேரணி!

புதுவை மாநிலம் காரைக்காலில் போலி மருந்து விவகாரத்தை கண்டித்து காரைக்கால் போராளிகள் குழுவினர் சார்பில் 200க்கும் மேற்பட்டோர் புதுவை அரசுக்கு எதிராக கண்டன பேரணியில் ஈடுபட்டனர். புதுவையில் கோடிக்கணக்கான போலி மருந்துகள் பிடிபட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலி மருந்து தொழிற்சாலையை கண்டித்தும் இது தொடர்பாக புதுவை அரசு விசாரணை நடத்த வலியுறுத்தியும் இன்று காரைக்காலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி கண்டன பேரணியில் 200க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். புதிய பேருந்து நிலையத்திலிருந்து…

Read More

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 75வது பிறந்த நாள் இன்று! தங்கத்தேர் இழுத்த ரசிகர்கள்!

நடிகர் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளையொட்டி புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் தங்க தேர் இழுத்து அவரது ரசிகர்கள் வழிபட்டனர்! புதுச்சேரி மாநில ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் ஆண்டுதோறும் மணக்குள விநாயகர் கோவிலில் வழிபாடு நடத்துவதும் ஏழை எளிய மக்களுக்கு நல உதவிகளை செய்வதும் ரஜினி ரசிகர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் இந்த ஆண்டு நடிகர் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளையொட்டியும் அவர் கலை உலகத்திற்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதையொட்டியும் சிறப்பிக்கும் விதமாக ரஜினி ரசிகர்கள்…

Read More

போலி மாத்திரை விவகாரம் – 2 பேர் சரணடைந்தனர்!

போலி மாத்திரை தயாரித்து பல மாநிலங்களில் கோடிக்கணக்கில் விற்று தலைமறைவான தொழிற்சாலை அதிபர் உட்பட இரண்டு பேர் புதுவை கோர்ட்டில் சரண் அடைந்தனர். மேலும் போலீஸ் அவர்களை காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலி மாத்திரைகள் தயாரித்த தொழிற்சாலையில் உரிமையாளர் ராஜா அவரது உதவியாளர் விவேக் ஆகியோர் புதுவை நீதிமன்றத்தில் முன்ஜாமின் பெற்றனர். அப்பொழுது காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அவர்களுக்கு முன் ஜாமின் அளிக்கப்பட்டது. எனவே அவர்களது…

Read More

14 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக (PTU) ஓய்வூதியர்கள் பல மாதங்களாக நிலுவையில் உள்ள தொகைகள் மற்றும் நலன்கள் வழங்கப்படுவதில் தொடர்ந்து ஏற்படும் தாமதத்தை கண்டித்து, பல்கலைக்கழக வளாகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் 100 க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற ஊழியர்கள் பங்கேற்றனர். புதுச்சேரி காலாபட்டு பகுதியில் இயங்கி வரும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்கள் எண்ணிக்கை 200-ஐ கடந்துள்ளது. கடந்த சில மாதங்களாக இவர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பிற நல நிதிகள் வழங்கப்படுவதில்…

Read More

திருநள்ளாறு தொகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள்! களத்தில் இறங்கிய JCM மக்கள் மன்றத்தினர்!

புதுவை மாநிலம் திருநள்ளாறு தொகுதி கருக்கங்குடி கிராமத்தில், சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அறிவுறுத்தலின்படி, திருநள்ளாறு தொகுதி JCM மன்ற தலைவர் G.V. பிரபாகரன் தலைமையில் மழையால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களை நேரில் சந்தித்து தார்ப்பாய் வழங்கும் நலத்திட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நலத்திட்டம் வழங்கும் நிகழ்வில் JCM மக்கள் மன்ற நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Read More

த.வெ.க. கார் மீது விழுந்த தகரம், பேனர்களால் பரபரப்பு!

புதுச்சேரி துறைமுக மைதானத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொண்ட பரப்பரை கூட்டம் நடைபெற்றது. மைதானத்தில் கூட்டத்திற்காக தொண்டர்கள் செல்லும் பாதையில் இருபுறமும் தகரம் கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டு பேனர்கள் கட்டப்பட்டிருந்தன. கூட்டம் முடிந்த பிறகு காற்றின் வேகம் அதிகமாக இருந்ததன் காரணமாக தகர தடுப்புகள், பேனர்கள் சாய்ந்து விழுந்தன. அப்போது கூட்டம் முடிந்து மைதானத்திலிருந்து செவிலியர்கள் சென்ற காரின் மீது பேனர்கள் விழுந்ததையடுத்து அங்கிருந்தவர்கள் பேனர்கள், தடுப்புகளை தூக்கி அப்புறபடுத்தி காரை வெளியே…

Read More

“தல வாழ்க! தளபதி வாழ்க!” என முழங்கிய த.வெ.க. தொண்டர்கள்!

அஜித் – விஜய் ஒன்றிணைந்த பேனருடன் புதுவையில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கு வந்து கலந்துகொண்ட த.வெ.க. தொண்டர்கள். புதுச்சேரியில் இன்று தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றினார். இதனை கேட்பதற்காக புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான தமிழக வெற்றி கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அஜித் ரசிகர்களும் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் விஜயும் அஜித்தும் தோல் மீது கை…

Read More

காரைக்கால் – சபரிமலை கோவில் அன்னதானத்திற்கு அனுப்பப்பட்ட பொருட்கள்!

காரைக்காலில் இருந்து ஸ்ரீஐயப்ப தர்மா சேவா சங்கம் சார்பில் சபரிமலை சன்னிதானத்தில் அன்னதானம் செய்ய தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை அனுப்பி வைத்தனர். புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள ஐயப்ப பக்தர்கள் ஒருங்கிணைந்த ஸ்ரீஐயப்ப தர்மா சேவா சங்கம் சார்பில் சபரிமலை சன்னிதானம் மற்றும் எரிமேலி ஆகிய இடங்களில் வரும் 10ஆம் தேதி முதல் அடுத்த மாதம் பத்தாம் தேதி வரை என 30 நாட்கள் ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்கும் வகையில் அதற்கு தேவையான…

Read More

“விஜய் பொதுக்கூட்டம்” துப்பாக்கியுடன் வந்த நபர்

புதுவை : இன்று புதுவையில் நடைபெற உள்ள தவெக மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தை முன்னிட்டு அங்கு பரபரப்பும், பின்னர் தளர்வும் உருவானது. உப்பளம் துறைமுகம் அருகே பெரிய திரளாக மக்கள் திரண்ட நிலையில் கூட்டத்தினுள் நுழைவதற்கான அனுமதி பற்றிய விவகாரம் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. முதலில் கூட்டத்திற்கான நுழைவு பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வாயில் முன்பு பல தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நிறுத்தப்பட்டனர். இதை தொடர்ந்து கட்சியின் பொது செயலாளர் ஆனந்த் பேச்சுவார்த்தை நடத்தி, பாஸ்…

Read More

புதுவையில் இன்று தவெக பொதுக்கூட்டம்

புதுவை : த.வெ.க (தமிழக வெற்றிக் கழகம்) தலைவர் விஜய் தலைமையில் நடைபெற உள்ள இந்த சிறப்பு பொதுக்கூட்டம், புதுவை உப்பளம் மைதானத்தில் ஆரம்பமாக உள்ளது. கட்சியின் சமீபகால அரசியல் முன்னேற்றங்கள், எதிர்கால திட்டங்கள், மாநில வளர்ச்சி தொடர்பான இலக்குகள் உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்து இந்த மேடையில் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுக்கூட்டத்தில் பங்குபெற விரும்புவோருக்கு நுழைவு சீட்டு கட்டாயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கியூ. ஆர் (QR) கோடு இணைந்த நுழைவு சீட்டு…

Read More

த.வெ.க. கூட்டம் – தயார் நிலையில் புதுவை!

புதுவையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரப்புரை கூட்டம் காவல்துறையின் கடுமையான நிபந்தனைகளுடன் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க அனுமதி இல்லை எனவும் புதுவையை சேர்ந்த 5000 பேருக்கு மட்டுமே அனுமதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். முன்னதாக தமிழக வெற்றி கழக கூட்டத்திற்கு பல்வேறு நிபந்தனைகளை காவல்துறை அறிவித்திருந்தது.

Read More

புதுவை – நெட்டப்பாக்கத்தில் தடுப்பூசி போடப்பட்ட குழந்தை உயிரிழந்த பரிதாபம்! நடவடிக்கை எடுக்க JCM மக்கள் மன்றத்தினர் மனு!

காரைக்கால் சுகாதாரத்துறை விழிப்புடன் செயல்பட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க சுகாதாரத்துறை இணை இயக்குனரிடம் JCM மக்கள் மன்றம் சார்பில் கோரிக்கை மனு அளித்த மன்றத்தினர். புதுச்சேரி நெட்டப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்திய மூன்று மாத கைக்குழந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவர் பற்றாக்குறையால் உயிரிழந்த நிலையில், மக்கள் சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அறிவுறுத்தலின்படி காரைக்கால் JCM மக்கள் மன்றத்தின் தெற்கு கிளை தலைவர் அப்துல் பாசித் தலைமையில் நெடுங்காடு கோட்டுச்சேரி கிளை தலைவர்…

Read More

ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போட்ட குழந்தை உயிரிழப்பு – JCM மக்கள் மன்றத்தினர் புகார்

புதுச்சேரி நெட்டப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்திய குழந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவர் பற்றாக்குறையால் உயிரிழந்த நிலையில், குழந்தையின் பெற்றோர் மற்றும் JCM மக்கள் மன்றத்தின் தலைவர் ரீகன் ஜான் குமார் தலைமையில் எம்.எல்.ஏ. அங்காளன், எம்.எல்.ஏ. சிவசங்கர் மற்றும் JCM மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள் தலைமைச் செயலக அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனர். பின்னர் ஊர்வலமாக அங்கிருந்து நடந்து சென்று சுகாதார மற்றும் குடும்ப நல இயக்குனரை சந்தித்து மனு அளித்தனர். சுகாதாரத்துறையில்…

Read More

புதுவையில் கிறிஸ்துமஸ் கேக் மிக்சிங் விழா : சமூகச் சேவகர் ஜோஸ் சார்லஸ் மாட்டின் தொடக்குவிழா

புதுவை:கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு புதுவையில் கேக் மிக்சிங் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் சமூகச் சேவகர் ஜோஸ் சார்லஸ் மாட்டின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கேக் மிக்சிங் விழாவைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் திராட்சை, பேரிச்சம்பழம், அத்திப்பழம் உள்ளிட்ட பலவிதமான உலர்பழங்களை சேர்த்து கேக் மிக்சிங் செய்யப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட ஜோஸ் சார்லஸ் மாட்டின் தாமும் உலர்பழங்களை கலந்து கேக் மிக்சிங் செயலில் பங்கேற்றார். இந்த கலவையால் தயாரிக்கப்படும் கேக்குகள் கிரிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு தயாராக்கப்பட்டது,…

Read More

புதுவையில் JCM மக்கள் மன்றத்தின் வேலை வாய்ப்பு முகாம் : 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்பு

புதுவை, பாகூர்:புதுவை பாகூர் பகுதியில் அமைந்துள்ள மகரிஷி வித்யா மந்திர் CBSE பள்ளி வளாகத்தில் JCM மக்கள் மன்றம் சார்பில் இன்று வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், JCM மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார் தலைமையில் இம்முகாம் நடத்தப்பட்டது. 10-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்ற இந்த வேலை வாய்ப்பு முகாமில், 500-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் வகையில் சிறப்பு…

Read More

புதுவை தவளக்குப்பதில் JCM மக்கள் மன்றம் திறப்பு – 1500 பேருக்கு நலத்திட்ட சேவைகள் வழங்கல்

புதுவை, தவளக்குப்பம் பகுதியில் JCM மக்கள் மன்றத்தின் திறப்புவிழா நடைபெற்றது. புதுவையில் 15வது மன்றமாக தவளக்குப்பதில் JCM மக்கள் மன்றத்தின் சமூகச் சேவகர் ஜோஸ் சார்லஸ் மாட்டின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. இந்த விழாவில், 1500-க்கும் மேற்பட்ட மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து பொதுமக்களின் தேவைகளை முன்னிலைப்படுத்தி நலத்திட்ட பணிகளை செயல்படுத்தி வருவது JCM மக்கள் மன்றத்தின் முக்கியமான நோக்கமாகும். விழாவில் பேசிய ஜோஸ் சார்லஸ் மாட்டின்,“இந்த மாத இறுதிக்குள் மேலும் 30 மக்கள்…

Read More

புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோக்கு அனுமதி இல்லை : பொதுக்கூட்டத்துக்கு மட்டும் அனுமதி

தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் பங்கேற்க உள்ள வரும் 5-ஆம் தேதியிலான ரோடு ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி வழங்க மறுத்துள்ளது. காலாப்பட்டு முதல் கன்னியகோயில் வரை ரோடு ஷோ நடத்த அனுமதி கோரி கடந்த வாரம் டிஜிபிக்கு மனு அளிக்கப்பட்டிருந்தது. பின்னர் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூனா பலமுறை டிஜிபி, ஐஜி, எஸ்எஸ்பிகளை சந்தித்து அனுமதி கேட்டும் தீர்வு கிடைக்கவில்லை. சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படும் அபாயம்…

Read More

புதுவையில் விஜய் ரோட் ஷோவுக்கு அனுமதி மறுப்பு – காவல்துறை திடீர் தீர்மானம்

புதுவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வே.க) தலைவர் விஜய் நடத்த திட்டமிட்டிருந்த ரோட் ஷோவுக்கு காவல்துறை அனுமதி வழங்க மறுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரோட் ஷோ நடைபெற உள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கு சவால்கள் இருப்பதாக காவல்துறை காரணம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், ரோட் ஷோவுக்கு பதிலாக புதிய துறைமுக மைதானத்தில் பெரிய பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கலாம் என அதிகாரிகள் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து த.வே.க தரப்பில் அதிகாரப்பூர்வ…

Read More

கஞ்சா கடத்திய இரண்டு வாலிபர்கள் கைது – போலீசாரை பார்த்து ஓடும் போது ஒருவர் கை முறிவு

விழுப்புரம் மற்றும் புதுச்சேரியை இணைக்கும் மயிலம் சாலை பகுதியில் கஞ்சா கடத்தல் நடைபெறும் தகவல் கிடைத்ததை அடுத்து, சேத்தராப்பட்டு போலீசார் நடத்திய வாகன சோதனையில் இருவர் கைது செய்யப்பட்டனர். சேத்தராப்பட்டு பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் புதுச்சேரி–மயிலம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டினர். ஆனால் மோட்டார் சைக்கிளில்…

Read More

புதுவையில் விஜய் வருகை: அனுமதி குறித்து தெளிவில்லாமல் பதட்டம்

வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி புதுவையில் நடிகர் விஜய் பொதுமக்களை சந்திக்கிறார் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை அந்த நிகழ்வுக்கு புதுவை காவல்துறையிடமிருந்து அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கப்படாததால் நிகழ்ச்சியைச் சேர்ந்தவர்கள் உறுதிபடுத்த முடியாமல் உள்ளனர். இந்த நிலையில், இன்று மீண்டும் தமிழக பொதுச்செயலாளர் ஆனந்த், புதுவை ஐஜியை சந்தித்து நிகழ்ச்சி தொடர்பான முக்கிய ஆலோசனைகளை நடத்தியுள்ளார். விஜயின் பொதுமக்கள் சந்திப்பு நடைபெறுமா, நடத்த அனுமதி கிடைக்குமா என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

புதுச்சேரியில் போலி மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் ரெய்டு – பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மாத்திரைகள் பறிமுதல்

புதுச்சேரி மாநிலம் மேட்டுப்பாளையம் பகுதியில், பிரபல மருந்து நிறுவனம் பெயரில் போலி மருந்துகள் தயாரிக்கப்பட்டதாக தகவல் கிடைத்ததை அடுத்து, சிபிசிஐடி (CBCID) போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான போலி மாத்திரைகள் மற்றும் தொடர்புடைய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தகவல் கிடைத்ததும், அதிகாரிகள் அந்த பகுதியில் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படும் போலி மருந்து தொழிற்சாலையில் திடீர் சோதனை மேற்கொண்டனர். தொழிற்சாலையின் உள்ளே தயாரிக்கப்பட்டிருந்த மருந்துகள், மூலப்பொருட்கள், லேபிள் ஸ்டிக்கர்கள் உள்ளிட்ட பொருட்கள்…

Read More

புதுவைக்கு வருகிறார் விஜய்: வெற்றிக் கழகத்தின் சுற்றுப்பயணத்துக்கான அனுமதி கோரி விண்ணப்பம்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வரும் டிசம்பர் 5ஆம் தேதி புதுவையில் மக்களைச் சந்திக்கும் வகையில் விரிவான சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார். சாலை வழியாக மேற்கொள்ளப்படும் இந்த பயணம் காலாப்பட்டு பகுதியில் தொடங்கி, அஜந்தா சிக்னல், உப்பளம் வாட்டர் டேங்க், மரப்பாலம், அரியாங்குப்பம், தவளகுப்பம், கிருமாம்பாக்கம், கன்னியக்கோவில் உள்ளிட்ட பகுதிகளை ஊடறுத்துச் செல்லும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பயணத்தின் போது விஜய் மக்களுடன் நேரடியாக சந்தித்து உரையாடுவதோடு, தேவையான இடங்களில் ஒலிப் பெருக்கி மூலம்…

Read More

முத்தியால்பேட்டையில் வெறிநாய் கடித்ததால் 5 பேர் காயம்

புதுச்சேரி, நவம்பர் 25:புதுச்சேரி மாவட்டத்தில் சிப்பிக்காவாடா மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக வெறிநாய் அட்டகாசம் செய்து வருகிறது. தொடர்ச்சியாக பொதுமக்கள் மீது துப்பாக்கித் தாக்குதல் நடத்தியது போல், இந்த நாய் பலரை கடித்து காயப்படுத்தியதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். முகப்பெருகா, இரண்டு நாட்களாக சாலையோரம் செல்வோரை, வீதி வழியாகப் பயணிப்பவர்களை அடையாளம் பாராமல் கடித்துவந்தது. இதனால் முத்தியால்பேட்டை- மார்க்கெட் பகுதியில் 5 பேர் கடித்து காயப்படுத்தப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்….

Read More

Say No to Drugs! புதுச்சேரியில் இன்று மாரத்தான் தொடக்கம்

புதுச்சேரி: சமூக சேவகர் சார்லஸ் மார்ட்டின் முன்னெடுப்பில் புதுச்சேரியை போதையற்ற நகரமாக உருவாக்கும் முயற்சியாக ‘போதை வேண்டாம்’ என்ற தலைப்பில் மாரத்தான் ஓட்டம் இன்று நடைபெறுகிறது. புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி சிலையிலிருந்து தொடங்கும் இந்த ஓட்டம், ‘Say No to Drugs’ எனும் செய்தியை மக்களிடம் பரப்புவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக 5 கி.மீ. தூரத்திற்கு இந்த மாரத்தான் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்வில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள்…

Read More

கஞ்சா வர்த்தகர் குண்டர் சட்டத்தில் கைது : ஒரு ஆண்டு சிறை தண்டனை

புதுச்சேரி: லாஸ்பேட்டையைச் சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி சேகர், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் கஞ்சா குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, அவருக்கு ஒரு ஆண்டு தடுப்புச் சிறை தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சேகர் மீது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 9 கஞ்சா விற்பனை சம்பந்தமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பலமுறை கைது செய்யப்பட்டும் தொடர்ந்து சட்டவிரோத கஞ்சா வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. சேகரின் செயல்பாடுகள் பொது…

Read More

காமராஜ் நகர் சுதந்திரப் பொன்விழா நகர ஹவுசிங் போர்டு குடியிருப்பில் உரிமை பத்திரம் வழங்காமை – மக்கள் கடும் அதிருப்தி

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் அமைந்துள்ள சுதந்திரப் பொன்விழா நகர ஹவுசிங் போர்டு குடியிருப்புகள் 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை. ஆனால் இத்தனை ஆண்டுகள் கடந்தும், இங்கு வசிக்கும் மக்களுக்கு இன்னும் வீட்டு உரிமை பத்திரங்கள் வழங்கப்படவில்லை என குடியிருப்போர் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், காலப்போக்கில் வீடுகளில் பல பகுதிகள் இடிந்து விழுவதால் அங்கு வசிக்கும் மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். வீட்டைச் சுற்றி புதர்கள் அதிகம் வளர்ந்து கிடப்பதால், பாம்பு, பூரான், தேள் போன்ற விஷ…

Read More

திருவண்டார் அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு வகுப்பு: மாணவிகளுக்கு MLA அங்காளன் வழங்கிய மதியஉணவு

திருபுவனை தொகுதிக்குட்பட்ட திருவண்டார் கோவில் பகுதியில் அமைந்துள்ள பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கான பொது தேர்வு தயாரிப்பு சிறப்பு வகுப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் தினசரி 100-ற்கு மேற்பட்ட மாணவிகள் கலந்து வருவது குறிப்பிடத்தக்கது. சிறப்பு வகுப்பில் பங்கேற்கும் மாணவிகளுக்கு சிற்றுண்டி அல்லது உணவு வழங்க வேண்டுமென பள்ளி தலைமையாசிரியர் விண்ணப்பித்ததை தொடர்ந்து, திருபுவனை சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு திரு. பா. அங்காளன் MLA அவர்கள் இன்று பள்ளியை…

Read More

புதுச்சேரி வீட்டிற்குள் ஆறடி சாரைப்பாம்பு புகுந்த பரபரப்பு – வனத்துறை ஊழியர்கள் அரைமணி போராட்டத்தில் பிடிப்பு

புதுச்சேரி உழவர்கரை தொகுதி சுதாகர் நகரில் உள்ள ஒரு வீட்டில் திடீரென ஆறடி நீளமான சாரைப்பாம்பு நுழைந்ததால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்தப் பகுதியில், நேற்று இரவு லேசான மழை தொடர்ந்து பெய்து வந்தது. இதன்போது, தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர் குடும்பத்துடன் வீட்டில் சோபாவில் அமர்ந்து உணவு அருந்திக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ஆறடி நீள சாரைப்பாம்பு வீட்டுக்குள் விரைவாக நுழைந்தது. பாம்பை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அலறியடித்து…

Read More

சமூக ஊடகங்களில் ரவுடிகளைக் புகழ்வோருக்கு புதுச்சேரி SSP கடும் எச்சரிக்கை: 24 மணி நேர கண்காணிப்பு தொடக்கம்

புதுச்சேரியில் ரவுடிகள், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் மற்றும் வன்முறை செயல்களை சமூக ஊடகங்களில் ஊக்குவிக்கும் அல்லது புகழ்ந்து பேசும் நபர்களுக்கு எதிராக கடுமையான எச்சரிக்கையை மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் (சட்டம் & ஒழுங்கு) வெளியிட்டுள்ளார். புதுச்சேரி காவல்துறையின் தகவலின்படி, சமூக விரோத செயல்களைப் புகழ்ந்து பேசும் சில டிஜிட்டல் ஊடகக் கணக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இத்தகைய பதிவுகள் இளைஞர்களை தவறான பாதையில் ஈர்க்கும் அபாயம் உள்ளதுடன், பொது அமைதி மற்றும் பாதுகாப்புக்கும் தீங்கு விளைவிப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது….

Read More

கேட்பாரற்று கிடந்த திருபுவனை அரசு பள்ளி விளையாட்டு மைதானம் – MLA பா. அங்காளன் உடனடி நடவடிக்கை

இன்று (17.11.2025) திருபுவனை தொகுதிக்குட்பட்ட கலிதீர்த்தாள் குப்பம்,, கலைஞர் கருணாநிதி அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள காலை மற்றும் மாலையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மக்கள் கூடுகின்றனர். அப்படி இருக்கையில் விளையாட்டு மைதானத்தை சுற்றி செடி கொடிகள், புதர் மண்டி, விஷ ஜந்துக்கள் நடமாடும் நிலை உள்ளதை கண்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் அவர்கள், அங்காளன் MLA-வை சந்தித்து விளையாட்டுத்…

Read More

புதுச்சேரியில் செருப்பு வாங்குவது போல் வந்து மிரட்டிய ரௌடி!

புதுச்சேரி: புதுவையின் முத்தியால்பேட்டை, காந்திவீதியில் செருப்புகள் விற்பனை கடைக்கு வந்த நபர், செருப்பை எடுத்துக்கொண்டு பணம் தர முடியாது, ஓசியில் தர வேண்டும் என கேட்டு பணியில் இருந்த பெண்ணை மிரட்டியுள்ளார். அப்பொழுது பணம் கொடுத்தால்தான் செருப்பு தருவேன் எனக் கூறியதால் ஆத்திரமடைந்த வாலிபர் மறைத்து வைத்திருந்த கத்தியால் கடையின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியுள்ளார். கடையை கத்தியால் தாக்கிய நபர் அதிக போதையில் இருந்ததாக கூறப்படுகிறது, இங்கு போதை பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது….

Read More

சம்பளம் வழங்காததால் பாசிக் அலுவலகக் கார் ஏலம் – நீதிமன்ற உத்தரவு!

புதுச்சேரி: சம்பளம் வழங்காத விவகாரத்தில், புதுச்சேரி பாசிக் (PASIC) அலுவலகத்தின் காரை ஏலம் விட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அருகே பாசிக் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. 2017–2018 ஆண்டுகளில், தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தைச் சேர்ந்த பாதுகாப்பு பணியாளர்கள் அங்கே பணியாற்றினர். ஆனால், அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல், மொத்தம் ரூ. 27.33 லட்சம் நிலுவையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த நிறுவனத்தின் பொது மேலாளர் புதுச்சேரி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த…

Read More

புதுச்சேரியில் உலகளாவிய அமைதி தின விழா நடிகை நமீதா கலந்து சிறப்பிப்பு

புதுச்சேரி:உலகளாவிய அமைதி தினத்தையொட்டி புதுச்சேரியில் சிறப்பான விழா நடைபெற்றது. திருமூத்திமலை உலக சமாதான அறக்கட்டளை ஏற்பாட்டில், “தனிநபர் அமைதி – உலக அமைதி” என்ற தலைப்பில் இந்த விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் புதுவை கலை பண்பாட்டுத்துறை அமைச்சர் திருமுருகன், நடிகை நமீதா, மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய தருணமாக, சரியாக காலை 11.11 மணிக்கு, அனைவரும் உலக அமைதிக்காக ஒரு நிமிடம் அமைதியாக தவமிருந்தனர். விழாவை அறக்கட்டளை நிறுவனர் குருமகான்…

Read More

டெல்லி கார் வெடிப்பு- புதுச்சேரியில் ஜே.சி.எம். மக்கள் மன்றத்தின் மெழுகுவர்த்தி ஊர்வலம்

டெல்லியில் நிகழ்ந்த துயரமான கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், புதுச்சேரி ஜே.சி.எம். மக்கள் மன்றத்தினர் இன்று அமைதி மெழுகுவர்த்தி ஊர்வலத்தை நடத்தினர். அண்ணா சிலை அருகில் தொடங்கிய இந்த ஊர்வலத்திற்கு சமூக சேவகர் சார்லஸ் மார்டின் அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார். அண்ணா சாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாகச் சென்று, தூய ஜென்மராக்கினி அன்னை பேராலயம் அருகே ஊர்வலம் நிறைவுற்றது. சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இந்த அமைதி…

Read More

புதுச்சேரியில் ரூ.30 லட்சம் மோசடி வழக்கு – குற்றவாளிகளுக்கு 5 மாத சிறைத்தண்டனை

புதுச்சேரி:பிரபல கட்டுமான நிறுவனத்தின் பெயரில் போலியாக விளம்பரம் செய்து, ஒப்பந்ததாரரிடம் ரூ.30 லட்சம் மோசடி செய்த வழக்கில் குற்றவாளிகளுக்கு ஐந்து மாத சிறைத்தண்டனையும், தலா ரூ.20,000 அபராதமும் விதித்து புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த கட்டுமான ஒப்பந்ததாரர் சேதுராமன், தனியார் நிறுவனத்தின் பெயரில் Facebook-ல் வெளியான TMT கம்பிகள் பற்றிய விளம்பரத்தை நம்பி, மொத்தம் ரூ.30,97,000 பணத்தை செலுத்தி ஆர்டர் செய்துள்ளார். ஆனால், கம்பிகள் கிடைக்காததால் அவர் சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தார்….

Read More