தமிழகத்தில் பொங்கல் பரிசு நாளை முதல் விநியோகம்

பொங்கல் பரிசுத்தொகுப்பு உடன் ரூ.3,000 பரிசுத்தொகை விநியோகத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். சென்னை ஆலந்தூரில் உள்ள நியாயவிலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பை முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களுக்கு வழங்க உள்ளார். அதன் பின்பு மற்ற பகுதிகளிலும் பொங்கல் தொகுப்பு விநியோகம் செய்யப்படுகிறது. பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள் தமிழகம் முழுவதும் அணைத்து வீடுகளுக்கும் வழங்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

Read More

தூய்மை பணியை தனியாருக்கு ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு – அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட முயன்ற தூய்மை பணியாளர்கள் கைது

சென்னை அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட முயன்ற தூய்மை பணியாளர்களின் போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.தூய்மை பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் அரசின் முடிவை கண்டித்து, திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தை நோக்கி தூய்மை பணியாளர்கள் பேரணியாக சென்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்ய முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தூய்மை பணியாளர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். மேலும், கைது செய்ய மறுத்து சாலையில் வாகனங்களின் அடியில் படுத்து உருண்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்….

Read More

ஜனவரி 20ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடுகிறது

2026ஆம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 20ஆம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆளுநர் ஒப்புதலை தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டம் ஜனவரி 20ஆம் தேதி காலை 9.30 மணிக்கு கூடும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். புதிய ஆண்டின் முதல் கூட்டத்தொடராக நடைபெறும் இந்த சட்டப்பேரவை அமர்வில், முக்கிய அரசியல் மற்றும் நிர்வாக விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மாநிலத்தின் வளர்ச்சி, மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் பொருளாதார நிலை…

Read More

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை உயர்வு: சவரன் ரூ.1,03,120-க்கு விற்பனை

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலையில் கணிசமான உயர்வு ஏற்பட்டுள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.560 உயர்ந்து ரூ.1,03,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.70 உயர்ந்து ரூ.12,890-க்கு விற்பனையாகி வருகிறது. கடந்த நாட்களுடன் ஒப்பிடும்போது தங்க விலையில் ஏற்பட்ட இந்த உயர்வு, நகை வாங்குவோரிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. இதனிடையே, வெள்ளி விலையும் உயர்வை சந்தித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.9 உயர்ந்து ரூ.254-க்கு விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க…

Read More

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை உயர்வு

சென்னை:சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.160 உயர்ந்து, ரூ.1,02,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.20 உயர்ந்து, ரூ.12,820-க்கு விற்பனையாகிறது. இதனிடையே, வெள்ளி விலையும் உயர்வு கண்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 உயர்ந்து, ரூ.245-க்கு விற்பனையாகி வருகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் ஏற்பட்ட இந்த மாற்றம், நகை வாங்குவோரிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

Read More

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாதம் கொண்டாடப்படும் புகழ்பெற்ற ஆருத்ரா தரிசன விழா, இன்று கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது. நடராஜர் சன்னதிக்கு எதிரே அமைந்துள்ள கொடிமரத்தில், வேத மந்திரங்கள் முழங்கவும், பாரம்பரிய வாத்திய கருவிகள் இசைக்கவும் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. இந்த புனித நிகழ்வை உத்சவ ஆச்சாரியார் சிவாநாத் தீட்சிதர் முன்னின்று நடத்தி, கொடியேற்றி வைத்தார். விழாவின் முக்கிய நிகழ்வாக, வருகிற ஜனவரி 2ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து ஜனவரி 3ஆம் தேதி,…

Read More

ஓடும் ரயிலில் சட்டக்கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: காவலர் பணியிடை நீக்கம்

சென்னை / கோவை: சென்னையிலிருந்து கோவைக்கு பயணித்த சட்டக்கல்லூரி மாணவிக்கு, ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படும் காவலர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் சேக் முகமத், பாதுகாப்பு பணிக்காக சென்னைக்கு சென்று விட்டு, கடந்த சனிக்கிழமை சென்னை-கோவை இன்டர்சிட்டி ரயிலில் கோவைக்கு திரும்பியுள்ளார். அதே ரயிலில், சென்னையில் சட்டக்கல்லூரியில் பயிலும் கோவையைச் சேர்ந்த மாணவி பயணம் செய்துள்ளார். ரயில் காட்பாடி அருகே வந்தபோது, மாணவியின்…

Read More

MGR | எம்ஜிஆர் நினைவு தினம்: மெரினாவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் மரியாதை

சென்னை: முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினாவில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில், எம்ஜிஆரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய அதிமுகவினர், அவரது கொள்கைகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட…

Read More

போலி மருந்து விவகாரத்தில் அதிகாரிகள் அதிரடி: முன்னாள் IFS அதிகாரி கைது

ஓசூர்: போலி மருந்துகள் தயாரித்து விற்பனை செய்ததாக தொடர்புடைய வழக்கில், முன்னாள் IFS அதிகாரி சத்தியமூர்த்தியை, ஓசூர் அருகே CBCID போலீசார் கைது செய்துள்ளனர். போலி மருந்து விவகாரம் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாக, அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் இந்த கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கில், GST அலுவலக கண்காணிப்பாளர் பரிதா என்பவரிடமும் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. போலி மருந்து தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தொடர்புடைய ஆவணங்கள்,…

Read More

கூடுவாஞ்சேரியில் போராட்டம்: செவிலியர்கள் வலுக்கட்டாயமாக கைது – போலீஸ் நடவடிக்கைக்கு கண்டனம்

சென்னை அருகே கூடுவாஞ்சேரியில் நடைபெற்ற போராட்டக் களத்திற்கு வந்த செவிலியர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அகிம்சை முறையில் போராட்டம் நடத்த வந்த செவிலியர்கள் மீது போலீசார் கடுமையாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கைது நடவடிக்கையின் போது, கழிவறைக்கு கூட செல்ல அனுமதிக்காமல் போலீசார் நடந்துகொண்டதாக செவிலியர்கள் ஆதங்கம் தெரிவித்தனர். மனிதாபிமானம் இல்லாத இந்த அணுகுமுறை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், அமைதியான முறையில் போராடும் தங்களை இப்படித்தான்…

Read More

த.வெ.க தலைவர் விஜய் தலைமையில் அரசியல் விவாதம்

பட்டினம்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற முக்கிய அரசியல் கூட்டத்தில், தவக தலைவர் விஜய், பொதுச்செயலாளர் ஆனந்த் இல்லாமல் செங்கோட்டையனுடன் மூன்று மணி நேரத்திற்கு மேலாக விரிவான ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில், வரவிருக்கும் தேர்தல் தொடர்பான நிலவரங்கள், கூட்டணி பேச்சுவார்த்தைகள், மேலும் உள்ளாட்சி அமைப்புகள் குறித்த முக்கிய விவகாரங்கள் குறித்து விரிவாக பேசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுச்செயலாளர் ஆனந்த் இந்த கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து அரசியல் வட்டாரங்களில்…

Read More

2026 தேர்தல்: கூட்டணி குழு அமைப்பது குறித்து தவெக தலைவர் விஜய் ஆலோசனை

சென்னை:2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தவெக (தமிழக வெற்றி கழகம்) கட்சியின் கூட்டணி குழு அமைப்பது தொடர்பாக கட்சித் தலைவர் விஜய் இன்று மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கட்சியின் எதிர்கால தேர்தல் வியூகம், கூட்டணி அமைப்பில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் அரசியல் சூழ்நிலை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், என். ஆனந்த் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் இந்த ஆலோசனையில் பங்கேற்று, 2026 தேர்தலுக்கான கூட்டணி…

Read More

வாக்காளர் பட்டியல் நீக்கத்தில் ‘முகவரி இல்லாதவர்கள்’ எண்ணிக்கை கவலைக்கிடம்: ப.சிதம்பரம்

சென்னை:தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் விவரங்கள் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்தில், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களில் 26,32,672 பேர் இறந்தவர்கள் என்றும், 3,39,278 பேர் இரட்டைப் பதிவுகள் கொண்டவர்கள் என்றும் குறிப்பிட்டார். இந்த இரு காரணங்களையும் ஒரு அளவுக்கு ஏற்றுக்கொள்ளலாம் என அவர் தெரிவித்தார். ஆனால், 66,44,881 பேர் ‘முகவரி இல்லாதவர்கள்’ எனக் கூறி நீக்கப்பட்டிருப்பது தான் பெரும் நெருடலாக உள்ளது என…

Read More

சென்னையில் பிட்புல், ராட்வீலர் நாய்கள் வளர்ப்பில் புதிய கட்டுப்பாடுகள்

பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சென்னையில் பிட்புல் மற்றும் ராட்வீலர் இன நாய்களை புதிதாக வாங்கி வளர்ப்பதற்கு சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது. இந்த முடிவு, சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாளை முதல் இந்த இரண்டு இன நாய்களையும் புதியதாக வாங்கி வளர்ப்பது அனுமதிக்கப்படாது. இந்த தடையை மீறி பிட்புல் அல்லது ராட்வீலர் இன நாய்களை புதிதாக வளர்ப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ரூ.1 லட்சம்…

Read More

‘சிக்மா’ படத்தின் டீசர் டிசம்பர் 23ஆம் தேதி வெளியாகும்

இயக்குநர் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படமான ‘சிக்மா’ படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் இந்த படத்தின் டீசர், டிசம்பர் 23ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து, தற்போது ‘சிக்மா’ படம் பின் தயாரிப்பு பணிகளில் (Post Production) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொழில்நுட்ப ரீதியாக சிறப்பான படமாக ‘சிக்மா’ உருவாகி வருவதாக…

Read More

இன்று வெளியாகிறது வரைவு வாக்காளர் பட்டியல்: பெயர் இல்லையெனில் என்ன செய்ய வேண்டும்?

SIR பணிகளைத் தொடர்ந்து, தமிழ்நாட்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (டிசம்பர் 19) வெளியிடப்படுகிறது. இதில் உங்கள் பெயர் இருக்கிறதா? இல்லை என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். தேர்தல் ஆணையத்தின் https://electoralsearch.eci.gov.in/ என்ற இணையதளத்திற்குச் சென்று உங்களுடைய வாக்காளர் அடையாள எண் (EPIC) அல்லது உங்களுடைய தனிப்பட்ட விவரங்களை அளித்தால் விவரங்கள் திரையில் தோன்றும். அதில் உங்களுடைய பெயர், தந்தை பெயர், மாவட்டம், தொகுதி, வாக்குச்சாவடி இடம், வாக்குச்சாவடி தொகுதி எண் ஆகியவை…

Read More

நேற்று மார்கழி முதல் நாள் !

நேற்று மார்கழி முதல் நாள் ஆண்டாள் வேடமிட்டு பக்தி பரவசத்தில் தென் சென்னை திமுக எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன். அன்னவயல் புதுவை ஆண்டாள் அரங்கர்க்குப் பன்னு திருப்பாவை பல்பதியம் -இன்னிசையால் பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு சூடிக்கொடுத்த சுடர்க் கொடியே தொல் பாவை பாடி அருளவல்ல பல்வலையாய் -நாடி நீ வேங்கடவர்க்கு என்னை விதி என்ற இம்மாற்றம் நாம் கடவா வண்ணமே நல்கு. மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!…

Read More

இன்று தங்கம் விலையில் சிறிய சரிவு: சவரன் ரூ.98,800

சென்னை: தங்கம் விலையில் இன்று சற்று குறைவு பதிவாகியுள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.165 குறைந்து ரூ.12,350-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில், சவரன் (8 கிராம்) தங்கத்தின் விலை ரூ.1,320 குறைந்து ரூ.98,800 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.4 குறைந்து ரூ.211-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ வெள்ளி ரூ.4 ஆயிரம் குறைந்து ரூ.2 லட்சத்து 11 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டு…

Read More

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சென்னை: ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் பயணிகளுக்கு வசதிகள் ஏற்படுத்தும் நோக்கில், சென்னையில் கட்டப்பட உள்ள தமிழ்நாடு ஹஜ் இல்லத்திற்கான அடிக்கல்லை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நாட்டினார். இந்த ஹஜ் இல்லம் ஒரு ஏக்கர் அரசு நிலத்தில் கட்டப்படவுள்ளது. இதில் ஒரே நேரத்தில் சுமார் 400 ஹஜ் யாத்திரை பயணிகள் தங்கும் வகையில் தங்கும் அறைகள், அடிப்படை வசதிகள் மற்றும் தேவையான ஆதரவு அமைப்புகள் உருவாக்கப்பட உள்ளன. இந்த திட்டம் நிறைவேறுவதன் மூலம், ஹஜ் யாத்திரை செல்லும்…

Read More

அதிகாரிகளின் வீடுகளில் இருந்த ஆர்டர்லிகள் திரும்பப் பெறல்.

சென்னை: அதிகாரிகளின் வீடுகளில் பாதுகாப்பு மற்றும் தனிப்பணிகளில் ஈடுபட்டு வரும் ஆர்டர்லி காவலர்கள் இனி அந்தப் பணிகளில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று தமிழக பொறுப்பு டிஜிபி அபய் குமார் சிங் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், அதிகாரிகளின் இல்லங்களில் நியமிக்கப்பட்டு தனிப்பணிகளை மேற்கொண்டு வந்த காவலர்கள், தங்களது முதன்மை காவல் பொறுப்புகளுக்கு மீண்டும் மாற்றப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பொதுப் பாதுகாப்பு மற்றும் துறை சார்ந்த முக்கிய பணிகளில் காவல் துறையின் மனிதவளத்தைச்…

Read More

ஈரோட்டில் நாளை மறுநாள் விஜய் பிரசார பொதுக்கூட்டம்: மைதானம் சீரமைக்கும் பணிகள் தீவிரம்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சரளை பகுதியில் உள்ள சுங்கச்சாவடி அருகே, நாளை மறுநாள் (வியாழக்கிழமை) த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கட்சித் தலைவர் விஜய் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இந்த பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்துக்கு அனுமதி கோரியபோது, போலீஸ் துறை சார்பில் 84 கேள்விகள் எழுப்பப்பட்டன. அவற்றுக்கான விளக்கங்கள்…

Read More

ஜனவரியில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி: தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், கூட்டணியை பலப்படுத்தி ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க. தலைமையகம் தீவிர வியூகங்களை வகுத்து வருகிறது. வழக்கமாக தேர்தலுக்கு முன்பு குறைந்தது மூன்று முறை பிரதமர் மாநிலத்திற்கு வருகை தருவார். அந்த வகையில், வருகிற ஜனவரி மாதத்தில் அவரது முதல் தமிழக பயணம் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பயணத்தின் போது ராமேசுவரத்தில் நடைபெற உள்ள காசி தமிழ் சங்கமத்தின் நிறைவு விழா, விவசாயிகளை சந்திக்கும்…

Read More

வாகன சோதனையில் ஈடுபட்ட பெண் போலீஸை ஆட்டோவில் கடத்த முயற்சி – மயிலாப்பூரில் பரபரப்பு

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் அருகே, நேற்று முன்தினம் பெண் போலீஸ் ஒருவர் வாகன சோதனை பணியில் ஈடுபட்டிருந்தார். அந்த நேரத்தில், ஒருவழிப் பாதையில் இருந்து வேகமாக வந்த ஒரு ஆட்டோவை அவர் நிறுத்த முயன்றார். ஆட்டோவை ஓட்டிய நபர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. முதலில் வாகனத்தை நிறுத்துவது போல நடித்து, திடீரென பெண் போலீஸை கட்டிப்பிடித்து ஆட்டோவில் ஏற்றி கடத்த முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அதிர்ச்சியடைந்த பெண் போலீஸ் கூச்சலிட்டதையடுத்து, அருகில் இருந்த பொதுமக்கள்…

Read More

ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தை எட்டும் அபாயம் – நகை வாங்குவோர் கவலை

சென்னையில் தங்கத்தின் விலை மீண்டும் வேகமாக உயர்ந்து வருவதால் நகை வாங்குவோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். சமீபத்தில் அமெரிக்க மத்திய பெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைத்தது இந்த திடீர் விலை உயர்வுக்கான முக்கிய காரணமாக கருதப்படுகிறது. வட்டி விகிதம் குறைக்கப்படும்போது, முதலீட்டாளர்கள் அரசு பத்திரங்கள் மற்றும் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதை குறைத்து, பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தின் மீது அதிக கவனம் செலுத்துவது வழக்கம். இதன் காரணமாக தங்கத்தில் முதலீடு அதிகரித்து, அதன் விலை உயர்ந்து வருவதாக…

Read More

தனியார் பேருந்து டயர் வெடித்து எதிர் திசையில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் உயிரிழப்பு!

திண்டிவனம் அருகே தனியார் டிராவல்ஸூக்கு சொந்தமான பேருந்தின் முன்பக்க டயர் வெடித்து சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் எதிர்திசையில் பாய்ந்ததில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். மேலும், தனியார் பேருந்தில் பயணித்த 25 பேர் காயமடைந்தனர். திருச்சியில் இருந்து சுமார் 25 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி தனியார் சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் திண்டிவனம் அடுத்த கேணிப்பட்டு அருகே பேருந்து நெருங்கியபோது…

Read More

த.வெ.க. அலுவலகத்துக்கு வந்த பா.ம.க.  வழக்கறிஞர் பாலு! திடீர் விசிட் ஏன் ?

பா.ம.க. செய்தித்தொடர்பாளரும் வழக்கறிஞருமான கே. பாலு இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்திற்கு வந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் கூட்டணி எந்தவிதத்தில் இருக்கப்போகிறது என்ற கேள்வி ஒருபுறம் எழுந்துள்ள நிலையில், பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்திற்கு பா.ம.க. வழக்கறிஞர் பாலுவின் திடீர் விசிட் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை வலியுறுத்தி, பாட்டாளி மக்கள்…

Read More

விஜயை முதல்வராக ஏற்றுக்கொள்வோரை அரவணைப்போம் – தவெக முக்கிய தீர்மானங்கள் வெளியீடு

பனையூர்:தமிழகவெற்றிக்கழகத்தின் (தவெக) மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் தயாரிப்பை முன்னிட்டு நான்கு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திமுக ஆட்சியை மாற்றி புதிய தமிழகத்தை அமைக்க வேண்டும் கூட்டத்தில் பேசப்பட்ட முக்கிய அம்சமாக, ஊழல் அதிகரித்து வரும் திமுக ஆட்சியை மாற்றுவது காலத்தின் தேவையாக உள்ளது என்று வலியுறுத்தப்பட்டது. புதியதோர் தமிழகத்தை உருவாக்க தவெக தலைவர் விஜயை முதல்வராக ஏற்றுக்கொண்டு…

Read More

சென்னை பனையூரில் தமிழக வெற்றிக்கழகத்தின் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்கும் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமையகத்தில் தொடங்கியது. காலை 10 மணிக்கு தொடங்கிய இந்தக் கூட்டத்தில், வரவிருக்கும் தேர்தல் பணிகள், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிகள், அடுத்தகட்ட மக்கள் சந்திப்பு திட்டங்கள் மற்றும் கட்சியின் மூலோபாய நகர்வுகள் குறித்து விரிவான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. புதுச்சேரி மக்கள் சந்திப்பைத் தொடர்ந்து ஆலோசனை சமீபத்தில் புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு…

Read More

சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படம் – படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கியது!

சிம்புவின் ‘தக் லைப்’ திரைப்படத்திற்குப் பிறகு உருவாகும், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் புதிய படத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்துவருகிறார். ‘அரசன்’ என்று படத்துக்கு பெயரிடப்பட்டுள்ள நிலையில் இத்திரைப்படம் வடசென்னையை மையமாகக் கொண்ட கேங்ஸ்டர் கதையாக உருவாகிறது. இதில் சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குநர் நெல்சன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்த படத்தில், சிலம்பரசன் இளமையாகவும், முதுமையாகவும் சேர்ந்த இரண்டு வேறுபட்ட தோற்றங்களில் நடிப்பார் எனக் கூறப்படுகிறது….

Read More

கோவையில் செங்கல் சூளைகளுக்கு ரூபாய் 900 கோடி அபராதம்!

கோவை மாவட்டம், தடாகம் பகுதியில் செயல்பட்டு வந்த செங்கல் சூளைகளுக்கு ரூபாய் 900 கோடி அபராதம் விதிக்க டெல்லியில் உள்ள எரிசக்தி ஆராய்ச்சி நிறுவனம் (டெரி) ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்து உள்ளது.செங்கல் சூளைகளுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை நகல் அனுப்பி வருகிறது.கோவை மாவட்டம் சின்ன தடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், சோமயம்பாளையம், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த செங்கல் சூளைகளால் மலையடிவாரம் அருகே உள்ள ஓடைகள் நீர் வழித்தடங்கள் சட்டவிரோதமாக 1.10 கோடி…

Read More

“ஹர ஹர சிவாய நம ஓம்”! விண்ணை பிளந்த பக்தர்கள் கோஷம்! – காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்!

உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் குடமுழுக்கு, வாண வேடிக்கைகள் மற்றும் 70க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்களுடன் வாத்தியங்கள் முழங்க, புனித நீர் தெளிக்கப்பட்டு இன்று அதிகாலை சிறப்பாக நடைபெற்றது. கோவில் திருப்பணிகள் ரூ.29 கோடி மதிப்பீட்டில் பழமை மாறாமல் நடைபெற்றன. பஞ்சபூத தலங்களில் நிலத்திற்கு உரியதாக போற்றப்படும் காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் கோவில், சுமார் 3500 ஆண்டுகள் பழமையானது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இன்று அதிகாலை 5:45…

Read More

பழனி – திருஆவினன்குடி கோவில் கும்பாபிஷேகம்! ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!

பழனியில் உள்ள திருஆவினன்குடி கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி மலையடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி கோயிலில் கடந்த 4ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. இந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணிக்குச் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க 6ஆம் கால யாகசாலை வேள்விகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, புனித கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, குழந்தை வேலாயுத சுவாமி கருவறை விமானம்,…

Read More

அடுத்து மேற்கு வங்காளத்திலும், தமிழ்நாட்டிலும் பா.ஜனதா கூட்டணிதான் மக்கள் ஆதரவுடன் அமோக வெற்றி பெறும்.

குஜராத் மாநிலம் ஆமதாபாத் மாநகராட்சி சார்பில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு, ரூ.1,500 கோடி மதிப்பிலான மூன்று விளையாட்டு வளாகங்கள் உள்பட பல்வேறு மேம்பாட்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், தொடக்க விழாவையும் நடத்தினார். இதில் பெருமளவிலான பொதுமக்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய அவர், 2014 முதல் 2025 வரை பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிப்பயணம் தடைப்படாமல் முன்னேறிவருகிறது என்றும், சமீபத்தில் நிறைவடைந்த நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர…

Read More

‘வேள்பாரி’ படப்பிடிப்பு 2026 ஜூனில் தொடக்கம் – நாயகனாக சூர்யா?

தமிழ் சினிமாவின் மிக பிரமாண்டமான படைப்பாளர்களில் ஒருவராகப் பெயர் பெற்றவர் இயக்குநர் ஷங்கர். எந்திரன், சிவாஜி உள்ளிட்ட பல பெரிய திரைப்படங்களை இயக்கி கோலிவுட்டில் தனித்த நிலையை உருவாக்கியவர். சமீபத்தில் அவர் இயக்கிய இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறாத நிலையில், ஷங்கரின் அடுத்தப்படம் குறித்த தகவல்கள் தற்போது திரைப்பட உலகில் பேச்சு பொருளாகியுள்ளது. சு. வெங்கடேசன் எம்.பி. எழுதிய வரலாற்று நாவல் வீரயுக நாயகன் வேள்பாரியை திரைப்படமாக உருவாக்க…

Read More

சென்னையில் இன்று மழை தொடரும் – வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இன்று மாலை வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று மாலை 7 மணி வரை கீழ்க்கண்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மேலும், காரைக்காலில் இன்று மாலை 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை…

Read More

செங்கோட்டையன் தவெக சேர்வில் பாஜக அழுத்தமில்லை: ரங்கராஜ் பாண்டே விளக்கம்

தமிழக அரசியல் வளையத்தை சூடுபடுத்திய முக்கிய முன்னேற்றமாக, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தது பல்வேறு அரசியல் விளக்கங்களுக்கும் ஊகங்களுக்கும் வழிவகுத்துள்ளது. குறிப்பாக, பாஜக அழுத்தத்தின் பேரில் அவர் தவெகவில் சேர்ந்தார் என்ற குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் அரசியல் விமர்சகர் ரங்கராஜ் பாண்டே முக்கியமான விளக்கங்களை வழங்கினார். செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது பாஜக அழுத்தத்தால் நடந்தது என்பது முற்றிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு என பாண்டே…

Read More

வங்கக்கடலில் நகராது நிற்கும் ஆழ்ந்தகாற்றழுத்தம் : சென்னைக்கு தொடர்ச்சியான கனமழை

சென்னை:சென்னைக்கு அருகே வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் மிதந்து கொண்டிருக்கிறது. இந்த மண்டலம் கடந்த இரண்டு நாளாக ஒரு கிலோ மீட்டருக்குக் கூட நகராமல் அதே இடத்தில் சுழன்று கொண்டிருப்பது காரணமாக, சென்னை மாநகரமும் சுற்றுவட்டார பகுதிகளும் தொடர்ச்சியான கனமழையை அனுபவித்து வருகின்றன. மழையை உருவாக்கும் மேகங்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சுற்றி திரண்டு நிற்பது போன்ற தன்மை இந்த தாழ்வு மண்டலத்திற்கு இருக்கும் என்பதால்,…

Read More

டித்வா புயல்: இலங்கையில் துவம்சம் – தமிழகக் கடலோரத்தில் தாக்கம் எதிர்பார்த்த அளவுக்கு ஏற்படாதது

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான தாழ்வுப்பகுதி வலுப்பெற்று, இலங்கைக்கு அருகில் ‘டித்வா’ என்ற பெயரில் புயலாக மாறியது. நவம்பர் 27-ஆம் தேதி முதல் இரண்டு நாட்களுக்கு இலங்கையில் மிக கனமழை பொழிந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னர் 28-ஆம் தேதி முதல் புயல் தமிழக கடலோரத்தை நோக்கி நகர்ந்தது. ராமேச்வரம், ராமநாதபுரம், அதனைச் சுற்றிய பகுதிகள் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் இடைமறியாத கனமழை பதிவாகியது. தென் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை வரை தாக்கம்…

Read More

கனமழை பாதிப்பு: டெல்டா மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான டிட்வா புயலின் தாக்கத்தால் கடந்த மாதம் 27-ந்தேதி முதல் இலங்கையில் இரண்டு நாட்கள் கனமழை பொழிந்தது. இதனால் அந்நாட்டு பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி, சில இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டிருந்தன. இலங்கையில் பாதிப்பை ஏற்படுத்திய புயல் பின்னர் தமிழக கடலோரங்களை நோக்கி நகர்ந்தது. அதன் விளைவாக 28-ந்தேதி முதல் தென் தமிழக மாவட்டங்கள், கடலோர பகுதிகள் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் இடையறாத கனமழை பெய்தது. மணிக்கு 55 முதல் 75 கிலோமீட்டர்…

Read More

சென்னை-டிட்வா புயல் காரணமாக 54 விமானங்கள் ரத்து

டிட்வா புயல் தீவிரமடைந்து வருவதால், சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. புயல் தாக்கத்தால் விமான இயக்கத்தில் ஏற்பட்ட தடைகள் காரணமாக இன்று மொத்தம் 54 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், இன்னும் சில விமானங்களும் ரத்தாகும் வாய்ப்பு உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயணிகள் சிக்கலில் அகப்படாமல் இருக்க, முன்னதாகவே விமான நிறுவனங்களின் அறிவிப்புகளை சரிபார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தீவிர மழை, பலத்த காற்று காரணமாக விமானங்கள் பாதுகாப்பாக பறக்க முடியாத…

Read More

செங்கோட்டையன் அலுவலகத்தில் புதிய த.வெ.க. பேனர்: அதிமுகவினர் ஆச்சரியம்

கோபி: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், இரண்டு நாட்களுக்கு முன் த.வெ.க.வில் சேர்ந்ததைத் தொடர்ந்து, அவர் நிர்வாக குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் நான்கு மாவட்டங்களுக்கான அமைப்பு செயலர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டார். இதையடுத்து, ஈரோடு மாவட்டம் கோபி அருகே கரட்டூரில் உள்ள அவரது அலுவலகம் முன்பிருந்த பழைய அதிமுக பேனர் அகற்றப்பட்டு, புதிய த.வெ.க. பேனர் நேற்று பதிக்கப்பட்டது. அந்தப் பேனரில் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்களுடன் த.வெ.க தலைவர் விஜய்யின் படமும்…

Read More

வங்கக்கடலில் உருவான ‘டிட்வா’ புயல் தமிழகத்தை நோக்கி நகர்வு : எச்சரிக்கை அறிவிப்பு

வங்கக்கடலில் இலங்கை அருகே உருவாகியுள்ள ‘டிட்வா’ புயல், தற்போது மணிக்கு 10 கி.மீ வேகத்தில் வடமேற்குத் திசையை நோக்கி நகர்ந்து வருகிறது.இந்த புயல் தற்போது சென்னை நகரத்திலிருந்து சுமார் 560 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை துறை கணிப்பின் படி, ‘டிட்வா’ புயல் வரும் 30ஆம் தேதி அதிகாலை வடதமிழ்நாடு வழியாக கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. புயலின் தாக்கத்தால் சென்னை, கடலூர், பாம்பன், புதுச்சேரி, குடலூர்…

Read More

விஜயைச் சந்தித்த செங்கோட்டையன் : தமிழக அரசியலில் புதிய திருப்பம்!

சென்னை: அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. செங்கோட்டையன், தனது பதவியை ராஜினாமா செய்த பின்னர், நடிகர் விஜய்யை சந்தித்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய்யின் இல்லத்தில் செங்கோட்டையன் நேரில் சென்று சந்தித்ததாக தகவல்கள் உறுதிசெய்கின்றன. இதனால் அவர் அரசியல் திசைமாற்றம் மேற்கொள்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் அதிமுகவை ஒருங்கிணைக்கும் காலக்கெடு விதித்து கருத்து வெளியிட்ட செங்கோட்டையனை, கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அவரை…

Read More

மதுரையில் ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி: எம்ஜிஆர் மைதானம் 16 நாட்கள் மூடல், பாதுகாப்பு அதிகரிப்பு

மதுரையில் நடைபெற உள்ள 14வது ஜூனியர் ஆடவர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகளை முன்னிட்டு, எம்.ஜி.ஆர் விளையாட்டரங்கில் பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. நவம்பர் 25 முதல் டிசம்பர் 10 வரை, உள்ளூர் வீரர்களும் பயிற்சியாளர்களும் மைதானத்தில் நுழைவது மற்றும் பயிற்சி செய்வது தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை நவம்பர் 28 முதல் டிசம்பர் 8 வரை மதுரை எம்.ஜி.ஆர் அரங்கில் நடக்கிறது. உலகின் 12 முன்னணி நாடுகளைச் சேர்ந்த ஜூனியர் அணிகள் இதில் பங்கேற்கின்றன….

Read More

“பராசக்தி” இன்று மாலை ரத்னமாலா இரண்டாவது பாடல் வெளியீடு

சிவகார்த்திகேயன் தனது 25வது படமாக நடித்துள்ள “பராசக்தி” படத்தை சதா கொங்கரா இயக்கி வருகின்றார். இந்த படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தின் இசைத் தயாரிப்புப் பணிகள் தற்சமயம் நடைமுறைப் பூர்வமாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்திலிருந்து “அழகே அழகே” என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இன்று மேலும் ஒரு ரத்னமாலா இரண்டாவது பாடல் மாலை 5.30…

Read More

தங்கம் விலை தொடர்ந்து உயர்வு: சவரன் ரூ.94,400-ஐ எட்டியது!

சென்னை:சர்வதேச சந்தை நிலவரங்களில் ஏற்பட்ட மாற்றங்களின் தாக்கமாக, தங்கம் விலை நாட்டில் மீண்டும் உயர்ந்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் ஏற்ற-இறக்க நிலையை சந்தித்து வருகின்றன. நவம்பர் 24-ஆம் தேதி சென்னை சந்தையில் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.11,520 எனவும், சவரன் ரூ.92,160 எனவும் விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.171 ஆக இருந்தது. அதன்பிறகு, நவம்பர் 25-ஆம் தேதி தங்கம் விலையில் திடீர் உயர்வு…

Read More

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமாசெய்தார்

அதிமுகவின் முக்கிய மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன், 1977 முதல் இதுவரை ஒன்பது முறை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அனுபவம் மிக்கவர். முதலாவது சத்தியமங்கலம் தொகுதியிலும், அதன் பின் தொடர்ந்து எட்டு முறை கோபிச்செட்டிபாளையம் தொகுதியிலும் அவர் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக ஆட்சி காலங்களில் வனத்துறை, போக்குவரத்து, வேளாண்மை, தகவல் தொழில்நுட்பம், வருவாய் என பல்வேறு துறைகளில் அமைச்சராக பணியாற்றியுள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பின், அவர் கட்சியின் அமைப்பு செயலாளராக இருந்தாலும், பின்னர் எடப்பாடி பழனிசாமி…

Read More

புதுவைக்கு வருகிறார் விஜய்: வெற்றிக் கழகத்தின் சுற்றுப்பயணத்துக்கான அனுமதி கோரி விண்ணப்பம்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வரும் டிசம்பர் 5ஆம் தேதி புதுவையில் மக்களைச் சந்திக்கும் வகையில் விரிவான சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார். சாலை வழியாக மேற்கொள்ளப்படும் இந்த பயணம் காலாப்பட்டு பகுதியில் தொடங்கி, அஜந்தா சிக்னல், உப்பளம் வாட்டர் டேங்க், மரப்பாலம், அரியாங்குப்பம், தவளகுப்பம், கிருமாம்பாக்கம், கன்னியக்கோவில் உள்ளிட்ட பகுதிகளை ஊடறுத்துச் செல்லும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பயணத்தின் போது விஜய் மக்களுடன் நேரடியாக சந்தித்து உரையாடுவதோடு, தேவையான இடங்களில் ஒலிப் பெருக்கி மூலம்…

Read More

தமிழகத்தில் மழை தீவிரம் அதிகரிப்பு, வானிலை மையம் எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

சென்னை, நவம்பர் 26:தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதியில் பல்வேறு வானிலை அமைப்புகள் உருவாகியுள்ளதால் அடுத்த சில நாட்களுக்குள் மழை தீவிரம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கிறது. நகரின் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31°C-க்கு அருகிலும், குறைந்தபட்சம் 25–26°C-க்கு அருகிலும் இருக்கும். மலாக்கா ஜலசந்தியில் உருவான அமைப்பு வலுப்பெறுகிறது…

Read More

தென் வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு உருவாகியது, அடுத்த 24 மணிநேரத்தில் வலுப்பெறும் சாத்தியம்

சென்னை, குமரிக்கடல் மற்றும் இலங்கை கரையை ஒட்டிய பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வு உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த தாழ்வு அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற வாய்ப்பு உள்ளது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில், அந்தமான் அருகே நிலவும் காற்றழுத்தத் தாழ்வு பகுதி இன்னும் ஆறு மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், இது தொடர்ந்து வலுத்து வரும் நாளை மறுநாள் 27ஆம்…

Read More

திருக்கார்த்திகை தீபத் திருவிழா: அண்ணாமலையார் கோவிலில் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திகழும் மேலும் நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகச் சிறப்பிப்படும் திருவண்ணாமலையில், உலகப் புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவிலில் வருடந்தோறும் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இந்தாண்டும் மிகுந்த பக்தி பேரரவத்துடன் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டிற்கான திருவிழா வரும் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகிறது. டிசம்பர் 3ஆம் தேதி அதிகாலை அண்ணாமலையார் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டு, அதே நாள் மாலை 6 மணிக்கு 2668 அடி உயரத்தில் உள்ள…

Read More

கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமானார் : இலக்கிய உலகில் துயரச்செய்தி

புகழ்பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் (வயது 92) உடல்நலக் குறைவால் இன்று காலமானார். தமிழ் இலக்கியத் துறையில் தனித்துவமான குரலாக விளங்கிய இவர், கவிதை, புதுக்கவிதை, மேடைப் பேச்சு என பல்வேறு துறைகளில் அழியாத தடம் பதித்திருந்தார். “வணக்கம் வள்ளுவ”நாடகத்திற்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற இவர், மரபுக் கவிதை முதல் புதுக்கவிதை வரை பல வடிவங்களில் ஆழமான படைப்புகளை வழங்கியவர். சமூகத்தில் நிலவும் பிரச்சினைகள், மனிதநேயப் பார்வை, பெண்கள் உரிமை, சமத்துவம் போன்ற கருத்துக்களை தன்னுடைய…

Read More

தெற்கு அந்தமான் கடலில் புதிய தாழ்வு உருவானது: பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

சென்னை: வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் உருவாகி வரும் வானிலை மாற்றங்களின் காரணமாக அடுத்த சில நாட்களிலும் தென்னிந்திய கடல்சூழலில் மழை வலுத்து பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக்கடல் தாழ்வு வலுவிழந்தது : நவம்பர் 20ஆம் தேதி தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு அருகே நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து, 21ஆம் தேதி காலை அது வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக மட்டுமே காணப்பட்டது. இதேபோல் தெற்கு அந்தமான் கடல் மேல் வளிமண்டல…

Read More

காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பு நாளை நடைபெறவுள்ளது

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவர்ச்சத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நாளை மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் 1,500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க இருப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பை வெற்றிகரமாக நடத்துவதற்கான அனைத்து பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளும் செய்யப்பட்டுள்ளது என்றும் த.வெ.க. தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. நிகழ்ச்சியில் வரும் பொதுமக்களின் மனுக்களை பெறுதல், அவர்களின் தேவைகளை கேட்பது உள்ளிட்ட செயல்பாடுகள் நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

முதல்வர் ஸ்டாலின் கடிதம்: கோவை – மதுரை மெட்ரோ திட்டங்களை மீள் பரிசீலனை செய்ய பிரதமருக்கு வேண்டுகோள்

கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் சேவையை நிறுவுவதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் (DPR) குறித்து மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டின் நகரப் போக்குவரத்து வளர்ச்சியில் கோவை மற்றும் மதுரை முக்கிய நகரங்களாகும். இந்நகரங்களில் மக்கள் தொகை மற்றும் வாகன நெரிசல் அதிகரித்து வருவதால், மெட்ரோ ரயில் சேவை மிக அவசியமானதாக தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இதனை முன்னிட்டு,…

Read More

ஜனநாயகன்’ படத்தில் புதிய அப்டேட் – ரசிகர்களுக்கு படக்குழுவின் சிறப்பு ட்ரீட்

விஜய் நடிப்பில் எச். வினோத் இயக்கும் ‘ஜனநாயகன்’ படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாக உறுதியாகியுள்ளது. அரசியலில் களமிறங்கும் நிலையில், விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இது உருவாகி வருவதால், ரசிகர்களிடையே இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் முதல் பாடல் “தளபதி கச்சேரி” சில நாட்களுக்கு முன்…

Read More

மதுரையில் சர்வதேச ஹாக்கி அரங்கு திறக்கத் தயாராகிறது – 13 நாடுகள் பங்கேற்கும் உலகக்கோப்பை

மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உருவாக்கப்பட்டுள்ள புதிய சர்வதேச ஹாக்கி அரங்கு நாளை (நவம்பர் 22) அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட உள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ரூ. 10.55 கோடி செலவில் இந்த அரங்கத்தை நவீன வசதிகளுடன் மேம்படுத்தியுள்ளது. அரங்கின் புதிய அமைப்பு மற்றும் பணிகள் நுழைவாயில் மற்றும் சுற்றுப்புற அழகுபடுத்தல் பின்னணி நுழைவாயில் மின்விளக்குகள், செயற்கை நீரூற்று மற்றும் ஹாக்கி ஸ்டிக் வடிவமைப்புடன் அலங்கரிக்கப்படுகிறது.இடம் முழுவதும் சாலை அமைப்பு, பூச்சு மற்றும் தரை வேலைகள் இன்று முடிக்கப்படுகின்றன….

Read More

சமூக வலைதளங்களில் இசைஞானியின் புகைப்படம் இனி ‘காப்புரிமை கண்காணிப்பு’, ஐகோர்ட்டின் அதிரடி உத்தரவு.

தமிழ் சினிமாவில் இசையின் வரலாறே பேசும் பெயர் இசைஞானி இளையராஜா. 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி மூலம் அறிமுகமான அவர், இன்று வரை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்து, 10,000-க்கும் அதிகமான பாடல்களை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். இவ்வளவு பெரும் இசை அந்தஸ்தை பெற்ற இளையராஜாவின் புகைப்படங்களும், பாடல்களும் அனுமதியின்றி பயன்படுத்தப்படுகின்றன என்ற குற்றச்சாட்டில் அவரது தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பல்வேறு…

Read More

“ஆண்கள் தினம் அப்படின்னு ஒன்று இருக்கா?” ஆண்ட்ரியாவின் கேள்வி, ரசிகர்கள் வேதனை!

சர்வதேச ஆண்கள் தினத்தை முன்னிட்டு நடிகை–பாடகி ஆண்ட்ரியாவிடம் ஓர் சாதாரண கேள்வி கேட்ட செய்தியாளர் கூட, அந்த ஒரு கேள்வி இணையத்தில் எவ்வளவு ‘ரியாக்ஷன்’ உருவாக்கும் என்பதை எதிர்பார்க்கவில்லை.ஆனால் ஆண்ட்ரியாவின் ஆச்சரியமும், சிரிப்பும், அதற்குப் பிறகு ரசிகர்கள் எழுதிய கமெண்டுகளும், இவை அனைத்தும் சேர்ந்து சமூக வலைதளத்தில் பெரிய கலகலப்பை உருவாக்கியுள்ளன. “அடடா… அப்படின்னு ஒரு தினமா இருக்கா?” – ஆண்ட்ரியாவின் நேரடி ரியாக்ஷன் ‘மாஸ்க்’ படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் ஆண்ட்ரியாவிடம் சர்வதேச ஆண்கள் தினம்…

Read More

ராமேசுவரம் அதிர்ச்சி: ஒருதலைக் காதல் கொடூரமாக முடிந்தது

ராமேசுவரம் அருகே உள்ள சேரான்கோட்டை கிராமத்தில் நடந்த பிளஸ்-2 மாணவி ஷாலினி கொலைச் சம்பவம், மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த கொடூரக் கொலையில் தொடர்புடைய மீனவர் முனியராஜ் 21 (வயது) கைது செய்யப்பட்ட பின்னர், அவர் அளித்த வாக்குமூலம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷாலினி 17 (வயது) அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். மீனவர் குடும்பத்தைச் சேர்ந்த இவரை, அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் முனியராஜ் சில மாதங்களாக ஒருதலைப்பட்சமாக காதலித்து…

Read More

2048-ல் சென்னை முழுமையாக மாறும்… விரிவான போக்குவரத்து திட்டம் வெளியீடு

சென்னை நகரம் அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளில் பெரிய மாற்றத்தை நோக்கி நகர்கிறது. 2048 வரை நகரின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில், சென்னை மாநகரப் போக்குவரத்து ஆணையம் (CUMTA) விரிவான போக்குவரத்து திட்டம் (Comprehensive Mobility Plan – CMP) ஒன்றை உருவாக்கி வருகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. மெட்ரோ – LRT – RRTS: சென்னைக்கு புதிய போக்குவரத்து வலையமைப்பு புதிய CMP திட்டம், சென்னையின் தினசரி பயணத்தை எளிதாக்க பல்வேறு…

Read More

தமிழ்: தொன்மையும் உலகளாவிய பெருமையும் தாங்கும் மொழி

முன்னுரை  கல் தோன்றி மண் தோன்றா காலத்திதே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி” என்ற வரி, தமிழர்களின் கதையை காலத்துக்கும் மேல் உயர்த்திக்காட்டும் பெரும் சான்றாகும். மனித நாகரிகத்தின் ஆரம்ப காலத்திலேயே உருவெடுத்து, ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும் உயிரோடு வளர்ந்து வரும் மொழி “அது தமிழ்”. தமிழரின் பண்பாடு என்றல் சங்க புலவர் கணியன் பூங்குன்றனார் கூற்றுப்படி “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பதே ஆகும். அதாவது எந்த நாட்டிலிருந்து வந்தவர்களாக இருந்தாலும் அவர்களை வரவேற்று…

Read More

பராமரிப்பு பணி: சென்னையின் சில பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை

சென்னை: தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் (TANGEDCO) வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, சென்னையில் பராமரிப்பு பணிகளுக்காக நாளை மறுநாள் (15.11.2025, சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை சில பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும். அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பராமரிப்பு பணி மதியம் 2 மணிக்குள் முடிந்தால், மின் விநியோகம் அதற்கு முன்னரே மீண்டும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகள்: திருமுல்லைவாயல், லட்சுமிபுரம், பெரியார்நகர், கோனிமேடு, கங்கைநகர், சரத்கண்டிகை,…

Read More

நேபாள நாட்டில் நடைபெற்ற SGADF 2025 விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்று கோவை மாணவர்கள் சாதனை

கோவை: நேபாளத்தில் கடந்த 4 தேதி முதல் 8 தேதி வரை, ரங்கசாலா ஸ்டேடியத்தில், சர்வதேச அளவிலான இன்டோ நேபாள் SGADF 2025 விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் தடகளம், கபடி, கிரிக்கெட், சிலம்பம், யோகா, கராத்தே, கைப்பந்து, கூடைப்பந்து, உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கிய போட்டிகள் நடைபெற்றன. சுமார் 1000 க்கும் மேற்பட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். இந்திய சார்பாக கோவை, வடவள்ளி பகுதியை சேர்ந்த வருண்…

Read More

திருச்செந்தூர் கடற்கரையில் இரவு தங்குவதற்கு தடை – போலீசார் கடும் நடவடிக்கை!

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இங்கு சூரபத்மனை வதம் செய்த இடமாகவும், தெய்வானையுடன் திருமணம் நடைபெற்ற புண்ணிய ஸ்தலமாகவும், கடற்கரையை ஒட்டிய ஒரே தலமாகவும் திருச்செந்தூர் சிறப்புபெற்றுள்ளது. சமீப ஆண்டுகளில் ஜோதிடர் ஒருவர் கூறியதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவலின்படி, “ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளில் இரவு கடற்கரையில் நிலவொளியில் தங்கி, மறுநாள் அதிகாலை புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தால்…

Read More

பா.ஜனதா என்னை இயக்கவில்லை – செங்கோட்டையன் பேட்டி

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட செங்கோட்டையன் எம். எல்.ஏ. கோவை விமான நிலையத்தில் இன்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவரிடம் நிருபர்கள் அரசியல் நிலவரம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இதற்கு செங்கோட்டையன் பதிலளித்து பேசுகையில் கூறியதாவது:- அ.தி.மு.க.வில் என்ன நடக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். என்னை பா.ஜனதா இயக்கு வதாக ஒருசிலர் குற்றம் சாட்டி வருகின்றனர். நான் 53 ஆண்டுகளாக அரசியலில் உள்ளேன். என்னை யாரும் இயக்க முடியாது. ஆலங்குளம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ….

Read More

தஞ்சையில் குருவை நெல் கொள்முதல் உற்சாகமாக நடைபெற்று வருகிறது!

தஞ்சை மாவட்டத்தில் குருவை நெல் சாகுபடி கொள்முதல் பருவம் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் 352 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது அதில் 291 நிலையங்கள் செயல்பாட்டில் இருந்து, நெல் கொள்முதல் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. கொள்முதல் நிலையங்களில் நெல் வாங்குவதற்கான தேவையாக 8,06,563 சாக்குகள் இருப்பில் உள்ளன. அதே நேரத்தில், சேமிப்புக்கிடங்குகளில் 12,73,628 சாக்குகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், கொல்கத்தா சனல் ஆலை வழியாக, மேற்குவங்க…

Read More

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சாட்சிகளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தும் சிபிஐ அதிகாரிகள்

கரூர்: நடிகர் விஜயின் மக்கள் சந்திப்பு பரப்புரையின் போது வேலுச்சாமி புரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த அதிர்ச்சிச் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.நீதிமன்ற உத்தரவின் பேரில் விசாரணை தொடங்கிய சிபிஐ, இதுவரை சம்பந்தப்பட்ட பல்வேறு சாட்சிகள் மற்றும் நிகழ்வில் ஈடுபட்டவர்களிடம் தொடர்ந்து தகவல் சேகரித்து வருகிறது. இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக சாட்சிகளிடம் விசாரணை நடத்துவதற்காக நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. கரூர்…

Read More

தமிழகத்துக்கு மழை வாய்ப்பு – வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது!

அடுத்த 24 மணி நேரத்தில், மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மிதமான காற்றோட்டம் மற்றும் மேகங்கள் உருவாகி வருகின்றன. இந்த காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால், வரும் நவம்பர் 7 வரை,தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வானிலை நிபுணர்கள் தெரிவித்ததாவது,…

Read More

ஒரே காரில் பயணித்த ஓ. பன்னீர்செல்வம் மற்றும் கே. ஏ. செங்கோட்டையன்!

அதிமுக வட்டாரத்தில் புதிய அரசியல் அலைகளை கிளப்பும் வகையில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் ஒரே காரில் பயணித்தது தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுப்பொருளாக மாறியுள்ளது. சமீபத்தில், அதிமுகவினரை ஒன்றிணைக்க வேண்டும் என வலியுறுத்தி பேசியிருந்த செங்கோட்டையன், தற்போது பன்னீர்செல்வத்துடன் இணைந்து பயணம் செய்தது, அந்த கருத்தை வலுப்படுத்தும் அரசியல் அறிகுறியாக பலரும் கருதுகின்றனர். தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரையில் இருந்து ராமநாதபுரத்திற்கு இருவரும் ஒன்றாக காரில்…

Read More

TNPSC Group 4 தேர்வு: காலிப் பணியிடங்கள் அதிகரிக்க தேர்வர்கள் கோரிக்கை

சென்னை:தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப் 4 தேர்வு முடிவடைந்த நிலையில், அறிவிக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இம்முறை குரூப் 4 தேர்வில் மொத்தம் 3,985 காலிப் பணியிடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டன. தமிழக அரசுத் துறைகளில் அதிகபட்ச பணியிடங்களை நிரப்பும் தேர்வாகக் கருதப்படும் குரூப் 4 தேர்வுக்கு, வழக்கம்போல் இந்த முறைவும் பெருமளவில் விண்ணப்பங்கள் வந்தன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே கல்வித் தகுதியாக இருப்பதால், பல்வேறு…

Read More

சுற்றுலா பயணிகளுக்கு அதிர்ச்சி: இனி வால்பாறைக்கும் இ-பாஸ் கட்டாயம்

ஊட்டி மற்றும் கொடைக்கானல் போலவே வால்பாறைக்கும் இனி இ-பாஸ் கட்டாயம் என்ற அதிரடி உத்தரவு அமலுக்கு வரவுள்ளது. சமீப காலமாக வால்பாறை சுற்றுலாத் தலத்தில் சுற்றுலா பயணிகள் பெருமளவில் வருகை தருவதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல். விடுமுறை நாட்களில் சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து, போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுகின்றது. இதை கட்டுப்படுத்தும் நோக்கில், ஊட்டி மற்றும் கொடைக்கானலில் எத்தனை வாகனங்களை அனுமதிக்கலாம் என்பதற்காக சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் நிறுவனங்கள் ஆய்வு…

Read More

சேலத்தில் நடந்து சென்றவரிடம் வழிப்பறி! செல்போன் & ரூ.2000 பணம் பறிப்பு

சேலத்தில் நடந்து சென்ற நபரிடம் இளைஞர்கள் தாக்குதல் நடத்தி செல்போன் மற்றும் பணத்தை பறித்துச் சென்ற காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே மேம்பாலத்தின் மீது திருநெல்வேலி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது நண்பரை பார்ப்பதற்காக நடந்து சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் 3 பேர் அவரை வழிமறித்து கடும் தாக்குதல் நடத்தி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் 2000 ரூபாய் பணத்தை பறித்துச் சென்றனர். பட்ட…

Read More

சோகத்தில் முடிந்த இன்ஸ்டா காதல்! காதலன் உயிரிழப்பு, காதலிக்கு தீவிர சிகிச்சை!

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்த காதலர்கள், கருத்து வேறுபாட்டால் குளத்தில் விழுந்து தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், காதலன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். காதலி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். திருவாரூர் மாவட்டம் மருதப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமாருக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர். இருவருக்கும் கடந்த சில நாட்களாக மனக்கசப்பு ஏற்பட்ட நிலையில், நேற்று…

Read More

கோவை அருகே கோர விபத்து! 4 பேர் உயிரிழப்பு! – ஒருவருக்கு தீவிர சிகிச்சை!

கோவை சிறுவாணி சாலையில் கார் ஒன்று புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்தனர். அதிவேகமாக சென்று கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் நால்வர் உயிரிழந்த நிலையில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். கோவை பேரூர் அருகே உள்ள செட்டிபாளையம் பகுதியில்…

Read More

வங்ககடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி!

தமிழ்நாடு மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பரவலாக இரு மாநிலங்களிலும் அவ்வப்போது மழைபொழிந்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த சில தினங்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுவையில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (21.10.2025) காலை 5:30 மணியளவில் தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம்…

Read More

கரூர் கூட்ட நெரிசல் – உயிரிழந்த 41 பேருக்கு அஞ்சலி – தீபாவளி கொண்டாட வேண்டாம் – த.வெ.க. அறிவிப்பு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி பரப்புரை கூட்டத்தை மேற்கொண்டபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டு பெண்கள், குழந்தைகள் என 41 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகையாக ரூ. 20 லட்சம் வழங்கப்படும் என தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அந்த குடும்பத்தை சேர்ந்தவர்களின் வங்கி கணக்கில் ரூ.20 லட்சம் வரவு வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த…

Read More

கரூர் – ஆவணங்கள் எரிக்கப்பட்டதா? Pen Drive மீட்பு!

கரூரில் சிபிஐ விசாரணை தொடங்க உள்ள நிலையில் எஸ்.ஐ.டி தற்காலிக அலுவலக வளாகத்தில் தேவையற்ற ஆவண நகல்கள் தீயிலிட்டு எரிக்கப்பட்டுள்ளது – குறிப்பாக 32 GB அளவுள்ள பென் டிரைவ் ஒன்றும் கீழே வீசப்பட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த கரூர் வந்துள்ள சிபிஐ அதிகாரிகளை சிறப்பு புலனாய்வு குழுவை சேர்ந்த ஏ.டி.எஸ்.பி ஒருவர் சந்தித்து, கரூர் பிரச்சார கூட்ட நெரிசல் வழக்கில் இதுவரை நடந்த விசாரணை குறித்து விளக்கம் அளித்துள்ளார். சிபிஐ…

Read More

திருச்செந்தூரில் விடிய விடிய கனமழை!

திருச்செந்தூரில் விடிய விடிய இடி மின்னலுடன் பல மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த மழையால் சிவன் கோயில் பிரகாரத்தில் மழைநீர் புகுந்தது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மேலும் வடகிழக்கு பருவ மழையும் தொடங்கி உள்ளது. இதனால் நேற்று முதல் சென்னை உட்பட 22 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. திருச்செந்தூர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக, வெயில் வாட்டி வதைத்த நிலையில், நேற்று காலை…

Read More

தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read More

கவனத்தை ஈர்த்த அதிமுகவினர்! சட்டப்பேரவை வளாகத்தில் பரபரப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் நாள்தோறும் அவை நடவடிக்கைகள் அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவையின் உள்ளே வரும்போது அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் பேட்ஜ் ஒன்றை சட்டையில் அணிந்து வந்தனர். கடந்த சில கூட்டத்தொடர்களில் அதிமுகவினர் அணிந்து வந்த பேட்ஜ்கள் அனைவராலும் பேசப்பட்ட நிலையில் இன்று ‘கிட்னிகள் ஜாக்கிரதை’ என்ற பேட்ஜ் அணிந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி, நாமக்கல் போன்ற மாவட்டங்களில் கிட்னி திருட்டு…

Read More

அரசனை காணத்தவறாதீர்கள்! – பிரபல நடிகரின் ட்வீட்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

பிரபல நடிகர் சிலம்பரசன் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘அரசன்’. இந்த திரைப்படத்தை வெற்றி மாறன் இயக்கி வருகிறார். ‘வடசென்னை’ திரைப்படத்தின் முன்பகுதியாக இது இருக்கும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலாக எதிர்ப்பார்த்து காத்திருக்கும் நிலையில், திரைப்படத்தின் தியேட்டர் வடிவ முன்னோட்டத்தை (Theatrical Promo) பின்னணி இசையுடன் பார்த்ததாகவும் கண்டிப்பாக அனைவரும் தியேட்டரில் பார்க்க வேண்டும் எனவும் அந்த அனுபவத்தை தவற விடாதீர்கள் எனவும் நடிகர் சிலம்பரசன் ‘X’ வலைதளத்தில் பதிவு செய்ததால் ரசிகர்கள் மகிழ்சசியடைந்துள்ளனர். இந்த…

Read More

பிரபல நடிகரும் நடிகையும் திருவண்ணாமலையில் சாமி தரிசனம்!

தீபாவளிக்கு தனது டீசல் திரைப்படம் வெளியாவதில் மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார். ரசிகர்களுக்கு இந்தப் படம் விருந்து படைக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் பட்டி தொட்டியெங்கும் பேசப்பட்ட ‘லப்பர் பந்து’ திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் கதாப்பாத்திரம் அனைவரையும் கவரும் வகையில் இருந்தது. இந்த நிலையில் அவரது புதிய திரைப்படமான ‘டீசல்’ தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு நடிகர் ஹரிஷ் கல்யாண், நடிகை அதுல்யா ரவி, இயக்குனர் சண்முக முத்துசாமி ஆகியோர் திருவண்ணாமலை…

Read More

குன்னூர்-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் பாறை விழுந்து விபத்து!

நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு விடிய, விடிய இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து, பல பகுதிகளில் அவதி உண்டாக்கியது. வானிலை ஆய்வு மையம் முன்னதாகவே மாவட்டத்தில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை வழங்கியுள்ளது. கோவையிலிருந்து மானந்தவாடி நோக்கி சென்று கொண்டிருந்த கேரளா அரசு பேருந்து குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் குரும்பாடி பகுதியில் பாறை விழுந்ததில் முன்பகுதி சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக, பேருந்தில் இருந்த 48 பயணிகள் யாரும் காயமின்றி உயிர் தப்பினர். மாற்று பேருந்து மூலம் பயணிகள் பாதுகாப்பாக…

Read More

மின் கம்பத்திற்கு பதிலாக மரக் குச்சிகள்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தில்லைநகர் பகுதியில், மின்வாரியத்தின் அலட்சியமான நடவடிக்கை ஒன்று பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சின்னசேலம் துணை மின் நிலையத்தின் கீழ்பட்ட அந்தப் பகுதியில் உயர் மின் அழுத்த கம்பிகள் செல்கின்றன. இந்நிலையில், புதிய மின் கம்பம் அமைப்பதற்கு பதிலாக மின்துறை ஊழியர்கள் மரக் குச்சிகளை வைத்து மின் கம்பங்களுக்கு முட்டுக் கொடுத்து இணைத்துள்ளனர். உலகமே டிஜிட்டல் யுகமாக மாறிக் கொண்டிருக்கும்போது, இவ்வாறு மரக் குச்சிகளை மின் கம்பங்களுக்கு மாற்றாக பயன்படுத்தியிருப்பது அப்பகுதி மக்களிடையே…

Read More

மயிலாடுதுறை அருகே அரசு பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்!

மயிலாடுதுறை அருகே அரசு பேருந்தில் படியில் பயணம் செய்த மாணவர்களை மேலே வருமாறு கேட்டுக்கொண்டதால், நடத்துனர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறையிலிருந்து திருச்சிற்றம்பலம் நோக்கி செல்லும் 1C எண் அரசு பேருந்து மாலை 6.10 மணியளவில் புறப்பட்டது. இதில் நடராஜபுரத்தைச் சேர்ந்த முனியப்பன் (46) கண்டக்டராக பணியாற்றி வந்தார். பேருந்து சென்று கொண்டிருக்கும்போது படியில் நின்ற மாணவர்களை மேலே ஏறச் சொன்ன முனியப்பனின் பேச்சைக் கேட்காமல் மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர்,…

Read More

கோத்தகிரியில் மின்கம்பியில் சிக்கி கரடி உயிரிழப்பு!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழையால் மின் கம்பி அறுந்து விழுந்தது. அதில் சிக்கிய 6 வயது மதிக்கத்தக்க ஆண் கரடி பரிதாபமாக உயிரிழந்தது. சமீப காலமாக கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கரடிகள் உணவு, தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் அடிக்கடி நுழைந்து வருகின்றன. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு கோத்தகிரி – அல்லமலை கிராமம் செல்லும் நடைபாதையில் மின் கம்பி ஒன்று அறுந்து விழுந்தது. இன்று…

Read More

தமிழ்நாட்டில் தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை!

தமிழ்நாட்டில் நாளை வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சில பகுதிகளில் அடிக்கடி மற்றும் இடியுடன் கூடிய மழை நடைபெறலாம் என காத்திருக்கும் வானிலை நிலவரம் எச்சரிக்கிறது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், கடலோர பகுதிகளில் வலுவான காற்று காரணமாக சேதம் ஏற்படக்கூடும் என்பதைக் கருத்தில் கொள்ளவும் வானிலை அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

Read More

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு கண்டனம்!

டாஸ்மாக் முறைகேடு புகார் வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கடுமையான கேள்விகள் எழுப்பியது. நீதிமன்றம், சந்தேகம் இருந்தாலே எந்த அரசு நிறுவனத்திலும் நுழைந்து ஆவணங்களை எடுத்துச் செல்லலாமா என  கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாடு அரசு வழக்கில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றது எனக் கூறி அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம், அரசு அலுவலகத்தில் சோதனை நடத்துவது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராகவா? என்று கேள்வி எழுப்பியது. அமலாக்கத்துறை வாதம், விசாரணை அதிகாரி தவறு செய்திருந்தால் தனிப்பட்ட முறையில் அவரை…

Read More

சீர்காழியில் வேல் வடிவ ஆலய கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயிலடி சாலையில், மார்கோனி மந்திராலயா கார்டனில் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ வேல்முருகன் ஆலய கும்பாபிஷேகம் விமர்சியாக நடைபெற்றது. வேல் வடிவில் அமைக்கப்பட்ட ஆலய மண்டலத்தில், புனித நீர் கொண்ட கலசங்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. பின்னர், ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை மற்றும் ஸ்ரீ வேல்முருகன் சுவாமிக்கு மாப்பொடி, மஞ்சள் பொடி, திரவிய பொடி, பால், சந்தனம், பஞ்சாமிர்தம் போன்ற பொருட்களை கொண்டு சிறப்பு…

Read More

விற்பனைக்கு வைத்த 5 கிலோ கஞ்சா – மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த நபர் கைது!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ரயில் நிலையம் அருகே வாகன நிறுத்தம் பகுதியில் விற்பனைக்கு வைத்து இருந்த 5 கிலோ கஞ்சா மீதான நடவடிக்கையில், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மதியார் ரஹ்மான் மொல்லா (26) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பரிந்துரையின் அடிப்படையில், கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் குற்றவாளி மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்நிலையில், கஞ்சா வழக்கு குற்றவாளி மதியார்…

Read More

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட 21 வயது வாலிபர்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 16 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்த குற்றச்சாட்டில் 21 வயது கவியரசன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பரிந்துரையின் அடிப்படையில், கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் குற்றவாளியை “பாலியல் குற்றவாளி” என கருதி, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்….

Read More

அன்புமணி ஆதரவு பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் தர்ணா போராட்டம்!

அன்புமணி ஆதரவு பாமக சட்டமன்ற உறுப்பினர்கள், ஜி.கே. மணி பாமக சட்டமன்ற உறுப்பினர் குழு தலைவராக இருந்து வரும் பொறுப்பிலிருந்து நீக்கப்படுமாறு கோரி சட்டமன்ற பேரவை வளாகத்தில் தர்ணா போராட்டம் மேற்கொண்டனர். போராட்டத்தில் வெங்கடேஸ்வரன், சிவகுமார், சதாசிவம் ஆகியோர் பங்கேற்றனர். அவர்கள் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரனை பாமக சட்டமன்ற உறுப்பினர் குழு தலைவராக, மற்றும் மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவகுமாரை பாமக கொரடா’வாக நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். போராட்டத்திற்குப் பிறகு வெங்கடேஸ்வரன் செய்தியாளர்களை…

Read More

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருந்து நிறுவனங்களிலும் ஆய்வு செய்ய அரசு உத்தரவு!

இருமல் மருந்து குடித்து 25 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருந்து தயாரிப்பு நிறுவனங்களிலும் விரிவான ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் மருந்து உற்பத்தி நிறுவனங்களின் தரம், உற்பத்தி முறை, பாதுகாப்பு நடைமுறைகள் ஆகியவை குறித்து துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட வழக்கில், மருந்து தயாரித்த ஸ்ரீசன் நிறுவனம் தயாரிப்பு உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் செயல்பாடு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது….

Read More

தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் – பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பிரச்சாரம் தொடக்கம்

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக  அரசியல் கட்சிகள் மக்கள் சந்திப்பு மற்றும் பிரச்சாரப் பயணங்களை தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற முழக்கத்துடன் மதுரையில் பிரச்சாரப் பயணத்தை  தொடங்கினார். மதுரை அண்ணா நகர் அம்பிகா தியேட்டர் அருகே நடைபெற்றது . தொடக்கவிழாவில் மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், எல். முருகன், எம்எல்ஏ வானதி சீனிவாசன், மற்றும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள்…

Read More

கோவை மாவட்டம் வால்பாறையில் யானை தாக்கி பாட்டி, பேத்தி உயிரிழப்பு!

வால்பாறை அருகே யானை தாக்கியதில் பாட்டியும் பேத்தியும் பரிதாபமாக உயிரிழந்தனர். வால்பாறை அடுத்துள்ள ஊமையாண்டி முடக்கு எஸ்டேட் பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் காட்டு யானை குடியிருப்பு பகுதியில் புகுந்தது. அப்போது தோட்டத் தொழிலாளி அசலா என்பவரின் வீடு யானையால் இடிக்கப்பட்டது. வீடு இடிக்கும் சத்தத்தை கேட்டு அசலா தனது ஆறு வயது பேத்தி ஹேமா ஸ்ரீயை தூக்கிக் கொண்டு வெளியேற முயன்றார். அப்போது காட்டு யானை இருவரையும் தூக்கி வீசி காலால் மிதித்தது. இதில்…

Read More

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

கரூர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் இன்று (திங்கள்) உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி, கரூரில் த.வெ.க தலைவர் விஜய் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர்…

Read More

கிருஷ்ணகிரி தனியார் பள்ளி நிகழ்ச்சியில் இந்திய அணி கிரிக்கெட் வீரர்  நடராஜன்

கிருஷ்ணகிரியில் அமைந்துள்ள நாளந்தா இண்டர்நேஷனல் பள்ளியில் 2025-26ம் ஆண்டிற்கான மாநில அளவிலான பள்ளி விளையாட்டு போட்டிகள் இன்று தொடங்கியது. இந்த விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளியின் பிக்கிள் பால் மைதானத்தில் போட்டிகளை துவக்கினார். நடராஜன், மாணவர்களிடம் பேசிய பேச்சில், தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து, தேர்ந்தெடுக்கும் துறையில் மனமார்ந்த பற்று மிக முக்கியம் என தெரிவித்தார். “நான் இதுவரை நான்கு அறுவை சிகிச்சைகளை சந்தித்துவிட்டேன். இருப்பினும்,…

Read More

கல்லூரியில் பேராசிரியரை தாக்கிய 5 மாணவர்கள் கைது 

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியில் உள்ள ஸ்காட் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் ஐந்து மாணவர்கள், ஒரு பேராசிரியரை தாக்கியதால் போலீசார் அவர்களை கைது செய்தனர். கல்லூரியில் கல்விச் சுற்றுலா நிகழ்வில், மாணவிகள் ஒருவர் பேராசிரியர் தவறாக நடந்து கொண்டதாக புகார் அளித்தார். இதனை தொடர்ந்து மாணவர்கள், கல்லூரி நிர்வாகம் செயல்படுவதாக கூறி, உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அதன்பின் சேக் முகமது மைதீன், வசந்த் ஸ்ரீதரன், சுஜின், முத்துராஜ் உள்ளிட்ட ஐந்து பேர் கல்லூரிக்குள் புகுந்து…

Read More

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை…

சாதியை சட்டம் மூலம் ஒழிக்க முயற்சி வேண்டாம்; சமூகநீதி வழியே சமத்துவத்தை உருவாக்க நடவடிக்கை எடுங்கள். பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் சமூகநீதியை முன்னிறுத்தாமல் சாதி ஒழிப்பு ஏற்பட முடியாது என கோரிக்கை விடுத்துள்ளார். கொள்கை அறிவிப்புகளாக அல்லது தெரு பெயர்கள் மாற்றம் போன்ற நாடகமாதிரியாகக் காரியங்கள் நடத்துவதை அவர் கண்டித்தார்; சாதியை நீக்குவதற்கு உண்மையான தீர்வு சமத்துவம் உருவாக்கும் நீடிக்கமான செயல்திட்டங்கள் என்று தெரிவித்துள்ளார். பிற்படுத்தப்பட்டவர்களின் நிலையை உயர்த்தும் விதத்தில் சாதிவாரி மக்கள் தொகை…

Read More