வில்லியனூரில் JCM மக்கள் மன்ற அலுவலகத்தை திறந்து வைத்த சமூக சேவகர் சார்லஸ் மார்டின்
புதுச்சேரி:வில்லியனூர் பகுதியில் JCM மக்கள் மன்ற அலுவலகம் திறப்பு விழா இன்று சமூக சேவகர் சார்லஸ் மார்டின் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. வில்லியனூர் புறவழிச்சாலையில் சமூக சேவகர் சார்லஸ் மார்டினை வரவேற்க மக்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். பின்னர், வில்லியனூர் JCM மக்கள் மன்ற தலைவர் பூக்கடை ரமேஷ் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களில் பேரணியாக இணைந்து, சார்லஸ் மார்டினை மக்கள் மன்ற அலுவலகத்திற்குக் கொண்டுசென்றனர். அதன் பிறகு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சமூக…

