நாட்டை மேம்படுத்த அம்பேத்கரின் கொள்கை பாதைகள் மேலும் ஒளிர செய்யும் – பிரதமர் நரேந்திர மோடி
சட்ட மேதை, சமூக சீர்திருத்தவாதி, இந்திய அரசியலமைப்பின் முதன்மை வடிவமைப்பாளர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு நகரங்கள், ஊர்களில் உள்ள அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வுகள் நடைபெற்றன. அரசியல், சமூக மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகள் பலரும் நினைவஞ்சலி சமர்ப்பித்தனர்.
இந்நிலையில், அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் (X) சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
“மகா பரிநிர்வாண தினமான இன்று டாக்டர் அம்பேத்கரை நினைவு கூறுகிறோம். அவரின் தொலைநோக்கு தலைமைத்துவம், நீதி மற்றும் சமத்துவத்திற்கு அவர் காட்டிய அர்ப்பணிப்பு, அரசியலமைப்பின் மீது வைத்த உறுதியான நிலைப்பாடு ஆகியவை எங்கள் தேசியப் பயணத்துக்கு எப்போதும் வழிகாட்டுகின்றன. நாட்டை முன்னேற்றுவதில் அம்பேத்கரின் கொள்கை பாதைகள் மேலும் ஒளிரட்டும்.”
இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அம்பேத்கர் பங்களிப்புகளை நினைவு கூரும் நிகழ்வுகள் நாள் முழுவதும் தொடரும் என கூறப்படுகிறது.

