பகிரங்க மன்னிப்பு கேட்ட ரவிமோகன்.
நீதிமன்ற உத்தரவை மீறி ஊடங்களில் பேசியதற்கு ரவிமோகன் மன்னிப்பு கேட்டுள்ளார். விவாகரத்து வழக்குத் தொடர்பாக ரவிமோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இருவரும் ஒருவருக்கொருவர் ஊடங்கங்களிலோ அல்லது பொதுவெளியிலோ எந்த விதமான கருத்துகளையும் தெரிவிக்கக் கூடாது என கடந்த ஆண்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில்,பாடகி கெனிஷா மற்றும் ரவிமோகன் தொடர்பான பல சர்ச்சைகள் வெளிவந்தன.இதனால் கெனிஷா ரவிமோகனை விட்டு பிரிவதாக தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து மே 16ம் தேதி பத்திரிக்கையாளர்களை சந்தித்த ரவிமோகன் “என் குழந்தைகளை பார்க்க விடவில்லை,என்னை புரிந்துகொண்டு வந்த பெண்ணையும் துரத்தி விட்டார்கள்” என அவர் கூறி இருந்தார்.
நீதிமன்றம் இட்ட உத்தரவை மீறி ரவிமோகன் பேசியதாக அவரது மனைவி ஆர்த்தி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இம்மனு விசாரணையின்போது ரவிமோகன் நீதிமன்ற உத்தரவை மீறி தான் ஊடங்கங்களில் பேசியதற்காக மன்னிப்புக் கூறி பொது அறிவிப்பை வெளியிட்டிருந்தார். நீதிமன்ற உத்தரவை மீறி ஊடங்கங்களில் பேசியதற்கு மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.
இதன்மூலம் மனவேதனை அடைந்த அல்லது பாதிப்படைந்த அனைவரிடமும் என் வருத்தத்தையும் மன்னிப்பையும் தெரிவித்துக்கொள்கிறேன் எனக் கூறி இருந்தார்.
இதனைத்தொடர்ந்து,ஆர்த்தி தாக்கல் செய்த இம்மனுவானது உயர்நீதிமன்றத்தால் முடித்துவைக்கப்பட்டது.

