இயக்குனர் ஷங்கரின் ‘லவ்வர் பாய்’ மகன்
ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்.
‘லவ்வர் பாய்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் அர்ஜித் ஷங்கருக்கு, கிருத்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் ஷங்கர்.
ஏற்கெனவே இவரது வீட்டில் இருந்து ஒரு நாயகியாக அதிதி ஷங்கர் சினிமாவில் நடித்து வருகிறார்.
இயக்குநர் அட்லியின் முன்னாள் உதவி இயக்குநரான அசோக், இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
சுதன் சுந்தரத்தின் பேஷன் ஸ்டுடியோஸ், வெங்கட் கே நாராயணாவின் கேவிஎன் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.

