IPL விளையாட்டில் தொடருவாரா கோலி?

சர்வதேச டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், ஐபிஎல்லிலும் விராட் கோலி எப்போது ஓய்வு பெறுவார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.

இதுகுறித்து பேசிய Royal Challengers Bengaluru அணியின் சிஇஓ ராஜேஷ் மேனன், “ஆர்சிபி மற்றும் விராட் கோலி இருவரும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவர்கள். தொடக்க காலம் முதலே அணியின் முக்கியத் தூணாக அவர் இருந்து வருகிறார்.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் ஆர்சிபியுடன் அவரது பங்களிப்பு தொடரும். அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளுக்கு அவர் நிச்சயமாக விளையாடுவார் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. தற்போது அவர் முழு உடற்தகுதியுடன் உள்ளார். ரன்கள் குவிக்கும் அவரது பசி இன்னும் குறையவில்லை.

இந்த ஐபிஎல் தொடரில் அவரது ஆற்றல், ரன்கள் குவித்த விதம் மற்றும் ஆட்டத்தின் மீதான அர்ப்பணிப்பு ஆகியவை இதற்கு சான்றாக உள்ளன. எனவே, அடுத்த சில ஆண்டுகள் ஐபிஎல்லில் தொடர்ந்து விளையாடுவதில் அவருக்கு எந்த சிக்கலும் இருக்காது” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *