தமிழ்த் திரையுலகுக்கு மீண்டும் இழப்பு! | இரா.செழியன் காலமானார்
உடல்நலக்குறைவு காரணமாக தரமணியில் உள்ள தனியார் கேன்சர் மருத்துவமனையில் இரா.செழியன் சிகிச்சை பெற்று வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
இயக்குநர் பாலாவின் பரதேசி படத்துக்காக 2013-ஆம் ஆண்டு லண்டன் திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதைப் பெற்றார்.
இவர் இயக்கிய டூலெட் (TOLET) திரைப்படம், 2018-ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
திரைப்பட ஆர்வலர்களிடையே வரவேற்பைப் பெற்ற ‘உலக சினிமா’ என்ற நூலையும் எழுதியுள்ளார்.
பி.சி.ஸ்ரீராமிடம் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்.
ஒளிப்பதிவாளர், எழுத்தாளர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை பெற்றவர் இரா.செழியன்….


