பலத்த எதிர்பார்ப்புடன் வெளியாகவிருக்கும் ‘மண்டாடி’
பலத்த எதிர்பார்ப்புடன் வெளியாகவிருக்கும் ‘மண்டாடி’
சூரி, சுஹாஸ் நடிப்பில் இதில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார்.சத்யராஜ், ரவீந்திரா விஜய், மிதுன், பாலசரவணன் உள்ளிட்டோரும் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும், விரிவான மற்றும் சவாலான படப்பிடிப்பைத் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நிறைவுசெய்து, படத்தின் Post-Production பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படம் கடலோர மக்களின் வாழ்க்கை முறை, பாரம்பரியம், உணர்வுகள் மற்றும் அவர்களின் மன உறுதியை மையமாகக் கொண்ட சக்திவாய்ந்த ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் டிராமா படமாக உருவாகியுள்ளது.
கடலின் பிரமாண்டமான பின்னணியிலும், படகுப் பந்தய உலகத்தையும் கருப்பொருட்களாக கொண்டுள்ளது.
மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் எழுந்துள்ள இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை இன்று அறிவித்துள்ளனர்.
‘மண்டாடி’ 2026 செப்டம்பர் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. படத்தின் ட்ரெய்லர், இசை வெளியீட்டு விழா மற்றும் விளம்பர நிகழ்ச்சிகள் குறித்த மேலும் பல முக்கிய அறிவிப்புகள் வரவிருக்கும் வாரங்களில் வெளியிடப்பட உள்ளது.

