முதலமைச்சர் விஜய்யை சந்திக்க நடைபயணம் ….
கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ரபி மற்றும் அவரது மனைவி சஹானா ஆகிய இருவரும் முதலமைச்சர் விஜய்யை சந்திப்பதற்காக 34 -வது நாளாக நடைபயணம் மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சர் விஜயின் தீவிர ரசிகர்களான இவர்கள் அவரை எப்படியாவது நேரில் சந்திக்க வேண்டுமென்று கேரளாவில் இருந்து நடந்து வந்து விஜய்யை பார்க்க முடிவு செய்தனர். அவர்கள் நடந்து வருவதை தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். கழுத்தில் முதல்-அமைச்சர் விஜய் படமும் வெயிலுக்கு தவெக கொடி நிறத்தில் ஒரு கொடையையும் இவர்கள் கொண்டு செல்வது காணும் மக்களை கவரக்கூடிய வகையில் உள்ளது
விஜய் முதல்-அமைச்சரான பின் கேரளத்தில் இருந்து அவரை பார்க்க சென்னை வரை நடந்தே செல்ல முடிவெடுத்துள்ள இவர்கள் சுமார் 500 கிலோமீட்டரை 34 நாட்களாக சென்னையை நோக்கி நடைபயணமாக வருகின்றனர். இன்னும் ஒரு சில நாட்களில் முதல் அமைச்சரை நேரில் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.

